சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மணற்பாக்கு | கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு . |
| மணாட்டு | மணமகளாகும் நிலை . |
| மணாட்டுப்பெண் | மருமகள் . |
| மணாளன் | காண்க : மணவாளன் . |
| மணி | கோமேதகம் ; நீலம் ; பவளம் , புட்பராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வைடூரியம் , வயிரம் என்னும் ஒன்பதுவகை இரத்தினங்கள் ; நீலமணி ; காண்க : சிந்தாமணி ; பளிங்கு ; கண்மணி ; உருத்திராக்கம் ; தாமரைமணி முதலியன ; தானியமணி நஞ்சுநீக்குங் கல் ; சந்திரகாந்தக்கல் ; மணிமாலை ; அணிகலன் ; உருண்டை வடிவமாயுள்ள பொருள் ; மீன்வலையின் முடிச்சு ; ஆட்டினதர் ; வீடுபெற்ற ஆன்மா ; அழகு ; சூரியன் ; ஒளி ; நன்மை ; சிறந்தது ; கருமை ; கண்டை ; அறுபது நிமிடமுள்ள நேரம் ; ஒன்பது ; ஆண்குறியின் நுனி ; பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு . |
| மணிக்கட்டு | கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய் . |
| மணிக்கணக்கு | கடிகாரப்படியுள்ள ஒழுங்கு . |
| மணிக்கயிறு | கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு ; முடிச்சுள்ள சாட்டைக்கயிறு ; பாசக்கயிறு ; முத்துவடம் ; முறுக்கு நன்கமைந்த கயிறு . |
| மணிக்காடை | சிறு காடைவகை . |
| மணிக்காம்பு | இரத்தினம் இழைத்துச் செய்தகால் ; காண்க : தக்காளி . |
| மணிக்காலறிஞர் | இரத்தினங்களின் குணாகுணங்களையறிந்த வணிகர் . |
| மணிக்காற்பள்ளி | அரசர்க்குரிய சிவிகைவகை . |
| மணிக்குடல் | சிறுகுடல் . |
| மணிக்கூடு | காண்க : மணிக்கூண்டு ; கடிகாரம் ; கடிகாரக்கூடு ; நாழிகைவட்டில் ; சாயப்பூடுவகை . |
| மணிக்கூண்டு | கடிகாரம் அமைந்த கோபுரம் ; மணிதூங்குமாடம் . |
| மணிக்கை | மணிக்கட்டு . |
| மணிக்கோவை | இரத்தினமாலை . |
| மணிகண்டன் | நீலகண்டத்தையுடைய சிவன் . |
| மணிகம் | நீர்க்குடம் . |
| மணிகர்ணிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகன்றிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகன்னிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகாசம் | கண்ணோயுள் ஒன்று . |
| மணிகாரகன் | இரத்தினவேலை செய்வோன் . |
| மணிச்சட்டம் | குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம் . |
| மணிச்சட்டி | விளிம்பில் மணிவடிவாய் அமைந்த மண்சட்டி . |
| மணிச்சிகை | குன்றிமணி . |
| மணிச்செப்பு | மணியிழைத்த செப்பு . |
| மணித்தக்காளி | ஒரு செடிவகை , மணத்தக்காளி . |
| மணிதனு | வானவில் . |
| மணிநா | மணியின் நாக்கு . |
| மணிநிறம் | கருநீலநிறம் . |
| மணிநிறவண்ணன் | திருமால் . |
| மணிநீர் | மணிபோலும் நிறத்தினையுடைய நீர் ; இரத்தினத்திலுள்ள நீர் . |
| மணிப்பாரி | இராக்காவலர்களின் பாட்டுவகை ; அரண்மனைவாயிலில் மணியடித்துக் காவல் புரியும் வேலை . |
| மணிப்பிடிப்பு | நெற்கதிரில் தானியமணி தோன்றுகை . |
| மணிப்பிரவாளம் | மணியும் பவளமும் கலந்தமை போன்று வடமொழியும் தென்மொழியும் கலந்த நடை . |
| மணிப்புறா | ஒரு புறாவகை . |
| மணிபந்தம் | காண்க : மணிக்கட்டு . |
| மணிபந்து | காண்க : மணிக்கட்டு . |
| மணிபிடித்தல் | கதிரில் தானியம் பிடித்தல் . |
| மணிபூரகம் | ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் . |
| மணிபூரம் | ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் . |
| மணிமகுடம் | இரத்தினமுடி ; ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு . |
| மணிமண்டபம் | காண்க : மணிக்கூண்டு ; சபைக்கூடம் . |
| மணிமந்தம் | இந்துப்பு . |
| மணிமலர் | குவளை . |
| மணிமலை | மேருமலை . |
| மணிமாடம் | சிறந்த மாளிகை ; திருநறையூர்த் திருமால்கோயில் . |
| மணிமாலை | முத்துவடம் ; ஒரு நூல்வகை ; திருமகள் ; திருவாசியாகிய பிரபை ; காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி . |
| மணிமாளிகை | காண்க : மணிமண்டபம் . |
| மணிமான் | கதிரவன் . |
| மணிமிடைபவளம் | மணியும் பவளமுங் கலந்த அணிகலன் ; அகநானூற்றின் இரண்டாம் பிரிவு . |
| மணிமுடி | இரத்தினகிரீடம் ; இறுகித் திரண்ட முடிச்சு . |
| மணிமேகலாதெய்வம் | இந்திரன் ஏவலால் தீவுகள் சிலவற்றைக் காவல்புரிந்து வந்த தெய்வம் . |
| மணிமேகலை | கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள் ; சாத்தனார் இயற்றிய நூல் ; காண்க : மணிமேகலாதெய்வம் ; இடையில் அணியும் அணிவகை . |
| மணியக்காரன் | ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் . |
| மணியகாரன் | ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் . |
| மணியச்சட்டம் | அதிகாரம் . |
| மணியம் | ஊர் , கோயில் , மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை . |
| மணியம்பலம் | சபைமண்டபம் . |
| மணியரங்கம் | நிலாமுற்றம் . |
| மணியாசிக்கட்டை | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாசு | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாசுப்பலகை | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாட்டி | பூசாரி . |
| மணியாடி | குலகுரு . |
| மணியீரல் | குடலின் ஒரு பகுதி . |
| மணியுயிர் | வீடுபேறடைந்த உயிர் . |
| மணியெண்ணி | நென்மணி எண்ணுபவன் ; இவறலன் . |
| மணிரங்கு | ஒரு பண்வகை . |
| மணிலாக்கொட்டை | நிலக்கடலை . |
| மணிவட்டம் | வீரக்கழல் ; சிலம்பு ; சேகண்டி . |
| மணிவடம் | முத்துமாலை ; இரத்தினமாலை ; அக்கமாலை ; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை ; வீரக்கழல் ; பாதசாலம் . |
| மணிவண்ணன் | நீலமணிபோன்ற நிறமுடைய திருமால் . |
|
|
|