சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பொருநைத்துறைவன் | சேரன் ; பாண்டியன் . |
பொருப்பரையன் | இமயமலை . |
பொருப்பன் | குறிஞ்சிநிலத் தலைவன் ; குறிஞ்சி நில வேடன் ; பொதியமலைக்குரியவனான பாண்டியன் ; இமயமலை ; மலைக்கு உரியவன் . |
பொருப்பு | பக்கமலை . |
பொருப்புவில்லான் | சிவன் . |
பொருப்பெறிந்தான் | கிரவுஞ்சமலையை வேலால் எறிந்த முருகக்கடவுள் . |
பொருபுவி | பாலைநிலம் ; போர்க்களம் . |
பொருபொருத்தல் | அறத் தீய்தல் ; முணுமுணுத்தல் . |
பொருபொருப்பான் | ஒரு மரவகை . |
பொருபொரெனல் | தீய்தற்குறிப்பு ; முணுமுணுத்தற்குறிப்பு . |
பொருமல் | அச்சம் ; துன்பம் ; அழாது விம்முதல் ; பூரிப்பு ; பொறாமை ; வயிறூதும் நோய்வகை . |
பொருமலி | தடித்தவள் . |
பொருமிநாதம் | இரசகருப்பூரம் . |
பொருமுகவெழினி | அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவுதிரை . |
பொருமுதல் | துன்புறுதல் ; விம்மியழுதல் ; உப்புதல் ; பூரித்தல் ; பொறாமைப்படுதல் ; ஈரித்துப் பருத்தல் . |
பொருவ | ஓர் உவமஉருபு . |
பொருவிலி | ஒப்பிலி ; சிவபிரான் . |
பொருவு | ஒப்பு . |
பொருவுசாரம் | பொறாமை . |
பொருவுதல் | ஒத்தல் ; நேர்தல் . |
பொருள் | சொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை . |
பொருள்கோள் | எண்வகையாகச் செய்யுளுக்குப் பொருள்கொள்ளும் முறை ; ஒரு திருமணவகை . |
பொருள்செய்தல் | உரையிடுதல் ; செல்வந்தேடுதல் . |
பொருள்செய்வோர் | வணிகர் . |
பொருள்வயிற்பிரிவு | பொருள் தேடுதலின் பொருட்டுத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதல் . |
பொருள்விலையாட்டி | விலைமாது . |
பொருளட்டவணை | நூல் முதலியவற்றின் செய்திக்குறிப்பு . |
பொருளறை | கருவூல அறை . |
பொருளன் | பரம்பொருள் . |
பொருளாகுபெயர் | முதற்பொருளின் பெயர் அதன் சினைக்காகும் ஆகுபெயர் . |
பொருளாசை | பொருள்மேல் உள்ள அவா . |
பொருளாள் | மனைவி . |
பொருளானந்தம் | ஆனந்தக்குற்றம் . |
பொருளிலக்கணம் | அகம் , புறம் என்பவற்றை விளக்கும் இலக்கணநூல் . |
பொருளின்பம் | காண்க : பொருட்சுவை . |
பொருளுரை | மெய்யுரை ; காரிய வார்த்தை ; புகழுரை ; மந்திரம் . |
பொருளுரையாளர் | சான்றோர் . |
பொருளுவமை | பொருளின் தன்மையை உவமித்துக் கூறும் அணிவகை . |
பொருனை | காண்க : பொருநை . |
பொரேரெனல் | விரைவுக்குறிப்பு . |
பொல் | பதர் . |
பொல்லது | தீயது . |
பொல்லம் | தைக்கை ; இணைக்கை ; சேர்த்துத் தைக்க உதவும் சிறு துண்டு . |
பொல்லம்பொத்துதல் | கிழிந்த துணியின் இரண்டு தலைப்பையுங் கூட்டித் தைத்தல் . |
பொல்லர் | சக்கிலியர் ; தையற்காரர் . |
பொல்லாக்காட்சி | மயக்கவறிவு . |
பொல்லாக்காலம் | கெட்டகாலம் . |
பொல்லாங்கு | தீது ; குற்றம் ; கேடு ; ஈனம் ; மறதி . |
பொல்லாச்சாம்பற்றரை | கட்டடத்திற்குத் தகுதியில்லாத தரைவகை . |
பொல்லாத | தீமையான ; கடுமையான . |
பொல்லாதவன் | தீயவன் ; கடுமையானவன் . |
பொல்லாது | தீயது ; உடல் முதலியன கேடுற்ற நிலை . |
பொல்லாநிலம் | சேற்றுநிலம் ; முதுகாடு . |
பொல்லாப்பு | இணக்கமின்மை ; தீது ; குற்றம் ; துன்பம் ; மறுப்பு . |
பொல்லாமணி | காண்க : பொள்ளாமணி . |
பொல்லாமை | குற்றம் ; தீது . |
பொல்லாவாறு | தீச்செயல் . |
பொல்லான் | தீயவன் ; அறிவிலி ; குதிரைவகை . |
பொல்லு | பதர் ; தடி ; ஊன்றுகோல் . |
பொல்லுதல் | காண்க : பொள்ளுதல் . |
பொலங்கலம் | பொன்னகை . |
பொலங்கா | இந்திரனுடைய சோலை . |
பொலம் | அழகு ; பொன் ; அணிகலன் ; பொன்னிறம் ; பொல்லாங்கு . |
பொலம்புள் | காண்க : பொன்வாய்ப்புள் . |
பொலன் | அழகு . |
பொலி | தூற்றா நெற்குவியல் ; தூற்றிய நெல் ; விளைவின் அளவு ; தானியமாகக் கொடுக்கும் வட்டி ; களத்தில் நெல் அளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர் ; புணர்ச்சி . |
பொலிக்கொடி | வைக்கோல் . |
பொலிகடா | காண்க : பொலியெருது ; பொலியாடு ; தன் மனம்போனபடி திரியும் தடியன் . |
பொலிகாளை | பசுக்களைச் சினையாக்குதற்பொருட்டு வளர்க்கப்படும் காளை . |
பொலிகூறுதல் | அறுவடை முடிவில் களத்தே மகிழ்ச்சிக்குறியாகவும் பண்ணையாருக்கு வாழ்த்தாகவும் பாடிப் 'பொலியோ பொலி' என்று கூவுதல் . |
பொலிகை | காண்க : பொலிசை . |
பொலிச்சல் | புணர்ச்சி . |
பொலிசை | வட்டி ; இலாபம் . |
பொலிசையூட்டு | வட்டிபெறுகை . |
பொலிதல் | செழித்தல் ; பெருகுதல் ; மிகுதல் ; விலங்குதல் ; சிறத்தல் ; மங்கலமாதல் ; நீடு வாழ்தல் ; நிகழ்தல் ; புணர்தல் . |
![]() |
![]() |
![]() |