பொதுவை முதல் - பொய்யுறங்குதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொதுவை காண்க : பொதுமகள் .
பொதுளகரம் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான 'ள' என்னும் எழுத்து .
பொதுளுதல் நெருங்குதல் ; நிறைதல் ; தழைத்தல் .
பொதை புதர்ச்செடி .
பொந்தர் ஒரு நீர்ப்புள்வகை ; பொந்து .
பொந்தி உடல் ; பருமை ; மரவாள் .
பொந்திகை மனநிறைவு , திருத்தி .
பொந்து மரப்பொந்து ; எலிவளை ; பல்லி .
பொந்தை உடல் ; சீலையோட்டை ; மயிர்ச்சிக்கு .
பொம்மல் பொலிவு ; மிகுதி ; பருமன் ; கூட்டம் ; சோறு ; மகிழ்ச்சி ; பிரதிமை .
பொம்மலாட்டம் பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் .
பொம்மலாட்டு பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் .
பொம்மலி பருத்தவள் .
பொம்முதல் பொலிதல் ; மிகுதல் .
பொம்மெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அடர்ச்சிக்குறிப்பு .
பொம்மை பாவை ; கைப்பிடிச்சுவர் .
பொய் மாயை ; போலியானது ; உண்மையல்லாதது ; நிலையாமை ; உட்டுளை ; மரப்பொந்து ; செயற்கையானது ; சிறு சிறாய் .
பொய்க்க பொய்பட ; மெதுவாய் .
பொய்க்கதை கட்டுக்கதை ; கட்டிவிடப்பட்ட செய்தி .
பொய்க்கரி காண்க : பொய்ச்சாட்சி .
பொய்க்கரிமாக்கள் பொய்ச்சாட்சி கூறுபவர் .
பொய்க்கரியாளர் பொய்ச்சாட்சி கூறுபவர் .
பொய்க்கால் போலிக்கால் ; கால்களால் ஏறிச் செலுத்தும் கழி .
பொய்க்குரல் போலிச்சத்தம் .
பொய்க்குழி பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி ; கோலி விளையாட்டில் தனியே விடப்பட்ட குழி ; நாற்று நட்ட குழி .
பொய்க்கூடு உடல் .
பொய்க்கை ஒரு மீன்வகை .
பொய்க்கொண்டை நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை .
பொய்க்கோலம் உண்மை உருவை மறைக்கும் போலிவேடம் ; வஞ்சகம் .
பொய்கை இயற்கையான நீர்நிலை ; நீர்நிலை ; கோட்டான் ; ஒரு நூலாசிரியர் ; பொய்கையாழ்வார் .
பொய்ச்சத்தியம் பொய்யாகச் செய்யும் உறுதிமொழி .
பொய்ச்சாட்சி காண்க : பொய்ச்சான்று ; பொய்ச்சாட்சிக்காரன் .
பொய்ச்சான்று உண்மைக்கு மாறான சான்று .
பொய்ச்சான்றேறுதல் பொய்ச்சாட்சி சொல்லுதல் .
பொய்ச்சீத்தை பொய்யே பேசுங் கீழ்மகன் .
பொய்ச்சு பழத்தின் குற்றம் .
பொய்ச்சுற்றம் அன்பற்ற உறவு .
பொய்ச்சுற்றம்பேசுதல் மனமார அன்றி உறவுமுறை கொள்ளுதல் .
பொய்ச்சூள் பொய்யாணை .
பொய்த்தல் பொய்யாதல் ; தவறுதல் ; பின்வாங்குதல் ; கெடுதல் ; பொய்யாய்ப் பேசுதல் ; வஞ்சித்தல் .
பொய்த்தலை கன்னமிடுவோர் கன்னத்துளை வழியாய் உட்செலுத்தும் போலித் தலை .
பொய்த்தூக்கம் குறையுறக்கம் ; கள்ளத்தூக்கம் .
பொய்தல் பிடுங்கப்படுதல் ; துளைக்கப்படுதல் ; வீழ்த்துதல் .
பொய்ந்நீர் கானல்நீர் .
பொய்ந்நெறி தீயவழி .
பொய்ப்பத்திரம் கள்ளச்சீட்டு .
பொய்ப்பாடு தவறுகை ; பொய்ப்படுகை .
பொய்ப்பு உண்மையற்றது .
பொய்ப்பூ காய் பிடியாது உதிரும் முதற்பூ .
பொய்படுதல் பொய்யாதல் ; பயன் விளையாது அழிந்திடுதல் .
பொய்ம்மணல் புதைமணல் .
பொய்ம்மை பொய் ; மாயம் ; போலி .
பொய்முயக்கம் அன்பிலாக் கூட்டம் .
பொய்மையாளர் பொய்யர் .
பொய்யடி போலியடி ; பொய்யால் பிறரை வஞ்சிக்கை ; அச்சுறுத்துகை .
பொய்யடிமை போலிப்பத்தி .
பொய்யடிமையில்லாத புலவர் சிவபிரானை வழிபடும் சங்கப் புலவர்களான தொகையடியார் .
பொய்யம்பு விளையாட்டம்பு .
பொய்யவியல்செய்தல் புழுக்குதல் .
பொய்யறை பெட்டகத்தின் மறைவறை ; பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்தும் குழி .
பொய்யன் பொய் பேசுவோன் .
பொய்யாடல் வஞ்சகமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு .
பொய்யாணை காண்க : பொய்ச்சத்தியம் .
பொய்யாமை பொய்பேசாமை ; நடுவுநிலைமை .
பொய்யாமொழி என்றும் தவறாத சொல் ; உண்மையுரை ; திருக்குறள் ; வேதாகமம் ; தஞ்சைவாணன்கோவை ஆசிரியர் .
பொய்யாறு காண்க : பொய்ந்நெறி .
பொய்யிகந்தோர் முனிவர் .
பொய்யிடை நுண்ணிய இடை .
பொய்யில்புலவன் மெய்ஞ்ஞானி ; திருவள்ளுவர் .
பொய்யுகம் கலியுகம் .
பொய்யுடல் நிலையற்ற உடல் .
பொய்யுரம் பொய்நின்ற ஞானம் .
பொய்யுறக்கம் பொய்த்தூக்கம் .
பொய்யுறக்கு பொய்த்தூக்கம் .
பொய்யுறங்குதல் உறங்குவதுபோல் நடித்தல் .