சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பொதிசோறு | கட்டுச்சோறு . |
பொதிதல் | நிறைதல் ; சேமித்தல் ; உள்ளடக்குதல் ; மறைத்தல் ; பிணித்தல் ; கடைப்பிடித்தல் . |
பொதிந்துவைத்தல் | இடைவிடாது மனத்துட் கொள்ளுதல் . |
பொதிப்போதா | பெருநாரை . |
பொதிமாடு | மூட்டை சுமக்கும் எருது . |
பொதியப்பொருப்பன் | காண்க : பொதியவெற்பன் . |
பொதியம் | பாண்டிய நாட்டில் உள்ளதும் அகத்தியரின் இருப்பிடமுமான பொதிய மலை . |
பொதியவிழ்த்தல் | தன் வரலாறு விரித்தல் ; பண்டப் பொதியைப் பிரித்தல் . |
பொதியவிழ்தல் | அரும்பு முறுக்கவிழ்தல் . |
பொதியவெற்பன் | பொதியமலைக்குரிய பாண்டியன் . |
பொதியறுத்தல் | பணத்தைக் கவர்தல் . |
பொதியறை | காற்றோட்டமில்லாத கீழறை . |
பொதியன் | பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் . |
பொதியில் | அம்பலம் ; பொதியமலை . |
பொதியெருது | மூட்டை சுமக்கும் எருது . |
பொதிர் | நடுக்கம் . |
பொதிர்த்தல் | குத்துதல் ; முரித்தல் ; பருத்தல் . |
பொதிர்தல் | வீங்குதல் ; மிகுதல் ; நடுங்குதல் ; அஞ்சுதல் . |
பொதிர்ப்பு | நடுக்கம் ; அச்சம் . |
பொதிர்வு | நடுக்கம் ; அச்சம் . |
பொதிரெறிதல் | நடுங்குதல் . |
பொதிவு | பொதியாகக் கட்டுகை ; ஒற்றுமை . |
பொதிவைத்தல் | புதையல் வைத்தல் . |
பொது | பொதுமையானது ; சிறப்பின்மை ; சாதாரணம் ; வழக்கமானது ; நடுவுநிலை ; ஒப்பு ; குறிப்பான பொருளின்மை ; வெளிப்படையானது ; சபை ; தில்லையம்பலம் . |
பொதுக்காரியம் | சமூகநலத்துக்குற்ற செயல் . |
பொதுக்கு | விலக்கு ; மறைப்பு ; ஒதுக்கு . |
பொதுக்குணம் | காண்க : பொதுத்தன்மை . |
பொதுக்குதல் | விலக்குதல் ; மறைத்தல் ; கவர்தல் ; புகையிற் பழுக்கவைத்தல் . |
பொதுக்கை | பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை . |
பொதுங்குதல் | வருந்துதல் . |
பொதுச்செலவு | பொதுப் பணத்திலிருந்து ஊரார் பொதுச் செயலுக்குச் செலவிடுந்தொகை ; களத்தில் நிலக்கிழார் காவல் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம் . |
பொதுச்சொல் | இருதிணைகட்கும் பொதுவாயிருக்குஞ் சொல் ; எல்லோரும் அறிந்த சொல் ; உலகம் பலர்க்கும் பொது என்னும் மொழி ; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல் . |
பொதுத்தல் | முள்பாய்தல் ; துளைத்தல் . |
பொதுத்தன்மை | நடுவுநிலைமை ; பெரும்பாலும் காணப்படும் குணம் ; உவமான உவமேயங்களில் அமைந்துள்ள பொது ஒப்புமை . |
பொதுத்திணை | இருதிணைகட்கும் பொதுச் சொல் . |
பொதுதல் | துளைபடுதல் . |
பொதுநடுவர் | நடுநிலையாளர் ; வழக்குத்தீர்ப்பவர் . |
பொதுநலத்தார் | பொதுமகளிர் . |
பொதுநலம் | காண்க : பொதுநன்மை ; பொருள்கொடுப்பார் பெறுஞ் சிற்றின்பம் . |
பொதுநன்மை | மக்களுக்குச் செய்யும் நன்மை . |
பொதுநிலம் | பலருக்குப் பொதுவான நிலம் ; மக்கள் நன்மைக்காக ஊர்ப்பொதுவுக்கு விடப்பட்ட நிலம் . |
பொதுநிறம் | மாநிறம் . |
பொதுநீக்குதல் | பொதுமையை விடுத்தல் ; தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுதல் . |
பொதுநீங்குவமை | காண்க : இயைபின்மையணி . |
பொதுநெறி | யாவரும் செல்லும் வழி . |
பொதுநோக்கு | சமநோக்கு ; எல்லோரையும் ஒப்பநோக்குகை ; விருப்புவெறுப்பற்ற பார்வை ; இயற்கையாக அமைந்த அறிவு . |
பொதுப்படுதல் | பொதுவாதல் ; ஒப்பாதல் . |
பொதுப்பண் | இரவும் பகலும் பாடற்குரிய பண் . |
பொதுப்பெண் | காண்க : பொதுமடந்தை . |
பொதுப்பெண்டு | காண்க : பொதுமடந்தை . |
பொதுப்பெயர் | பல பொருட்குப் பொதுவாகிய பெயர் ; இருதிணைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும் பெயர் . |
பொதுப்பேச்சு | பொதுப்படையான சொல் ; கவர்பொருள் உள்ள மொழி . |
பொதுபொதெனல் | வரவர மிகுதியாதற்குறிப்பு ; ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு ; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு . |
பொதும்பர் | மரம் செறிந்த இடம் ; இளமரச் சோலை ; சோலை . |
பொதும்பு | சோலை ; குறுங்காடு ; மரப்பொந்து ; குழி ; குகை . |
பொதுமக்கள் | சிறப்பில்லாத மக்கள் , பொது சனங்கள் . |
பொதுமகள் | விலைமகள் ; இடைக்குலப்பெண் . |
பொதுமடந்தை | விலைமகள் . |
பொதுமனிதன் | நடுநிலையாளன் ; விருப்புவெறுப்பற்றவன் . |
பொதுமாது | காண்க : பொதுமடந்தை . |
பொதுமுதல் | கூட்டுவாணிகத்தின் மூலதனம் . |
பொதுமை | பொதுவுடைமை ; சாமானியம் ; நன்மை . |
பொதுமொழி | சிறப்பில்லாத சொல் ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுவான சொல் ; பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் ; பொதுச்சொல் . |
பொதுவசனம் | பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர் ; ஊரில் வழங்கும் பேச்சு ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுப்படையான சொல் . |
பொதுவர் | இடையர் ; பொதுமகளிர் ; நடுவர் . |
பொதுவறிவு | சாதாரண அறிவு . |
பொதுவறுசிறப்பு | தனக்கேயுரிய சிறப்பு . |
பொதுவறுதல் | ஒருவனுக்கே யுரியதாதல் . |
பொதுவனுமானம் | ஒன்று உள்ளது கொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமானவகை . |
பொதுவாக | சிறப்பித்துக் கூறாமல் ; ஒரு சார்பின்றி . |
பொதுவாள் | காண்க : பொதுமனிதன் ; கோயில் விசாரணை செய்யும் மலையாளச் சாதியில் ஒரு பிரிவினர் . |
பொதுவிதி | பொதுவான இலக்கணம் . |
பொதுவியர் | இடைச்சியர் ; உழத்தியர் . |
பொதுவில் | அம்பலம் . |
பொதுவிலேவிடுதல் | ஒரு பொருளை எல்லோருக்கும் பயன்படும்படி நியமித்தல் ; பொருளைப் பாதுகாவாது விடுதல் . |
![]() |
![]() |
![]() |