பொலிதூற்றுதல் முதல் - பொற்பாதம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொலிதூற்றுதல் களத்தில் நெல்லைப் பதர் போகக் காற்றில் தூற்றுதல் .
பொலிப்பாட்டு அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு ; கடுமையான நிந்தனை .
பொலிப்பாடு பொலியாடு .
பொலிப்பாய் மெதுவாய் .
பொலிப்புக்கடா காண்க : பொலிகாளை .
பொலிபாடுதல் களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுகை ; பொலிப்பாட்டுப் பாடுகை .
பொலியெருது காண்க : பொலிகாளை ; களத்துப் பிணையல் மாடுகளுள் முதலிற் செல்லுங்கடா .
பொலிவீசுதல் காண்க : பொலிதூற்றுதல் .
பொலிவீடு கோயிற்செலவுகளுக்கு விடப்படும் ஊர் .
பொலிவு அழகு ; முகமலர்ச்சி ; தோற்றப் பொலிவு ; செழிப்பு ; பருமை ; மிகுதி ; எழுச்சி ; பொன் ; வெறுந்தோற்றம் ; புணர்ச்சி .
பொலிவுமங்கலம் மன்னவன் மகிழப் பிறந்த மகனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை .
பொலிவேடு காண்க : பொலிவீடு .
பொலுகுதல் அதிகப்படுதல் ; நீர் ஒழுகுதல் .
பொலுபொலெனல் உதிர்தற்குறிப்பு ; நொறுங்கு தற்குறிப்பு .
பொழி வயல்வரம்பு ; கணு ; உரிக்கப்பட்டது ; கடலுக்கும் கழிநீர்நிலைக்கும் இடையிலுள்ள சிறுகரை ; எல்லை .
பொழிதல் மழைபெய்தல் ; மிகச்செலுத்துதல் ; வரையின்றிக் கொடுத்தல் ; தட்டுத்தடங்கலின்றிப் பேசுதல் ; நிறைந்தொழுகுதல் ; நிறைதல் ; தங்குதல் .
பொழிப்பு காண்க : பொழிப்புரை ; பொழிப்புத்தொடை ; நூற்பதிகம் ; குறிப்பு ; அனுமானம் .
பொழிப்புத்திரட்டுதல் பொதுவான திரண்ட கருத்துப் பொருளைக் கூறுதல் .
பொழிப்புத்தொடை அளவடியுள் முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .
பொழிப்புரை பொருளைத் தொகுத்துரைக்கும் உரை .
பொழில் சோலை ; பூந்தோட்டம் ; பெருமை ; உலகம் ; நாடு ; நாட்டின் பகுதி .
பொழிவு பொழிகை ; ஆதாயம் ; நிறைவு ; விருத்தி .
பொழுதறுதி சூரியன் மறையும் வேளை ; முழு நாளும் .
பொழுதிருக்க சூரியன் மறைவதற்குமுன் .
பொழுதிற்கூடல் காண்க : பொழுதொடுபுணர்தல் .
பொழுதிறங்குதல் சூரியன் மறைதல் .
பொழுது காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; கணம் ; சிறுபொழுது பெரும்பொழுதுகள் ; சூரியன் .
பொழுதுசாய்தல் காண்க : பொழுதிறங்குதல் .
பொழுதுபடுதல் காண்க : பொழுதிறங்குதல் .
பொழுதுபோக்கு பராக்கு ; காலங்கழிக்கை ; இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை .
பொழுதுபோக்குதல் காலங்கழித்தல் ; சோம்பிக் கழித்தல் .
பொழுதுபோதல் சூரியன் மறைதல் ; காலங் கழிக்கை .
பொழுதுவணங்கி சூரியகாந்திப்பூ .
பொழுதுவிடிதல் சூரியன் தோன்றும் காலம் ; காலம் .
பொழுதொடுபுணர்தல் வணிகர் எண்குணத்தொன்றான வினைகளைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை .
பொழுதோடு காண்க : பொழுதிருக்க ; தகுதியான காலத்தில் .
பொள் துளை ; விரைவுக்குறிப்பு .
பொள்ளல் துளைத்தல் ; பொளிதல் ; துளை ; மரப்பொந்து ; அம்மைவடு ; அப்பவர்க்கம் ; கொப்புளம் ; குற்றம் .
பொள்ளாமணி துளையிடாத மணி ; குற்றமற்ற மணி ; மாசற்ற பரம்பொருள் .
பொள்ளுதல் துளைத்தல் ; கிழிதல் ; பொளிதல் ; கொப்புளம் உண்டாதல் .
பொள்ளை தொளை .
பொள்ளெனல் விரைவுக்குறிப்பு .
பொளி உளியாலிட்ட துளை ; மண்வெட்டியின் வெட்டு ; பாய்முடைதற்கு வகிர்ந்து வைக்கும் ஓலை ; காண்க : பொளிமண் .
பொளித்தல் துளைசெய்தல் ; கிழித்தல் .
பொளிதல் உளியாற் கொத்துதல் ; பிளத்தல் ; இழத்தல் ; துளைசெய்தல் ; ஓட்டையாதல் ; பள்ளமாதல் .
பொளிமண் மண்வெட்டியாற் புல்லோடு சேர்த்தெடுத்த வரப்பு மண் .
பொற்கசை காண்க : பொற்கம்பி .
பொற்கட்டி தங்கக்கட்டி .
பொற்கணக்கு பொன்னிறையளவு .
பொற்கம்பி தங்கக்கம்பி .
பொற்கலசம் கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம் ; பொற்பாண்டம் .
பொற்கலம் பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் .
பொற்கலன் பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் .
பொற்கலனிருக்கை காண்க : பொற்பண்டாரம் .
பொற்காசு பொன்நாணயம் .
பொற்காரை பொன்னாலான கழுத்தணிவகை .
பொற்கிழி சீலையின் முடிந்த நிதிப்பொதி .
பொற்கூடம் இமயமலைக்கு வடக்கேயுள்ள ஏமகூட மலை .
பொற்கெனல் பொன்னிறமுடையதாதற் குறிப்பு .
பொற்கொல்லன் தட்டான் .
பொற்கோள் வியாழன் .
பொற்சபை சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் .
பொற்சரிகை ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னால் அமைத்த இமை .
பொற்சிலை பொன்னாலான பொம்மை ; மகாமேரு .
பொற்சின்னம் போருக்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொன்துண்டு .
பொற்சீந்தில் சீந்தில்வகை .
பொற்சுண்ணம் விழாக்களில் மக்கள் உடலின் மீது தூவப்படும் நறுமணச் சுண்ணம் ; அலங்காரமாக உடலில் அப்பிக்கொள்ளுதற்குரிய பொற்றூள் .
பொற்சுண்ணமிடித்தல் மணப்பண்டங் கலந்து மஞ்சள் இடிக்கை .
பொற்சூட்டு நெற்றிப்பட்டம் .
பொற்ப பொலிவுபெற ; ஓர் உவமவுருபு .
பொற்படி பொன்னுலகம் .
பொற்படை குதிரை , யானை முதலியவற்றின் மேல¦டு .
பொற்பண்டாரம் பொன்னும் பொற்கலங்களும் வைக்கும் நிதி அறை .
பொற்பணிதி பொன்னணி .
பொற்பாதம் திருவடி .