மதிமேகக்கல் முதல் - மந்தமந்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மதிமேகக்கல் குருவிந்தக்கல் .
மதிமை அறிவு .
மதிமோசம் அறிவின்மை .
மதியங்கு ஒரு மணப்பண்டவகை .
மதியந்திரும்புதல் பொழுதுசாய்தல் .
மதியப்பூப்பு சந்திரோதயம் .
மதியம் சந்திரன் ; முழுநிலா ; மாதம் ; நடு ; மத்தியானம் ; மதிப்பு .
மதியாணி காண்க : பகலாணி , நுகத்தின் நடுவாணி .
மதியாணிக்கட்டை காண்க : பகலாணி , நுகத்தின் நடுவாணி .
மதியிலி அறிவில்லாதவர் ; அறிவற்றது .
மதியீனம் புத்திக்குறைவு .
மதியுடம்படுதல் தலைவி தலைவன் கருத்தோடு இணங்கியவளாதல் ; தலைவன் தலைவியர் இருவர்க்கும் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழியுணர்தல் .
மதியுணி இராகு .
மதியுப்பு வளையலுப்பு ; காண்க : இந்துப்பு .
மதியையழைத்தல் காண்க : அம்புலிப்பருவம் .
மதிரம் கள் .
மதிரை கள் .
மதில் கோட்டைச்சுவர் ; சுவர் ; சுவரின் மேற்கட்டு ; இஞ்சி .
மதிலரண் நால்வகை அரண்களுள் ஒன்று .
மதிலுண்மேடை கொத்தளம் .
மதிவல்லோர் அறிவாளர் ; அமைச்சர் .
மதிற்சுற்று சுற்றுமதில் ; பிராகாரம் .
மதிற்சூட்டு கோட்டைமதிலின் தலையீடான உறுப்பு .
மதின்மரம் கோட்டைமதிலின் கதவிலிடுங் கணையமரம் .
மதினி காண்க : மதனி ; மைத்துனி ; மாமன் மகளிருள் தனக்கு மூத்தவள் .
மது தேன் ; கள் ; இலுப்பைப்பூ முதலியவற்றினின்று வடிக்கும் செய்நீர் ; மகரந்தம் ; இனிமை ; நீர் ; அமுதம் ; பால் ; இளவேனில் ; அசோகமரம் ; காண்க : அதிமதுரம் ; திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் .
மதுகந்தம் இருப்பைமரம் ; மகிழமரம் .
மதுகம் வண்டு ; செடிவகை ; தித்திப்பு ; தரா என்னும் உலோகம் ; இருப்பைமரம் ; மதிரை ; எட்டிமரம் ; அழகு .
மதுகரம் தேனீ ; ஆண்வண்டு ; கள் ; வச்சநாபி ; எட்டிமரம் .
மதுகரன் அன்பன் .
மதுகை அறிவு ; வலிமை .
மதுங்குதல் இனிமையாதல் .
மதுசகன் வசந்தனின் நண்பனான மன்மதன் .
மதுசூதனன் மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால் .
மதுசூதன் மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால் .
மதுத்தண்டு கள்ளடைக்கும் மூங்கிற்குழாய் .
மதுத்திருமணம் கரும்பு .
மதுப்பிரமேகம் நீரிழிவு .
மதுபதி காளி ; பார்வதி .
மதுபம் கள் ; வண்டு .
மதுபர்க்கம் தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு .
மதுபருக்கம் தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு .
மதுபானம் கள் ; கட்குடிக்கை .
மதுபானி கட்குடியன் .
மதுமா மாமரம் .
மதுமாமிசம் கள்ளும் இறைச்சியும் .
மதுரகவி நாற்கவிகளுள் இனிமை பெருகப்பாடுங் கவி ; சொற்சுவை ; பொருட்சுவை முதலியன நிரம்பிய பாட்டு ; பன்னிருஆழ்வாருள் ஒருவர் .
மதுரகிரந்தம் இனிய நூல் .
மதுரசம் கரும்பு ; காண்க : கொடிமுந்திரிகை ; சாராயம் ; இனிமை ; பேரீந்து ; பனை .
மதுரம் இனிமை ; நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி ; இன்குணம் ; சமனிசை ; செடிவகை ; காண்க : கொடிமுந்திரிகை ; செஞ்சந்தனமரம் ; முளை ; நஞ்சு ; எட்டிமரம் ; துத்தநாகம் .
மதுரவசனம் இனிமையாகப் பேசுந் திறமை ; வாய்ப்பாட்டு .
மதுரவள்ளி கொம்மட்டிக்கொடி ; சருக்கரை ; வள்ளிக்கொடி .
மதுரவாக்கு இன்சொல் .
மதுரித்தல் தித்தித்தல் ; செவிக்கினியவாதல் ; இனிப்பாகச் செய்தல் .
மதுரேசன் கண்ணபிரான் ; பாண்டியன் ; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோம சுந்தரக் கடவுள் .
மதுரை கள் ; இனிமையானது ; ஒரு நகரம் .
மதுரைச்சங்கம் மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம் .
மதுரைத்தொகை மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம் .
மதுரைமாதெய்வம் மதுரையின் காவற்றெய்வமாகிய மதுராபதி .
மதுரோதயவளநாடு கோயில்பட்டி வட்டத்தைச் சுற்றியுள்ள ஒரு பழந்தமிழ்நாட்டுப் பிரிவு .
மதுவம் கள் ; தேன் ; வண்டு .
மதூகம் இருப்பைமரம் .
மதூத்தம் சிறுநாகப்பூ .
மதைஇய மதர்த்த ; அழகிய ; மடமையான ; வலிய .
மதோமதி பெருங்களிப்புடையாள் .
மதோற்கடம் மதயானை ; யானைமத்தகம் .
மதோன்மத்தன் மிகு களிப்புடையோன் ; செருக்கு மிக்குடையோன் .
மந்தக்குணம் தாமதத்தன்மை ; உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை .
மந்தகதி தாமதநடை ; தாமதத்தன்மை .
மந்தகாசம் புன்னகை ; புன்சிரிப்பு ; காசநோய்வகை .
மந்தகுணம் காண்க : மந்தக்குணம் .
மந்தணம் சூழ்வினை ; கமுக்கம் ; இரகசியம் .
மந்தப்புத்தி அறிவுக்குறைவு ; குறைந்த அறிவுடையவன் .
மந்தம் தாமதம் ; அறிவுமழுக்கம் ; சோம்பல் ; புன்மை ; மென்மைத்தன்மை ; பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை ; படுத்தலிசை ; தென்றல் ; குதிரைநடைவகை ; தனக்கு மாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை ; செரியாமை ; குடிவெறி ; மத்து ; செறிவு ; செவ்வியழியாமை .
மந்தமந்தம் மெல்லமெல்ல .