போசனக்குறடா முதல் - போந்த வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
போசனக்குறடா மிளகாய்த் தொகையல் ; பொடி முதலியன .
போசனசாலை அன்னம் படைக்கும் இடம் ; விலைக்கு உணவுபெறும் இடம் .
போசனசௌக்கியம் நல்லுணவு ; இன்ப வாழ்க்கை .
போசனப்பதார்த்தம் உணவுப்பண்டம் .
போசனப்பிரியன் உணவுவிருப்பமிக்கவன் ; விநாயகக்கடவுள் .
போசனம் உணவு ; புசித்தல் .
போசனாங்கம் நால்வகை உண்டிகளையும் உதவும் கற்பகம் .
போட்கன் பொய்யன் ; சுணைகேடன் .
போட்டடைத்தல் திணித்தல் .
போட்டி எதிரிடை ; கேலி .
போட்டிக்காரன் எதிரி ; கேலிக்காரன் .
போட்டிவழக்கு இடையறா எதிர்வழக்கு .
போட்டுக்கொடுத்தல் கூடச் சேர்த்தளித்தல் ; பிறனுக்காகச் செய்தல் ; அடித்தல் .
போட்டுக்கொள்ளுதல் தரித்தல் ; ஏற்றுக் கொள்ளுதல் .
போட்டுவிடுதல் நழுவவிடுதல் ; எறிதல் ; இடித்தல் ; கொன்று கைவிடுதல் ; மேற்போதல் .
போட்டுவைத்தல் சேமித்துவைத்தல் ; தாமதப் படுத்துதல் .
போடகம் புண் ; அம்மைக்கொப்புளம் ; கொப்புளிப்பான் ; அம்மை .
போடி சம்புநாவல்மரம் ; எதிரிடை ; நிலக்கிழார் .
போடு எடுப்பாயுள்ளது ; நற்பேறு ; மொட்டை ; கோட்டையடுப்பு ; பொந்து ; அடி .
போடுகாடு மலைச்சரிவில் புன்செய்ப்பயிர் செய்யக்கூடிய நிலம் .
போடுதல் எறிதல் ; இடுதல் ; தாழ் முதலியன இடுதல் ; தரித்தல் ; ஈனுதல் ; அச்சிட்டு வெளிப்படுத்துதல் ; கணக்குச்செய்தல் ; வரைதல் ; பரிமாறுதல் ; அடித்தல் ; விதைத்தல் ; பயன்படுத்தல் ; கள் முதலியன குடித்தல் ; விடுத்தல் ; பணம் முதலியன கட்டுதல் ; பிரித்து இடுதல் ; உண்டாதல் ; ஒரு துணைவினை .
போணம் சோறு .
போணி முதலாவது செய்யும் வாணிகம் ; விதைக்கும் பருவம் ; நீர் வார்த்தற்குரிய கலம் .
போத்தருதல் போய்க் கொண்டுவருதல் ; உரிய சொல்லை வருவித்துரைத்தல் ; கொடுத்தனுப்புதல் ; புறப்படவிடுதல் ; போதல் ; வெளிவருதல் .
போத்திரி பன்றி .
போத்து மயில் , எழால் என்பவற்றின் ஆண் ; முதலை , சுறாப்போன்ற நீர்வாழ் சாதியின் ஆண் ; ஓரறிவு உயிரின் இளமை ; புதுக்கிளை ; காண்க : செம்போத்து ; பொந்து ; விலங்கு துயிலிடம் ; மனக்குற்றம் .
போத்துக்கால் கரும்பு .
போத செவ்வையாக ; போதிய அளவு ; விரைவாக .
போதகப்படை பகைவனது அம்பினால் உண்டாகும் மாயைகளை விலக்கும் அம்புவகை .
போதகம் இளமை ; யானைக்கன்று ; யானை ; விலங்கின் பிள்ளை ; நல்லுரை ; சொல்லிக்கொடுத்த புத்தி ; இனிப்புவகை ; எட்டிமரம் ; ஓரறிவுயிரின் இளமை ; கீரைவகை .
போதகன் கல்வி கற்பிப்பவன் ; குரு ; ஒற்றன் ; நாட்டு ஐயர் .
போதகாசிரியன் கல்வி கற்றுக்கொடுப்போன் ; சமயகுரு .
போதந்து ஒருசொல் விழுக்காடு .
போதம் ஞானம் , அறிவு ; மரக்கலம் ; பரணிநாள் ; யானைக்கன்று ; மனைக்கட்டு .
போதர அதிகமாக .
போதரவு நயச்சொல் ; போற்றுகை ; இச்சகம் ; பேணுதல் ; போகை ; செலுத்துகை ; கொண்டு வருகை .
போதருதல் செல்லுதல் ; திரும்புதல் ; வருதல் ; பெறப்படுதல் ; கொண்டுபோதல் ; கொண்டுவருதல் ; எதிர்கொண்டுபோதல் ; விலக்குதல் .
போதல் செல்லுதல் ; அடைதல் ; உரியதாதல் ; பிறத்தல் ; நீண்டுசெல்லுதல் ; தகுதியாதல் ; நெடுமையாதல் ; நேர்மையாதல் ; பரத்தல் ; நிரம்புதல் ; மேற்படுதல் ; ஓங்குதல் ; நன்கு பயிலுதல் ; கூடியதாதல் ; பிரிதல் ; ஒழிதல் ; நீங்குதல் ; கழிதல் ; மறைதல் : காணாமற்போதல் ; மாறுதல் ; கழிக்கப்படுதல் ; வகுக்கப் படுதல் ; சாதல் ; முடிவாதல் ; ஒலியடங்குதல் ; தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை ; பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணைவினை .
போதலிப்பு நயச்சொல் ; போற்றுகை ; முகமுன் புகழ்தல் ; பேணுகை .
போதன் அறிவுடையோன் , ஞானி ; அருகன் ; பிரமன் .
போதனை கற்பிக்கை ; அறிவு , ஞானம் ; தூண்டுகை .
போதா பெருநாரை .
போதாக்காலம் தீய காலம் .
போதாதவேளை தீய காலம் .
போதாந்தம் அறிவின் எல்லை , ஞானமுடிவு .
போதாந்தன் கடவுள் .
போதாமை குறைவு ; மனப்பிடித்தமின்மை .
போதாலயம் அறிவிற்கிருப்பிடம் .
போதி அரசமரம் ; அறிவு ; மலை ; காண்க : போதிகைக்கட்டை .
போதிக்கிறைவன் புத்தன் .
போதிகன் ஆன்மா .
போதிகை குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை .
போதிகைக்கட்டை குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை .
போதிசத்துவன் அறிவு முதிர்ந்து அடுத்த பிறவியில் புத்தனாக ஆவதற்குரியவன் ; புத்தன் .
போதித்தல் கற்பித்தல் ; விருப்பமுண்டாதல் ; தீயுரை புகட்டல் .
போதித்தலைவன் புத்தன் .
போதிப்பகவன் புத்தன் .
போதிப்பு அறிவு ; படிப்பினை .
போதிமாதவன் காண்க : போதிப்பகவன் .
போதிய போதுமான .
போதியகுடி மதிப்புள்ள குடும்பம் .
போதியவன் கண்ணியவான் .
போதியார் புத்தர் ; பௌத்தர் .
போதிவேந்தன் காண்க : போதிப்பகவன் .
போதினன் தாமரைப் பூவிலிருப்பவனான பிரமன் .
போது மலரும்பருவத்து அரும்பு : மலர் ; செவ்வி ; காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; பொழுது .
போதுகாலம் பிள்ளைபெறுங் காலம் .
போதுசெய்தல் மலருதல் ; உண்ணுதல் ; மூடுதல் ; குரல் மாறுதல் ; பேரரும்பாதல் .
போதுதல் போதியதாதல் ; தகுதியாதல் ; ஒழுகுதல் ; மதிக்கப்படுதல் ; செல்லுதல் .
போதுபோக்கு காண்க : பொழுதுபோக்கு .
போதுபோக்குதல் காண்க : பொழுதுபோக்கு .
போதுவைகுதல் காலம் நீட்டிக்கை .
போதை மூதறிவு ; இலாகிரி மயக்கம் .
போதைப்புல் காண்க : காவட்டம்புல் ; கருப்பூரப்புல் .
போந்த தகுந்த ; பழகின ; தீர்மானமான .