போந்தி முதல் - போலியெழுத்து வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
போந்தி வீக்கம் ; யானைக்கால் .
போந்திக்கால் யானைக்கால் .
போந்தின்கண்ணிக்கோன் பனம்பூமாலையையுடைய சேரன் .
போந்தின்றாரோன் பனம்பூமாலையையுடைய சேரன் .
போந்து காண்க : போந்தை ; பல்லி .
போந்தை பனை ; இளம்பனைமரம் ; அனுடநாள் .
போபடி சாடை .
போம் ஓர் அசைச்சொல் .
போம்பல் காண்க : நீர்க்கடம்பு .
போய்ப்பாடு புகழ் ; பெரிதாயிருக்கை .
போயகாலம் சென்ற காலம் .
போயிற்று ஓர் அசைநிலை .
போர் சண்டை ; மல்யுத்தம் ; இகல் ; செறிந்து பொருந்துகை ; குவியல் ; சாணி ; கதிர் வைக்கோல்களின் படப்பு ; சதயநாள் ; மரப்பொந்து .
போர்க்கடம் சண்டை செய்வதாகிய வீரர் கடமை .
போர்க்கடா சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா .
போர்க்கண் காண்க : போர்க்களம்(ரி) .
போர்க்கதவு பலகைகளை இணைத்த கதவு , இரட்டைக்கதவு .
போர்க்களத்தொழிதல் போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை .
போர்க்களம் சண்டை செய்யுமிடம் .
போர்க்களரி சண்டை செய்யுமிடம் .
போர்க்கோலம் போருக்குரிய உடைதரித்தல் .
போர்கலத்தல் போர்புரிதல் .
போர்ச்சேவகன் படைவீரன் .
போர்ச்சேவல் சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல் .
போர்த்தல் தரித்தல் ; மூடுதல் ; சூழ்தல் .
போர்த்துக்கட்டுதல் உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல் ; மறைத்து அடக்கிக்கொள்ளுதல் .
போர்த்துமூடுதல் மறைத்து அடக்கிக்கொள்ளுதல் .
போர்நிறம் போர்ப்பொலிவு .
போர்ப்பறை போர்முரசம் .
போர்ப்பு மூடுகை ; நெற்போர் .
போர்ப்பூ போரில் வீரர் அணிந்துகொள்ளும் அடையாளப்பூ .
போர்ப்பை உழவுகாலின் உட்குழிவு ; களைக்கொட்டின் அடி .
போர்ப்பைக்காளை பொலிகாளை ; உழவுக்குரிய காளை .
போர்ப்பையன் பொலிகாளை ; உழவுக் குரிய காளை .
போர்பு காண்க : போர்வு .
போர்போடுதல் தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற் கெடாதபடி குவித்து மூடுதல் .
போர்மகள் கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் .
போர்மடந்தை கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் .
போர்முகம் போர் முனைந்து நிகழுமிடம் .
போர்முரசு காண்க : போர்ப்பறை .
போர்முள் சேவலின் முன்னங்கால் முள் .
போர்முனை காண்க : போர்முகம் .
போர்மூட்டுதல் சண்டைசெய்யத் தூண்டுதல் ; பேதகஞ்செய்தல் .
போர்மை அருள் .
போர்வு தானியப்போர் .
போர்வை மூடுதல் ; மேல்மூடும் துணி ; தோல் ; வாள் முதலியவற்றின் உறை ; கவசம் ; தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை .
போர மிகவும் .
போரடி தலையடிக் கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப் பிரிக்கை ; நெற்களம் ; ஒரு விளையாட்டுவகை .
போரடித்தல் நெற்கதிரை அடித்தல் ; வாதாடுதல் ; சோர்வுதட்டுதல் .
போரப்பொலிய முழுதும் .
போராட்டம் சண்டையிடுகை ; போட்டி ; சண்டை ; விடாமுயற்சி .
போராடுதல் பொருதல் ; தொல்லைப்படுதல் ; விலை முதலியவற்றில் வாதம்செய்தல் .
போரான் குதிரைவகை .
போரி பொருவோன் ; முருகக்கடவுளின் தலங்களில் ஒன்றான திருப்போரூர் .
போரிக்கட்டை காண்க : போதிகைக்கட்டை .
போரிகை காண்க : போதிகைக்கட்டை .
போருதல் செல்லுதல் ; மீண்டுவருதல் ; எட்டுதல் ; பொருள் பெறப்படுதல் ; போதியதாதல் .
போருதவி போர்வீரனுக்கு உதவிசெய்கை .
போருந்து போர்க்கருவிகளுள் ஒன்று , டாங்கிப் படை .
போரெதிர்தல் போர்செய்தலை மேற்கொள்ளுதல் .
போரேறு போர் செய்யவல்ல காளை ; படை வீரன் ; செவ்வாய் .
போல் ஓர் உவமவுருபு ; பொய் ; ஓர் அசைச்சொல் ; உள்ளீடில்லாதது ; பதர் ; மூங்கில் ; வெற்றி ; படை ; வாள் .
போல்மரம் வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை .
போல ஓர் உவமவுருபு .
போலி ஒன்றுபோல் ஒன்றிருத்தல் ; ஒப்புடையவர் ; ஒப்புடையது ; ஒப்பு ; சாயல் ; கள்ளப்பொருள் ; படி , பிரதி ; பொய் ; வஞ்சகம் ; கேலி ; காண்க : போலியெழுத்து ; இலக்கணப்போலி ; நியாயாபாசம் .
போலிச்சமயம் பொய்யான மதம் .
போலிச்சரக்கு உண்மைச் சரக்கைப்போலப் செய்த பண்டம் ; வெளிப்பகட்டுள்ள பொருள் .
போலித்தனம் உண்மையல்லாத வெளித்தோற்றம் .
போலிநடை வெளிப்பகட்டான நடத்தை ; இழிவான நடத்தை .
போலிநியாயம் பொய்க்காரணம் ; நியாயம்போல் காணப்படும் நியாயமற்றது .
போலிமனிதன் மக்கட்பண்பற்றவன் .
போலிமை ஒப்பு .
போலிமொழி காண்க : இலக்கணப்போலி .
போலியாள் வெளிவேடக்காரன் ; மேல்வாரியாக வேலை செய்பவன் .
போலியெழுத்து ஓர் எழுத்துக்குப் பதிலாக அவ்வொலியில் அமையும் எழுத்து .