சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மதமதப்பு | உணர்ச்சியின்மை ; திமிர் ; செழிப்பு . |
| மதமதர்த்தல் | களிப்பு மிகுதல் . |
| மதமதெனல் | மதமுறுதற்குறிப்பு ; உடல் உறுப்பு மரத்துப்போதற்குறிப்பு ; செழித்து வளர்தற்குறிப்பு ; நீர் குடிக்கும்போதுண்டாகும் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| மதமலை | யானை . |
| மதமொய் | யானை . |
| மதர் | மிகுதி ; செருக்கு ; மகிழ்ச்சி ; வீரம் ; பாய்ச்சல் ; மதநீர் . |
| மதர்த்தல் | செழித்தல் ; மரஞ்செடி முதலியன பயனறும்படி மிதமிஞ்சிக் கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; செருக்குதல் ; களித்தல் ; மிகுதல் . |
| மதர்ப்பு | செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி . |
| மதர்வு | செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி . |
| மதர்வை | மயக்கம் ; செழிப்பு ; செருக்கு ; களிப்பு . |
| மதரணி | ஒளிமிக்க அணிகலன் . |
| மதலிகை | அணிகலத்தொங்கல் ; அலங்காரத்தொங்கல் . |
| மதலை | மகன் ; குழந்தை ; மழலைமொழி ; பாவை ; பற்றுக்கோடு ; தூண் ; வேள்வித்தூண் ; வீட்டின் கொடுங்கை ; பற்று ; மரக்கலம் ; கொன்றைமரம் ; காண்க : சரக்கொன்றை . |
| மதலைக்கிளி | இளங்கிளி . |
| மதலைத்தூக்கு | இருசீருடைய இசைத்தூக்கு . |
| மதலைப்பள்ளி | கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதகத்தலை . |
| மதவலி | மிகுவலி ; மிக்க வலிவுடையவன் ; முருகன் . |
| மதவாதி | சமயவாதஞ் செய்வோன் . |
| மதவு | வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை ; மதகு . |
| மதளை | மழலைமொழி . |
| மதன் | அழகு ; மாட்சிமை ; மிகுதி ; செருக்கு ; வலிமை ; மதவெழுச்சி ; மடமை ; கலக்கம் ; மன்மதன் . |
| மதன்றாய் | மன்மதன் தாயாகிய திருமகள் . |
| மதனகீதம் | காமப்பாடல் . |
| மதனபாடகம் | காமத்தைத் தூண்டும் பாட்டினை உடையதான குயில் . |
| மதனம் | காமம் ; மன்மதன் கணைகளுள் புணர்ச்சி விருப்பத்தைத் தருவது ; பெருமிதம் ; இளவேனில் ; வசந்தகாலம் ; தேனீ ; தேன்மெழுகு ; காண்க : மருக்காரை ; கடைகை ; அழிக்கை ; மனக்கலக்கம் ; மௌனம் ; கடல் மீன்வகை . |
| மதனல¦லை | காமவிளையாட்டு . |
| மதனவேள் | மன்மதன் . |
| மதனன் | மன்மதன் ; காமுகன் . |
| மதனாங்குசம் | பெண்குறி ; நகம் . |
| மதனாலயம் | தாமரை ; பெண்குறி . |
| மதனாவத்தை | பிரிவுத்துயர் . |
| மதனி | அண்ணன் மனைவி . |
| மதனைவென்றோன் | அருகக்கடவுள் . |
| மதாசாரம் | சமயவொழுக்கம் . |
| மதாணி | கழுத்தணியின் தொங்கல் ; அணிகலன் . |
| மதாபிமானி | சமயப்பற்றுள்ளவன் . |
| மதார் | செருக்கு . |
| மதாரம் | கத்தூரி ; பன்றி ; யானை . |
| மதாலம் | கொன்றைமரம் . |
| மதாவளம் | யானை . |
| மதாளித்தல் | செழித்து வளர்தல் ; பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக் கெடுதல் . |
| மதி | சந்திரன் ; மாதம் ; ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி ; இராசி ; குபேரன் ; இடைகலை ; காண்க : மதிநாள் ; மதிஞானம் ; கற்கடகராசி ; இயற்கையறிவு ; பகுத்தறிவு ; வேதத்தின்படி நடத்தல் ; மதிப்பு ; காசியபரின் மனைவி ; அசோகமரம் ; அதிமதுரம் ; ஒரு முன்னிலை யசைச்சொல் ; ஒரு படர்க்கை யசைச்சொல் ; யானை . |
| மதிக்கண்ணியான் | சிவபிரான் . |
| மதிக்கணம் | காண்க : சந்திரகணம் . |
| மதிக்கலை | சந்திரகலை ; பதினாறு . |
| மதிக்கொழுந்து | இளஞ்சந்திரன் . |
| மதிகம் | செடிவகை . |
| மதிகூர்மை | காண்க : இந்துப்பு . |
| மதிகேடன் | அறிவில்லாதவன் . |
| மதிகேடி | அறிவில்லாதவள் . |
| மதிகேடு | புத்திக்குறைவு . |
| மதிச்சடையன் | சந்திரனைச் சடையிலே தரித்த சிவபிரான் . |
| மதிசகன் | சந்திரனது தோழனாகிய மன்மதன் . |
| மதிசூடி | காண்க : மதிச்சடையன் . |
| மதிஞன் | அறிஞன் . |
| மதிஞானம் | இயற்கையறிவு . |
| மதித்தல் | அளவிடுதல் ; பொருட்படுத்துதல் ; கருதுதல் ; தியானித்தல் ; துணிதல் ; கடைதல் ; கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; சாதல் ; உப்புதல் . |
| மதிதம் | மோர் ; தயிர் . |
| மதிதிசை | வடக்கு . |
| மதிநாள் | மிருகசீரிடநாள் . |
| மதிநுட்பம் | இயற்கை நுண்ணறிவு . |
| மதிநெறி | சந்திரமரபு . |
| மதிப்ப | ஓர் உவம வாய்பாடு . |
| மதிப்பகை | இராகு . |
| மதிப்பாகம் | பிறைச்சந்திரன் . |
| மதிப்பாகு | பிறைச்சந்திரன் . |
| மதிப்பிள்ளை | பிறைச்சந்திரன் . |
| மதிப்பிளவு | பிறைச்சந்திரன் . |
| மதிப்பு | அளவிடுகை ; சிறப்பிக்கை ; கருத்து ; கடைகை ; கொழுத்திருக்கை . |
| மதிமகன் | புதன் . |
| மதிமண்டலம் | புருவமத்தி ; நாபித்தானம் ; உச்சித்துளையின் நுனிப்பகுதி . |
| மதிமணல் | வெள்ளிமணல் . |
| மதிமயக்கம் | புத்திமாறாட்டம் . |
| மதிமான் | புத்திமான் . |
| மதிமுகம் | சந்திரன்போன்ற முகம் ; மந்திர வித்தைவகை . |
|
|
|