மந்தமந்திரம் முதல் - மயக்கடி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மந்தமந்திரம் தனக்கு மாத்திரங் கேட்கும்படி உச்சரிக்கும் மந்திரம் .
மந்தமா யானை .
மந்தமாருதம் தென்றல் .
மந்தரம் ஒரு மலை ; மகாமேரு ; துறக்கம் ; கோயில் ; படுத்தலோசை ; 'நி' என்னும் ஏழாம் சுரம் .
மந்தரன் ஒற்றன் ; சோம்பன் .
மந்தல் சோம்பல் .
மந்தவறிவு மழுங்கலான அறிவு .
மந்தவாடை இளவாடைக் காற்று .
மந்தவாரம் சனிக்கிழமை .
மந்தவிசை படுத்தலோசை .
மந்தன் அறிவு மழுங்கியவன் ; தாமதமாக வேலை செய்யும் பணியாளன் ; யமன் ; சனி .
மந்தனம் யானை முகபடாம் ; ஆலோசனை ; காண்க : மந்தணம் .
மந்தாகினி வானகங்கை ; பால்வீதிமண்டலம் ; கங்கையாறு ; அறுபது வயதுள்ளவள் .
மந்தாரச்சிலை ஒரு மருந்துக் கல்வகை .
மந்தாரம் மேகமூட்டம் ; ஐவகைத் தருவிலொன்று ; முள்முருக்கு ; செம்பரத்தை .
மந்தாரம்போடுதல் மேகமூட்டமாயிருத்தல் .
மந்தாரித்தல் மேகமூட்டமாயிருத்தல் .
மந்தாரை ஒரு மரவகை .
மந்தானம் மத்து .
மந்தானிலம் காண்க : மந்தமாருதம் .
மந்தி பெண்குரங்கு ; குரங்கு ; வண்டு ; சூரியன் ; காண்க : ஆடுதின்னாப்பாளை .
மந்தித்தல் தாமதித்தல் ; செரியாமை ; மந்தமடைதல் .
மந்திப்பு சுறுசுறுப்பின்மை ; செரியாமை .
மந்திரக்கலப்பை மந்திரசெபத்துக்குரிய பண்டம் .
மந்திரக்கிழவர் சூழ்வினையாளர் .
மந்திரக்கூறை பூசைப்பட்டு .
மந்திரக்கோட்டி ஆலோசனை செய்யும் சபை .
மந்திரக்கோடி மந்திரவாழ்த்துகளோடு மணமகள் பெறும் கூறைப்புடைவை .
மந்திரகலை மந்திரங்களைக் கூறும் நூல் .
மந்திரகாவி செங்காவி தோய்த்த சன்னியாச உடை .
மந்திரகூடன் தூதன் ; ஒற்றன் ; வேவுகாரன் .
மந்திரகூர்மை இந்துப்பு .
மந்திரச்சுற்றம் அமைச்சர்குழு .
மந்திரசத்தி அமைச்சரின் சூழ்ச்சிவன்மையால் அரசருக்கு உண்டாகும் ஆற்றல் ; மந்திரத்திற்குள்ள ஆற்றல் .
மந்திரசாலை மந்திரிகளுடன் சூழ்வினை புரியும் தனி மண்டபம் .
மந்திரசித்தி மந்திரத்தால் பெற்ற பேறு .
மந்திரத்துணைவர் காண்க : மந்திரக்கிழவர் .
மந்திரத்தோழி தலைவியின் அணுக்கமான பாங்கி .
மந்திரதந்திரம் மந்திரமும் கிரியையும் .
மந்திரபாரகர் சூழ்வினையில் தேர்ந்தவர் .
மந்திரபுட்பம் அஞ்சலியிற்கொண்டு மந்திரம் ஓதித் தூவப்படும் மலர் .
மந்திரம் ஆலோசனை ; அமைச்சர்கள் அவை : எண்ணம் ; வேதமந்திரம் ; காண்க : திருமந்திரம் ; வீடு ; அரண்மனை ; தேவர் கோயில் ; மண்டபம் ; உறைவிடம் ; குகை ; அறச்செயல்வகை ; குதிரைச்சாலை ; குதிரைக்கூட்டம் ; கள் ; யானைவகை ; மேருமலை .
மந்திரமாக்கள் காண்க : மந்திரக்கிழவர் .
மந்திரமாடம் ஆலோசனை செய்யும் மண்டபம் .
மந்திரமாலிகை காண்க : திருமந்திரம் .
மந்திரமாலை காண்க : திருமந்திரம் .
மந்திரமூர்த்தி மந்திரநாயகன் ; மந்திரவடிவமான கடவுள் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் .
மந்திரர் அமைச்சர் .
மந்திரவாதி மந்திரவித்தைக்காரன் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் .
மந்திரவித்தை ஒரு தேவதையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை ; மந்திரங்களைப் பற்றிய வித்தை ; மாயவித்தை .
மந்திரவிதி மந்திரம் பயன்படுத்தும் முறை .
மந்திரவீதி மாடவீதி .
மந்திரவோலை அரசன் திருமுகம் .
மந்திராலோசனை அரசன் அமைச்சர்களுடன் ஆராய்கை .
மந்திரி அமைச்சன் ; வியாழன் ; சுக்கிரன் ; குபேரன் ; வரும்பொருள் உரைப்போன் ; படைத்தலைவன் ; புதன் ; பித்தம் ; காண்க : திராய் .
மந்திரித்தல் மந்திர ஆற்றலால் அடக்குதல் ; மந்திரத்தால் சக்தியுண்டாகச்செய்தல் ; மந்திரத்தால் தியானித்தல் ; ஆலோசித்தல் ; மந்திரஞ்செபித்தல் ; தீயுரைசொல்லுதல் .
மந்தினி தயிர்கடை தாழி ; காண்க : ஆடுதின்னாப்பாளை .
மந்து அரசன் ; மனிதன் ; குற்றம் ; நாய்வேளைப் பூண்டு ; காண்க : மந்துகால் .
மந்துகால் யானைக்கால்நோய் .
மந்துரம் குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .
மந்துரை குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .
மந்தை ஆடுமாடுகளின் கூட்டம் ; பொதுமேய்ச்சலிடம் ; ஊர்ப்பொது வெளியிடம் ; சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி .
மந்தைக்கல் காண்க : ஆவுரிஞ்சுதறி .
மந்தைமறித்தல் மந்தையைக் காத்தல் .
மந்தையன் அறிவுமழுங்கியவன் .
மந்தைவெளி மேய்ச்சல்நிலம் ; கால்நடையை அடைத்துவைக்கும் அடைப்பிடம் .
மப்பன் காண்க : மந்தையன் .
மப்பு மேகமூட்டம் ; செரியாமை ; மயக்கம் ; மட்டித்தனம் ; செருக்கு .
மப்புமந்தாரம் மேகமூட்ட நிலை .
மம்மட்டி மண்வெட்டி ; சிற்றாமுட்டிச்செடி .
மம்மர் அறியாமையாகிய மயக்கம் ; துயரம் ; கல்லாமை ; காமம் .
மம நற்பேறு ; நீர் ; என்னுடைய .
மமகாரம் செருக்கு .
மமதை செருக்கு .
மயக்கடி மயக்கம் ; குடிவெறி .