மண்ணுலகு முதல் - மணற்சோறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மண்ணுலகு நிலவுலகம் .
மண்ணுள்ளார் காண்க : மண்ணோர் .
மண்ணுளிப்பாம்பு ஒரு பாம்புவகை ; மண்ணில் உண்டாகும் புழுவகை .
மண்ணுறுத்தல் அலங்கரித்தல் ; கழுவுதல் ; மஞ்சனமாட்டுதல் .
மண்ணெடுத்தல் குழியினின்று மண்ணை நீக்குதல் ; மண்ணைப் பறித்துக் கிளப்புதல் ; வயலை வெட்டித் திருத்துதல் ; கோட்டுமண் கொள்ளுதல் .
மண்ணெண்ணெய் தைலவகை ; கன்னெய் , பூமியிலிருந்து எடுப்பதும் எரிப்பதற்கு உதவுவதுமான எண்ணெய்வகை .
மண்ணை பேய் ; இளமை ; மூடன் ; கூர்மழுக்கம் ; காலின் கெண்டைச்சதை ; கொடிவகை .
மண்ணொட்டர் மண்சுமப்போர் ; மண்வேலை செய்வோர் .
மண்ணோர் மனிதர் .
மண்தோண்டி மண் சேறுகளைத் தோண்டி எடுக்கும் இயந்திரம் .
மண்பாக்கு ஒரு மட்டமான பாக்குவகை .
மண்பாடு பூமியின் இயல்பு .
மண்பாண்டம் மண்ணாலான பாண்டம் .
மண்பார் கிணறு வெட்டுகையில் பாறையின் கீழ்க் காணப்படும் கெட்டிமண் .
மண்புரை மண் பொதிந்த வீடு .
மண்பூசுதல் சுவர் முதலியவற்றிற்கு மண்சாந்து தீற்றுதல் .
மண்பொதுத்தந்தை பிரமன் .
மண்பொறி மண்ணிட்டு அதன்மேல் பொறித்த இலாஞ்சனை .
மண்மக்கள் காண்க : மண்மகள்புதல்வர் .
மண்மகள் நிலமகள் .
மண்மகள்புதல்வர் வேளாளர் , உழவர் , நான்காம் வகுப்பார் .
மண்மகன் குயவன் .
மண்மடந்தை நிலமடந்தை ; பூலோகத்துப் பெண் .
மண்மலி காண்க : மருக்கொழுந்து .
மண்மழை மண்ணாகப் பெய்யும் மழை ; வறுமை .
மண்மாரி மண்ணாகப் பெய்யும் மழை ; வறுமை .
மண்மூசை மருந்து செய்யவும் உலோகம் உருக்கவும் உதவும் மண்ணாலான குகை .
மண்மேடிடுதல் ஆறு , வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப்போதல் .
மண்மேடு மண்ணாலான குன்று .
மண்வாரி பெருங்காற்று .
மண்வினைமாக்கள் குயவர் .
மண்வெட்டி மண்ணை வெட்டி எடுக்கும் கருவி .
மண்வேலை மண்ணால் கரை முதலியன இடுந்தொழில் .
மணக்கால் கலியாணப் பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால் .
மணக்கோல் மன்மதனின் மலரம்பு .
மணக்கோலம் கலியாணத்துக்குரிய அலங்காரம் .
மணங்கட்டுதல் நறுமணமூட்டுதல் .
மணங்கல் பெரும்பானை .
மணங்கு ஆட்டுக்குட்டி ; நிறைவகை ; அளவு ; காண்க : இருவாட்சி .
மணங்குலைதல் நிலைகெடுதல் .
மணத்தல் கமழ்தல் ; விளங்குதல் ; மணம்புரிதல் ; புணர்தல் ; கூடியிருத்தல் ; அணைத்தல் ; கலத்தல் ; வந்துகூடுதல் ; நேர்தல் ; பொருந்துதல் .
மணத்தூண் திருவரங்கத்தில் அரங்கநாதர் சன்னதியின் உட்புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள் .
மணந்தட்டுதல் பரிமளித்தல் .
மணப்பந்தல் கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல் .
மணப்பு நறுமணம் ; சாரம் ; புணர்ச்சி ; செல்வமுடைமை .
மணப்பூச்சு உடம்பில் பூசும் சந்தனக்குழம்பு முதலியன .
மணப்பெண் காண்க : மணமகள் .
மணப்பொருத்தம் இராசி , இராசித் தலைவர் , இரச்சு , கணம் , திரிதீர்க்கம் , தினம் , மாகேந்திரம் , யோனி , வசியம் , வேதை என்னும் பத்துக் கலியாணப் பொருத்தங்கள் ; திருமண உடன்படிக்கை .
மணம் கூடுதல் ; நறுநாற்றம் ; மணப்பொருள் ; மதிப்பு ; நன்னிலை ; எண்வகை மணம் .
மணம்பிடித்தல் மோப்பம்பிடித்தல் ; தீநாற்றம் வீசுதல் ; நாற்றத்தால் இழுக்கப்படுதல் .
மணம்புரிதல் கலியாணம் செய்தல் .
மணமகள் கலியாணப் பெண் .
மணமகன் கலியாண மாப்பிள்ளை ; கணவன் .
மணமண்டபம் திருமணக்கூடம் .
மணமாலை கலியாணத்தில் மணமக்கள் அணியும் பூமாலை .
மணமுரசு விழாமுரசு .
மணமுழவு மருதநிலப் பறை .
மணல் பொடியாயுள்ள பிதிர்மண் ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று .
மணல்வாரி காண்க : மண்தோண்டி ; மணல் நீக்குங் கருவி ; நெல்வகை ; புல்வகை ; சின்னம்மைவகை .
மணலி மணலிக்கீரை ; மருக்கொழுந்து ; ஒரு நெல்வகை ; ஒரு பாம்புவகை ; ஓர் ஊர் .
மணலேறு முத்துக்குற்றவகை .
மணவணி காண்க : மணக்கோலம் .
மணவறை திருமணமண்டபம் ; பள்ளியறை .
மணவறைத்தோழன் மாப்பிள்ளைத் தோழன் .
மணவாட்டி மணமகள் ; மனைவி .
மணவாளன் மணமகன் ; தலைவன் ; கணவன் .
மணவினை திருமணச்சடங்கு .
மணவை அடுப்பு .
மணவோலை திருமண அழைப்பிதழ் .
மணற்கால் மணற்பாங்கான நிலம் .
மணற்குன்று மணலின் திட்டை .
மணற்கூகை தவளை .
மணற்கோட்டை மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் .
மணற்கோடு மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் .
மணற்சோறு குழந்தைகள் விளையாட்டில் சோறாகக் கருதும் மணல் .