மணிவலை முதல் - மதமதக்கத்தாழி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மணிவலை மீன்பிடிக்கும் ஒரு வலைவகை .
மணிவாசல் அலங்காரத் தலைவாயில் .
மணிவினைஞர் இரத்தின வேலைக்காரர் ; முத்துக்கோப்போர் .
மணிவீசம் மாதுளை .
மணீசகம் காண்க : சந்திரகாந்தக்கல் .
மணை அமரும் பலகை ; சிறுபீடம் ; மணமேடை ; யானைமேற்றவிசு ; பலகை ; வெட்டுக்கருவியின் அடிக்கட்டை ; பாதம் வைக்கும் படி ; பருத்தியினின்று பஞ்சுபிரிக்குங் கருவி ; தேங்காய் துருவலகு ; மழுங்கலாயுதம் ; மழுங்கல் .
மத்தகக்குழிவு மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
மத்தகங்குழிதல் மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
மத்தகசம் மதயானை .
மத்தகம் தலை ; உச்சி ; நெற்றி ; தலைக்கோலம் ; யானையின் தலைநெற்றி ; முகப்பு ; மலைநெற்றி ; தரிசுநிலம் .
மத்தகன் மதிமயங்கியவன் .
மத்தகுணம் மதகுணம் ; யானை .
மத்தங்காய் செஞ்சாமையரிசி ; கடுக்காய் ; பூசணி .
மத்தங்காய்ப்புல் ஒரு புல்வகை .
மத்தம் களிப்பு ; மயக்கம் ; யானைமதம் ; பைத்தியம் ; செருக்கு ; ஊமத்தஞ்செடி ; எருமைக்கடா ; குயில் ; மத்து .
மத்தமா யானை .
மத்தமாதங்கம் யானை .
மத்தவாரணம் காண்க : மத்தகசம் ; மச்சின்மேல் உள்ள தாழ்வாரம் ; வீட்டின் மேன்மாடத்து உறுப்பு ; நந்தவனம் ; திண்டு ; பாக்குவெற்றிலைத் துவையல் .
மத்தளம் ஒரு பறைவகை .
மத்தளி வாத்தியவகை ; உடல் ; காண்க : மத்தளிகன் .
மத்தளிகன் மத்தளங் கொட்டுவோன் .
மத்தன் அதிக உற்சாகமுள்ளவன் ; பைத்தியம் பிடித்தவன் ; புத்திமயக்கம் அடைந்தவன் ; கொழுப்புள்ளவன் .
மத்தனம் கடைகை ; அழுத்திப்பிடிக்கை .
மத்தாடி செடிவகை .
மத்தாடுதல் பெண்கள் கைகோத்தாடுதல் .
மத்தாப்பு வெளிச்சம் தருவதற்குக் கொளுத்தப்படும் வாணவகை .
மத்தி நடு ; ஒரு மீன்வகை .
மத்திகை குதிரைச் சம்மட்டி ; விளக்குத்தண்டு ; கழி ; பூமாலை .
மத்திடுதல் கடைதல் .
மத்தித்தல் கடைதல் ; அடித்தல் ; தேய்த்தல் ; மருந்துகலத்தல் .
மத்திபம் நடுத்தரம் ; மட்டமானது ; நடு .
மத்திமதானம் ஏழை , குருடர் முதலியோர்க்குக் கொடுக்கும் கொடை .
மத்திமதீபம் காண்க : இடைநிலைத்தீவகம் .
மத்திமபட்சம் நடுத்தரம் .
மத்திமபூமி பூகோளத்தின் நடுப்பாகம் ; தட்பவெப்பம் சமமான பூமி .
மத்திமம் காண்க : மத்திபம் , சமனிசை ; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்னும் சுரம் ; இலயவகை ; இடையுறுப்பு ; சராசரி அளவை ; குதிரைநடையுள் ஒன்று ; ஒரு நாடு .
மத்திமன் நடுத்தரமானவன் ; சாமானியன் ; நடுநிற்போன் .
மத்திமை நடுவிரல் ; சமனிசை ; நாதரூபமான ஒலி .
மத்தியகாலம் இடைப்பட்ட காலம் ; நடுத்தரமாகப் பாடும்முறை ; கிரகண நடுக்காலம் .
மத்தியத்தன் நடுவுநிலையை உடையவன் .
மத்தியபானம் கள்ளுண்ணுகை .
மத்தியம் நடு ; சராசரியளவை ; இடுப்பு ; இடை ; விபரீதசாதனை ; கள் ; மேற்கு ; படையின் நடுவிடமாகிய உறுப்புவகை ; ஒரு பேரெண் ; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்னும் சுரம் .
மத்தியலோகம் நிலவுலகம் .
மத்தியவிருத்தம் உந்தி .
மத்தியன் வேகமும் மந்தமும் இன்றி நடுத்தரமாக வேலைசெய்யும் பணியாளன் .
மத்தியானம் நடுப்பகல் .
மத்திரித்தல் கோபித்தல் ; போட்டியிடுதல் .
மத்திரிப்பு கோபம் ; போட்டி .
மத்து தயிர் முதலியன கடையுங் கருவி ; காண்க : ஊமத்தை ; மோர் ; தயிர் .
மத்தை ஊமத்தஞ்செடி ; சத்துள்ளது .
மத வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை .
மதக்கம் பேருண்டி , குடி , கஞ்சா முதலியவற்றாலுண்டாகும் மயக்கம் ; வதங்குகை ; சோர்வு .
மதகம் யானை மத்தகம் ; சுக்கு .
மதகயம் ஆண்யானை .
மதகரி ஆண்யானை .
மதகரிக்கணை யானைத்திப்பிலி .
மதகு சக்கரவாளகிரி ; குளம் முதலியவற்றில் நீர்பாயும் மடைவகை .
மதங்கம் சிறுவாத்தியவகை ; யானை ; முகில் ; ஒரு மலை ; ஓர் ஆகமம் ; கலம்பகவுறுப்புப் பதினெட்டனுள் ஒன்று .
மதங்கயம் காண்க : மதமலை .
மதங்கன் பாணன் ; பெரும்பாணன் ; ஒரு முனிவன் .
மதங்கி பாண்மகள் ; பார்வதி ; காளி ; ஆடல் பாடல்களில் வல்லவள் .
மதங்கியார் இரண்டு கைகளிலும் வாள் எடுத்துச் சுழற்றியாடும் இளம்பெண்ணான மதங்கிமீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பக உறுப்பு .
மதத்தல் மதங்கொள்ளுதல் ; கொழுத்தல் ; காமமிகுதல் ; செருக்குதல் ; மயங்குதல் .
மதத்தன் சமயவாதி ; செருக்குப்பிடித்தவன் .
மதத்து பண உதவி ; வெறியுண்டாக்கும் கூட்டு மருந்துவகை .
மததயிலம் யானையின் மதநீர் ; விந்து , வீரியம் .
மதநீர் யானையின் மதநீர் ; விந்து , வீரியம் .
மதப்பு களிப்பு ; மிகுகாமம் ; வெறிகொள்ளுகை ; நிலம் முதலியவற்றின் செழிப்பு .
மதபேதம் கொள்கைவேறுபாடு ; புறச்சமயம் .
மதம் கருத்து , கொள்கை , சமயம் ; அறிவு ; இசைவு ; போதனை ; பெற்றதைப் பெரிதாக மதிப்பது ; பல ; ஆறு ; மகிழ்ச்சி ; யானையின் மதநீர் ; வலிமை ; செருக்கு ; சாரம் ; தேன் ; வெறி ; காமவிகாரத்தின் மிகுதி ; நிலவளம் ; மதுக்களிப்பு ; கத்தூரி ; கன்மதம் ; வீரியம் ; மிகுதி ; பெருமை .
மதமத்தகம் கஞ்சாச்செடி .
மதமத்தம் ஒரு செடிவகை .
மதமத்தன் மதத்தினால் மயங்கிக் கிடப்போன் .
மதமத்தை ஒரு செடிவகை .
மதமதக்கத்தாழி முதுமக்கட்டாழி .