பொட்டிமகன் முதல் - பொதிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொட்டிமகன் வேசிமகன் ; கெட்டிக்காரன் .
பொட்டில் திருவிழா முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யும் கருவிவகை .
பொட்டில்சுடுதல் கைத்துப்பாக்கியால் சுடுதல் .
பொட்டிலி காண்க : பொட்டில் .
பொட்டிலுப்பு வெடியுப்பு .
பொட்டு நெற்றியிலிடும் பொட்டு ; பொன்னாற் செய்த ஒரு தாலிவகை ; ஓர் அணிவகை ; கன்னத்தின் மேற்பொருத்து ; புல்லிது ; வட்டவடிவான குறி ; துளி ; புழு ; பூச்சிவகை ; பொட்டுப்பூச்சி ; பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு ; நுழைவழி ; தானியங்களின் தோலோடுகூடிய துகள் ; பொடி ; பொடுகு .
பொட்டுக்கட்டுதல் கோயிலுக்கு உரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டும் சடங்கு .
பொட்டுக்கம்பு கம்புவகை .
பொட்டுக்காறை மகளிர் கழுத்தணிவகை .
பொட்டுக்குத்துதல் பச்சைக்குத்துதல் .
பொட்டுத்தாலி பொட்டு வடிவான மங்கல நாண் .
பொட்டுப்பொட்டெனல் ஒலிக்குறிப்புவகை .
பொட்டுப்பொடி சிறுபண்டம் .
பொட்டெழுதல் அழிவுறுதல் .
பொட்டெனல் விரைவுக்குறிப்பு .
பொட்டை குருடு : கண்ணொளி மழுக்கம் ; சூதாடுவோர் குழூஉக்குறி ; விலங்கு , பறவை இவற்றின் பெண்பால் ; பெண் .
பொட்டைக்கண் குருட்டுவிழி .
பொட்டைச்சி பெண் .
பொட்டையன் குருடன் ; பெண்வழிச் செல்லும் கணவன் .
பொடி புழுதி ; தூள் ; மூக்குத்தூள் ; சாக்குப்பொடி ; உலோகங்களைப் பற்றவைக்கும் பொடி ; சாம்பல் ; திருநீறு ; சிறிய துண்டு ; சிறியது ; சிறிய இரத்தினம் ; சிறுபிள்ளை .
பொடி (வி) புழுதியாக்கு ; பொடிசெய் .
பொடிச்சல்லி கட்டட வேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கல் சிறுதுண்டு .
பொடிச்சிலை மஞ்சள்நிறக் கல்வகை .
பொடிசு சிறியது ; சிறுமி .
பொடித்தரை பொடி மிகுதியான பூமி .
பொடித்தல் துகளாக்குதல் ; கெடுத்தல் ; தோற்றுவித்தல் ; அரும்புதல் ; தோன்றுதல் ; விளங்குதல் ; வியர்வை அரும்புதல் ; புளகித்தல் ; பொடியாதல் .
பொடிதல் தூளாதல் ; கெடுதல் ; தீய்தல் ; ஒளி மங்குதல் ; சினங்கொள்ளுதல் ; கண்டித்தல் ; வெறுத்தல் .
பொடிதூவுதல் மரக்கறியில் மாப்பொடி கலத்தல் ; ஏமாற்றுதல் .
பொடிப்பு புளகம் ; காண்க : பொடுகு .
பொடிப்போடுதல் மூக்குள் புகையிலைத் தூளிடுதல் ; மாயப்பொடியிடுதல் .
பொடிபடுதல் உடைபடுதல் .
பொடிபண்ணுதல் தூளாக்குதல் ; துண்டித்தல் .
பொடிபொட்டு சிறியது ; பதரானது .
பொடியல் இரும்பில் துளைபோடுங் கம்மக்கருவி .
பொடியன் சிறுவன் ; புல்லன் ; அற்பன் .
பொடியாடி சிவபிரான் .
பொடியாணி சிற்றாணி .
பொடியாதல் அழிதல் .
பொடியிழைப்புளி இழைப்புளிவகை .
பொடியீர் இடுக்கிவகை .
பொடிவு சிதைவு ; வசவு .
பொடிவெட்டி பொன் , வெள்ளி முதலியன வெட்டுங் கத்தரிக்கோல்வகை .
பொடிவைத்தல் உலோகங்களைப் பற்றவைத்தல் ; தந்திரமாய்ப் பேசுதல் ; கோட்சொல்லுதல் .
பொடுகன் சிற்றுருவமுள்ளவன் .
பொடுகு தலைச்சுண்டு ; சிறுமை ; பூடுவகை .
பொடுதலை ஒரு பூடுவகை .
பொடுதிலை ஒரு பூடுவகை .
பொடுபொடுத்தல் வெடித்தல் ; துளித்தல் ; குறைதல் ; விரைவாய்ப் பேசுதல் ; வயிறிரைதல் ; கல் முதலியன ஒலியுடன் விழுதல் ; சினங்கொள்ளுதல் .
பொடுபொடெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு .
பொண்டுதல் கெட்டுப்போதல் .
பொத்தகம் மயிலிறகு ; புத்தகம் ; சித்திரப்படாம் ; நிலக்கணக்கு .
பொத்தம்பொது பொது .
பொத்தல் துளை ; துளைத்தல் ; மூடுதல் ; கடன் ; குற்றம் ; போத்தல் .
பொத்தலடைத்தல் சுவர் , கூரை முதலியவற்றிலுள்ள துளையையடைத்தல் ; கடன் தீர்த்தல் ; குற்றத்தை மறைத்தல் .
பொத்தாறு ஏர்க்கால் .
பொத்தாறுக்கட்டை ஏர்க்கால் .
பொத்தி நார்மடி ; சீலை ; மடல்விரியா வாழைப்பூ ; சோளக்கதிர் ; தானியக்கதிர் ; மணிவகை ; தோலுரியாத பனங்கிழங்கு ; அண்டம் ; ஒரு பழைய சோழநகர் ; வரால் ; பொது .
பொத்திக்கரப்பான் கரப்பான்வகை .
பொத்தித்தேவாத்தி நார்மடி .
பொத்திதள்ளுதல் வாழை முதலியன குலைபோடுதல் .
பொத்திரம் எறியாயுதம் .
பொத்திலம் மரப்பொந்து .
பொத்துவைத்தல் மறைத்தல் ; பத்திரப்படுத்துதல் .
பொத்து மூடுகை ; அடைப்பு ; பொத்தல் ; பொந்து ; வயிறு ; தவறு ; தீயொழுக்கம் ; பொய் ; கெவுளி .
பொத்துதல் புதைத்தல் ; வாய் , கண் முதலியவற்றை மூடுதல் ; விரலை மடக்கி மூடுதல் ; உள்ளங்கையை தைத்து மூடுதல் ; மூட்டுதல் ; தைத்தல் ; மறைத்தல் ; அடித்தல் ; தீமூட்டல் ; மாலைகட்டுதல் ; கற்பனைசெய்தல் ; கலத்தல் ; நிறைதல் .
பொத்துப்படுதல் தவறுதல் ; செயல் கைகூடாது தீமை பயத்தல் .
பொத்துப்பொத்தெனல் ஒலிக்குறிப்புவகை ; தடித்திருத்தற்குறிப்பு .
பொத்துமான் ஒரு மான்வகை .
பொத்தெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
பொத்தை துளை ; பருமையானது ; சிறுமலை ; சிறுதூறு ; கற்பாறை ; மலை ; கரிகாடு ; காடு ; உடம்பு ; கடன் ; குற்றம் ; மீன்வகை .
பொத்தைக்கால் யானைக்கால் .
பொத்தையன் தடித்தவன் .
பொதி மூட்டை ; நிறைவு ; பலபண்டம் ; நிதி ; சொற்பயன் ; ஒரு நிறையளவுவகை ; நீர்மப்பொருள் அளவுவகை ; நிலவளவுவகை ; பிணிப்பு ; கட்டுச்சோறு ; தொகுதி ; அரும்பு ; கொத்து ; மூளை ; உடல் ; தவிடு ; கரிகாடு ; மூங்கில் முதலியவற்றின் பட்டை ; குடையோலை ; பசு முதலியவற்றின் மடி ; பருமன் ; ஓலைக்குடை ; அம்பலம் ; பொதியமலை ; காய்ந்த நன்செய் .
பொதிகாரன் பொதிமாடு செலுத்துவோன் .
பொதிகை பொதியமலை .