சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மண்டலவந்தாதி | ஈற்றடியிறுதியும் முதலடி முதலும் ஒன்றாகவரும் அந்தாதிவகை . |
| மண்டலவியூகம் | வட்டமாக அமைக்கும் படைவகுப்பு . |
| மண்டலாகாரம் | வட்டவடிவம் . |
| மண்டலி | ஒரு பாம்புவகை ; காட்டுப்பூனை ; ஒரு எலிவகை ; நாய் ; கூட்டம் ; பூமி . |
| மண்டலிகன் | காண்க : மண்டல¦கன் . |
| மண்டலிசிதம் | கடுகு ; தேன் ; வியர்வை . |
| மண்டலித்தல் | காலை வளைத்து வட்டமாக்குதல் ; காண்க : மண்டலம்போடுதல் ; வளைத்தல் ; இசைத்தல் . |
| மண்டல¦கன் | அரசன் ; நாட்டின் பகுதியை ஆளும் ஆதிகாரி . |
| மண்டலேச்சுவரன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டலேசன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டலேசுரன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டா | மீன் , பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை . |
| மண்டி | காலை முடக்கி முழந்தாளால் நிற்கை ; வண்டல் ; தானியம் மிகுதியாக விற்கும் இடம் ; மொத்தவாணிகம் செய்யும் பண்டசாலை . |
| மண்டிகை | அப்பவருக்கம் . |
| மண்டிபோடுதல் | முழங்கால் முட்டிமேல் நிற்றல் . |
| மண்டியிடுதல் | முழங்கால் முட்டிமேல் நிற்றல் . |
| மண்டிரவல் | இரவலாக வாங்கிய நகையை வறுமையால் அடகுவைக்கை . |
| மண்டிலக்கடவுள் | சந்திரன் . |
| மண்டிலநிலை | தேசிக்கூத்தின்வகை ; வில்லோர் நிலையுள் ஒன்று . |
| மண்டிலம் | வட்டம் ; வட்டவடிவம் ; வட்டமாயோடுகை ; குதிரை ; குதிரைநடைவகை ; பூமி ; சூரியன் ; சந்திரன் ; பரிவேடம் ; வானம் ; கண்ணாடி ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; தேசிக்கூத்தின்வகை . |
| மண்டிலமாக்கள் | நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள் . |
| மண்டிலயாப்பு | நாற்சீரடிச் செய்யுள் . |
| மண்டிவியாபாரம் | மொத்த வாணிகம் . |
| மண்டு | செறிவு ; மிகுதி ; மூடன் ; பொதுவிடம் . |
| மண்டுகால் | முட்டுக்கால் . |
| மண்டுதல் | நெருங்குதல் ; விரைந்து செல்லுதல் ; திரளுதல் ; கடுமையாதல் ; மிக ஒளிவிடுதல் ; அதிகமாதல் ; ஈடுபடுதல் ; செலுத்துதல் ; நெருங்கித் தாக்குதல் ; நிரம்ப உண்ணுதல் ; சேரவிணைத்தல் ; மூண்டு பொருதல் ; கவர்தல் ; தாங்குதல் . |
| மண்டூகம் | தவளை ; மூடன் ; காண்க : மண்டூரம் . |
| மண்டூகை | விலைமகள் . |
| மண்டூரசிந்தூரம் | இரும்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பொடி . |
| மண்டூரம் | இரும்புக்கிட்டம் . |
| மண்டை | தலை ; தலையோடு ; தென்னை ; முதலியவற்றின் தலைப்பக்கம் ; இரப்போர் கலம் ; கலம் ; ஓரளவை ; விலைமகள் . |
| மண்டைக்கண் | குழிந்த கண் . |
| மண்டைக்கரப்பான் | தலையில் வரும் கரப்பான் நோய்வகை . |
| மண்டைக்கருவம் | மிகுசெருக்கு . |
| மண்டைக்கனம் | நீர்க்கோவையால் தலை கனத்திருக்கை ; காண்க : மண்டைக்கருவம் . |
| மண்டைக்குடைச்சல் | தலைநோவுவகை . |
| மண்டைச்சூலை | ஒரு நோய்வகை . |
| மண்டைப்பாணர் | உண்கலம் ஏந்தி இரக்கும் பாணர்வகையார் . |
| மண்டைப்பீனசம் | பீனசநோய்வகை . |
| மண்டையோடு | தலையோடு , கபாலம் . |
| மண்ணகம் | நிலவுலகம் . |
| மண்ணகமடந்தை | நிலமகள் . |
| மண்ணங்கட்டி | காண்க : மண்ணாங்கட்டி . |
| மண்ணசை | காண்க : மண்ணாசை . |
| மண்ணடித்தல் | மண்கொணர்ந்து கொட்டுதல் ; மண்மேடிடுதல் ; சீர்கொடுத்தல் . |
| மண்ணம் | நீற்றிய சுண்ணாம்பு . |
| மண்ணரிநார் | குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு . |
| மண்ணரிவாளன் | குயவன் . |
| மண்ணரைத்தல் | சோம்பியிருத்தல் . |
| மண்ணவர் | மனிதர் . |
| மண்ணறை | மண்பூச்சு . |
| மண்ணன் | மந்தன் ; சின்னம்மை நோய்வகை . |
| மண்ணாங்கட்டி | மண்கட்டி . |
| மண்ணாசை | நிலத்தை அடைவதிலுள்ள பற்று . |
| மண்ணாந்தை | அறிவிலி . |
| மண்ணி | மந்தன் ; ஒரு மீன்வகை ; சோழ நாட்டில் இருந்த ஓர் ஆறு . |
| மண்ணிடுதல் | மண்மேடிடுதல் ; மண்பூசுதல் ; கால் கழுவுகையில் மண்ணால் தூய்மை செய்தல் . |
| மண்ணில்வேந்தன் | அரசமரம் ; முடிதும்பை ; வெற்றிலை ; பூவரசமரம் . |
| மண்ணிலவேந்தன் | அரசமரம் ; முடிதும்பை ; வெற்றிலை ; பூவரசமரம் . |
| மண்ணிலம் | பூமி . |
| மண்ணினாதம் | உவர்மண் . |
| மண்ணினாதனம் | உவர்மண் . |
| மண்ணீட்டாளர் | சிற்பாசிரியர் ; குயவர் ; சுதையால் பாவை முதலியன செய்வோர் . |
| மண்ணீடு | திண்ணை ; வேயாமாடம் ; சாந்தினால் செய்த பாவைவடிவம் ; மாடப்புரை . |
| மண்ணீர் | கழுவ உதவும் நீர் . |
| மண்ணீர்மை | உலகவியல்பு . |
| மண்ணீரல் | இடவிலாவை ஒட்டியுள்ள ஈரல் . |
| மண்ணுடையான் | அரசன் ; குயவன் ; நிலவுரிமைக்காரன் . |
| மண்ணுண்ணுதல் | மண்ணைப் புசித்தல் ; தோற்றுவிழுதல் . |
| மண்ணுணி | காண்க : மண்ணுளிப்பாம்பு ; திருமால் ; ஒன்றுக்கும் உதவாதவன் . |
| மண்ணுதல் | நீராடுதல் ; மூழ்குதல் ; கழுவுதல் ; பூசுதல் ; செய்தல் ; அலங்கரித்தல் ; செப்பமிடுதல் . |
| மண்ணுநீர் | மஞ்சனநீர் ; காண்க : மண்ணீர் . |
| மண்ணுப்பு | உப்புவகை . |
| மண்ணுப்பெய்தல் | குளிப்பாட்டுதல் . |
| மண்ணுமங்கலம் | அரசன் முடிபுனைந்த காலந்தொடங்கி ஆண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை . |
|
|
|