பொய்வாழ்வு முதல் - பொருநை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொய்வாழ்வு நிலையற்ற வாழ்க்கை ; போலி ஒழுக்கமுள்ள வாழ்க்கை .
பொரி நெல் முதலியவற்றின் பொரி ; பொரிக்கப்பட்டது ; பொரிக்கறி ; கரிந்த காடு ; எருமைக்கன்று ; நன்றாகச் சமைக்காத சோறு .
பொரிக்கஞ்சி பொரிமாவால் செய்த கஞ்சி .
பொரிக்கறி பொரியல் ; புளியிடாமற் சமைத்த கறிவகை .
பொரிகாரம் வெண்காரம் ; படிக்காரம் .
பொரிச்சகுழம்பு புளியில்லாமல் ஆக்கிய குழம்பு உணவு .
பொரித்தல் பொரியச்செய்தல் ; வறுத்தல் ; கிழங்கு சுடுதல் ; அடைகாத்துக் குஞ்சுண்டாக்குதல் ; போக்குதல் ; தீய்த்தல் ; புளியில்லாமல் சமைத்தல் ; குறைந்த விலைக்கு விற்றல் .
பொரிதல் பொரியாதல் ; வறுபடுதல் ; தீய்தல் ; விரைவாகப் பேசுதல் ; அலப்புதல் ; உப்பு முதலியன தரையில் படிதல் ; பூத்தல் ; மெல்ல ஒலித்தல் ; வாணப்பொறி மிகுந்து சொரிதல் ; பொருக்கு வெடித்தல் .
பொரிபொரியெனல் வசைபொழிதற்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு .
பொரிபோடுதல் திருமணத்தில் வேள்வித் தீயில் நெற்பொரியிடுதல் .
பொரிமலர் புன்கமரம் .
பொரிமா வறுத்த அரிசிமாவு .
பொரியரிசி வறுத்த அரிசி .
பொரியரை பிளவுபட்டுக் கரடுமுரடான மரத்தின் அடிப்பகுதி .
பொரியல் பொரிதல் ; பொரித்த உணவு .
பொரியுருண்டை நெற்பொரியைப் பாகிட்டுத் திரட்டிய உருண்டை .
பொரிவிளங்காய் பொரியரிசிமா அல்லது சிறுபயற்ற மாவோடு சருக்கரை சேர்த்துச் செய்த பணிகாரம் , கெட்டியுருண்டை .
பொரிவு மாணிக்கக் குற்றவகை ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .
பொரு ஒப்பு ; உவமை ; எதிர்த்தடை .
பொருக்க விரைவாக .
பொருக்கு பருக்கை ; காய்ந்த சேற்றேடு ; மரப்பட்டை ; காண்க : பொருக்குமண் .
பொருக்குமண் செதிளாய்ப் பேர்ந்த மண் .
பொருக்கெனல் விரைவுக்குறிப்பு .
பொருகளம் போர்க்களம் .
பொருகு சோறு .
பொருட்குற்றம் பாட்டின் பொருளில் உண்டாம் பிழை .
பொருட்குன்று மேருமலை .
பொருட்கை பாடற்பொருள் பொருந்தக் காட்டும் அபிநயக்கை .
பொருட்சம்பந்தம் பொருளின் இயைபு .
பொருட்சார்பு பொருளிடத்துற்ற அவா .
பொருட்சிதைவு சொத்திழப்பு ; சொல் கால வேறுபாட்டாற் கருத்தில் மாறுகை ; காண்க : பொருட்குற்றம் .
பொருட்சுவை பாட்டின் பொருளால் வரும் இன்பம் .
பொருட்செல்வி திருமகள் .
பொருட்சேதம் சொத்திழப்பு .
பொருட்டன்மை பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை .
பொருட்டால் காண்க : பொருட்டு .
பொருட்டிரிபு ஒரு சொல்லில் அல்லது சொற்றொடரிலுள்ள பொருள் மாறுபாடு .
பொருட்டு காரணம் ; மதிப்பிற்குரியது ; நிமித்தமாக .
பொருட்டொடர்நிலைச் செய்யுள் காப்பியம் .
பொருட்படுத்துதல் மதித்தல் .
பொருட்படுதல் பயன்படுதல் .
பொருட்பிரபஞ்சம் பிருதிவி முதல் நாதம் ஈறாக உள்ள தத்துவங்கள் .
பொருட்பின்வருநிலை முன் வந்த பொருளே பின்னும் பல இடங்களில் வரும் அணி .
பொருட்பெண்டிர் காண்க : பொதுமகள் .
பொருட்பெயர் பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; ஒரு பொருளுக்குரிய பெயர் .
பொருண்மன்னன் குபேரன் .
பொருண்முடிவு கருத்துமுடிவு ; முடிந்த கருத்து ; பயனிலை ; பொருள் முற்றிய வாக்கியம் .
பொருண்மை பொருளின் தன்மை ; கருத்துப் பொருள் .
பொருண்மொழி உபதேசமந்திரம் ; மெய்ச்சொல் .
பொருணயம் நூலின் கருத்துநயம் .
பொருணான்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் .
பொருணி கள் .
பொருணிலை பயனிலை ; பொருளின் தன்மை .
பொருணூல் அகப்பொருள்பற்றிய நூல் ; அர்த்தசாத்திரம் .
பொருத்தம் இணக்கம் ; தகுதி ; பொருந்துகை ; உடன்படிக்கை ; மணமக்களின் சாதக இணக்கம் ; மனநிறைவு ; சரிபார்க்கை .
பொருத்தம்பார்த்தல் மணமக்களின் சாதக இணக்கம் பார்த்தல் .
பொருத்தனை பொருத்துகை .
பொருத்தினை பொருத்துகை .
பொருத்து இணைப்பு ; உடல்மூட்டு ; மரக்கணு ; ஒன்றுசேர்க்கை ; ஒப்பந்தம் ; மரத்தின் இணைப்பு ; கன்னப்பொட்டு .
பொருத்துதல் பொருந்தச்செய்தல் ; உடன்படுத்துதல் ; கூட்டுதல் ; வேலைக்கமர்த்துதல் ; அமையச்செய்தல் ; இரு பொருள்களை இசைத்தல் ; போர்மூட்டுதல் ; விளக்கு முதலியன ஏற்றுதல் .
பொருதல் போர்செய்தல் ; சூதாடுதல் ; மாறுபடுதல் ; வீசுதல் ; தடவுதல் ; ஒப்பாதல் ; தாக்குதல் ; கடைதல் ; முட்டுதல் ; பொருந்துதல் ; காண்க : தும்பை .
பொருதுதல் ஒன்றுதல் ; போர்செய்தல் ; இணைத்தல் .
பொருந்தம் காண்க : பொருநை .
பொருந்தர் நெய்வோர் ; கூடை முதலியன முடைவோர் .
பொருந்தல் பொருந்துதல் ; உடன்படுதல் .
பொருந்தலன் பகைவன் .
பொருந்தவிடுதல் சந்திபண்ணுதல் .
பொருந்தாமை இணக்கமின்மை ; வெறுப்பு .
பொருந்தார் பகைவர் .
பொருந்திவிடுதல் முறிந்த எலும்பு முதலியன கூடுதல் ; ஒப்பந்தமாதல் .
பொருந்துதல் மனம் இசைவாதல் ; தகுதியாதல் ; அமைதல் ; உடன்படுதல் ; நெருங்குதல் ; நிகழ்தல் ; பலித்தல் ; இயலுதல் ; கலத்தல் ; அடைதல் ; அளவளாவுதல் ; புணர்தல் .
பொருந்துமாறு உத்தி , யுத்தி .
பொருநல் காண்க : பொருநை .
பொருநன் படைவீரன் ; திண்ணியன் ; அரசன் ; குறிஞ்சிநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; உவமிக்கப்படுபவன் ; தலைவன் ; ஏர்க்களத்தேனும் போர்களத்தேனும் சென்று பாடும் கூத்தன் ; நடிகன் .
பொருநை தாமிரபரணியாறு ; ஆன்பொருநை ஆறு .