மகரத்துவசன் முதல் - மகாசாத்திரன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மகரத்துவசன் காண்க : மகரக்கொடியோன் .
மகரதோரணம் மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம் .
மகரந்தப்பொடி பூந்தேன் ; பூந்தாது .
மகரந்தம் மலர்த்தாது ; பூந்தேன் ; கள் ; வண்டு ; குயில் ; செடிவகை .
மகரந்தவதி பாதிரிப்பூ .
மகரந்தோய்த்தல் செங்காவி நிறமூட்டுதல் .
மகரநீர் கடல் .
மகரப்பகுவாய் திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை .
மகரம் சுறாமீன் ; முதலை ; குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; காண்க : மகரக்குழை ; மகரராசி ; குறங்குசெறியணி ; தைமாதம் ; அபிநயக்கைவகை ; அரசசின்னத்துள் ஒன்று ; மணமேடை அலங்கரிப்பு ; காதல் ; மலர்த்தாது ; மங்கிய சிவப்புநிறம் ; தேவருலகம் .
மகரமாதம் தைமாதம் .
மகரமீன் சுறாமீன் .
மகரமுகம் அபிநயவகை .
மகரமுயர்த்தோன் காண்க : மகரக்கொடியோன் ; மீனைக் கொடியிலுடைய மன்மதன் .
மகரயாழ் நால்வகை யாழினுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புடைய யாழ் .
மகரயூகம் காண்க : மகரவியூகம் .
மகரராசி பத்தாம் இராசி .
மகரரேகை செல்வன் என்பதைக் காட்டும் குறியாக உள்ளங்கையில் அமையும் மீன்வடிவ வரி .
மகரவலயம் காண்க : மகரப்பகுவாய் .
மகரவாகனன் வருணன் .
மகரவாய் காண்க : மகரப்பகுவாய் ; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு .
மகரவாய்மோதிரம் மகரமீனின் வடிவமைந்த கால்விரலணிவகை .
மகரவாழை ஒரு மல்லிகைவகை ; வாழைவகை .
மகரவியூகம் மகரமீனின் வடிவான படை வகுப்பு .
மகரவீணை காண்க : மகரயாழ் .
மகரவுச்சன் செவ்வாய் .
மகரன் சனி .
மகராகரம் கடல் .
மகராசன் பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .
மகாராசன் பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .
மகராசி செல்வமுள்ளவள் ; அரசி .
மகராயனம் சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங்காலம் .
மகராலயம் காண்க : மகராகரம் .
மகரி காண்க : மகராகரம் .
மகரிகை மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்குசெறி என்னும் அணிகலன் ; ஒருபேரெண் ; தோரணம் ; மகரவடிவாய்ச் செய்த பெட்டி .
மகருதம் காண்க : கொடிவேலி .
மகலோகம் மேலேழுலகினுள் ஒன்று .
மகவதி இந்திராணி .
மகவன் இந்திரன் ; சிவன் .
மகவாட்டி மகப்பேறுள்ளவள் .
மகவான் காண்க : மகவன் ; மகப்பேறுடையவன் ; வேள்வி செய்பவன் .
மகவின்கோள் வியாழன் .
மகவு குழந்தை ; மகன் ; கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை .
மகவுவளர்த்தல் குழந்தைகளை வளர்த்தல் .
மகவேள்வி ஆண்மகவுவேண்டிச் செய்யும் யாகம் .
மகள் பெண் ; புதல்வி ; மனைவி .
மகளிக்கீரை ஒரு கீரைவகை .
மகளிர் பெண்டிர் .
மகளிர்சாதி அருணி , வடவை , அத்தினி என்னும் மூவகைப் பெண்கள் .
மகளிர்பருவம் பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பெண்பருவம் ; வாலை , தருணி , பிரவுடை , விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம் .
மகற்பலம் பெரும்பலன் .
மகன் புதல்வன் ; ஆண்பிள்ளை ; குழந்தை ; சிறந்தோன் ; வீரன் ; கணவன் .
மகன்மை ஆண்தன்மை , புதல்வன் தன்மை ; பழைய வரிவகை .
மகன்றில் ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத ஒரு நீர்வாழ் பறவை .
மகா பெருமையான ; அளவற்ற ; உயர்ந்த ; மிகுந்த .
மகாகதம் காய்ச்சல் .
மகாகர்வம் பத்துலட்சங்கோடி .
மகாகவம் பெரும்போர் .
மகாகவி பெருங்கவி .
மகாகாசம் பெருவெளி ; பெருஞ்சிரிப்பு .
மகாகாயம் பெருவெளி ; யானை .
மகாகாலம் நெடுங்காலம் ; மாமரம் .
மகாகாலன் உருத்திரன் .
மகாகாளி சத்திகளுள் ஒருத்தி .
மகாகிதி கோடிகோடாகோடி .
மகாகோடி ஒரு பேரெண் .
மகாகோரம் காணப் பொறுக்காத கொடுமை ; நரகவகை .
மகாச்சாயம் ஆலமரம் .
மகாசங்கம் மாநாடு ; ஆயிரங்கோடாகோடி ; குபேரன் நிதியினுள் ஒன்று ; எலும்பு ; நெற்றி .
மகாசத்தி சிவசத்தி ; முருகக்கடவுள் .
மகாசபை ஊர்ப் பொதுச்செயல்களைப் பார்க்கும் மன்றம் .
மகாசம்பு பெருநாவல் .
மகாசமுத்திரம் பெருங்கடல் ; ஒரு பேரெண் .
மகாசனம் மக்கட்கூட்டம் ; ஊரில் முதன்மையானவர் ; உயர்ந்தோர் ; பார்ப்பனர் .
மகாசாத்தா ஐயனார் .
மகாசாத்திரன் சமயங்களின் மூலசாத்திரங்களைப் பயின்றவன் ; ஐயனார் .