சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மயக்கம் | அறிவின் திரிபு ; அவித்தை ; பிழைபட உணர்கை ; விரகநோய் ; மூர்ச்சை ; படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு ; கூடல் ; கலப்பு ; எழுத்துப்புணர்ச்சி ; சாவுச்சடங்கினுள் ஒன்று ; சோம்பேறித்தனம் . |
| மயக்கவணி | ஒற்றுமைபற்றி ஒரு பொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி . |
| மயக்கிடை | காண்க : மயக்கம் . |
| மயக்கிமாலை | தந்திரக்காரி , விரகி . |
| மயக்கு | காண்க : மயக்கம் ; போர்செய்கை ; வியக்கச்செய்யும் செயல் . |
| மயக்குதல் | மனங்குழம்பச் செய்தல் ; மலைக்கச் செய்தல் ; தன்வயமிழக்கச் செய்தல் ; கலத்தல் ; சேர்த்தல் ; சிதைத்தல் ; நிலைநெகிழ்த்துதல் ; ஊடல் உணர்த்துதல் ; மூர்ச்சையடையச் செய்தல் . |
| மயங்கக்கூறல் | நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் . |
| மயங்கவைத்தல் | நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் . |
| மயங்கியோர் | அறிவுதிரிந்தோர் . |
| மயங்குகால் | சுழல்காற்று . |
| மயங்குதல் | மருளுதல் ; தன்னை மறத்தல் ; வெறிகொள்ளுதல் ; மாறுபடுதல் ; நிலையழிதல் ; வருந்துதல் ; தாக்கப்படுதல் ; ஐயுறுதல் ; தயங்குதல் ; கலத்தல் ; போலுதல் ; நெருங்குதல் ; கைகலத்தல் ; அறிவுகெடுதல் ; கலக்கமுறுதல் ; உணர்ச்சியிழத்தல் . |
| மயங்குதிணைநிலைவரி | வரிப்பாட்டுவகை . |
| மயத்தல் | மயங்குதல் . |
| மயம் | அழகு ; தன்மை ; நிறைவு ; சொத்து ; பொருள் ; மகிழ்ச்சி ; செருக்கு ; கோமயம் ; ஒட்டகம் . |
| மயர் | மயக்கம் . |
| மயர்தல் | மயங்குதல் , உணர்வறுதல் ; சோர்தல் ; திகைத்தல் . |
| மயர்வு | அறியாமை ; சோர்வு ; அறிவுமயக்கம் . |
| மயரி | உன்மத்தன் ; காமுகன் ; அறிவீனன் . |
| மயல் | மயக்கம் ; பைத்தியம் ; ஆசை ; காமவிருப்பு ; மாயை ; ஐயம் ; அச்சம் ; செத்தை ; நெருப்பு ; மந்தம் ; பிசாசம் . |
| மயற்கை | செத்தை ; மயக்கம் . |
| மயற்பகை | பித்து ; பித்துக்குக் காரணமாகிய மருந்து . |
| மயன் | தச்சன் ; சிற்பி ; அசுரத்தச்சன் ; கின்னரன் . |
| மயானக்கரை | காண்க : மயானம் . |
| மயானக்கிரியை | ஈமச்சடங்கு . |
| மயானம் | சுடுகாடு . |
| மயானவாசினி | சுடுகாட்டில் இருப்பவளாகிய துர்க்கை . |
| மயானவைராக்கியம் | மயானத்தைக் கண்டதும் உடல் அழியுந்தன்மை உடையதென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை ; இறக்கும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்து கொள்வதாக மணமக்கள் கூறும் உறுதிமொழி . |
| மயிடம் | எருமை ; இலவம்பிசின் . |
| மயிடற்செற்றாள் | துர்க்கை . |
| மயிந்துதல் | பதுங்குதல் . |
| மயிர் | உரோமம் ; சாமரை ; தூவி . |
| மயிர்க்கட்டு | தலைமயிர்முடிச்சு ; தலைப்பாகை . |
| மயிர்க்கத்தி | சவரக்கத்தி . |
| மயிர்க்கால் | மயிர்த்துளை . |
| மயிர்க்கிடுகு | மயிர்செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம் . |
| மயிர்க்கிடை | மயிரின் அகலவளவு . |
| மயிர்க்குச்சு | மயிர்சிலிர்த்தல் ; துகிலிகை ; கொண்டையூசி ; தலையணிவகை . |
| மயிர்க்குச்செறிதல் | உடம்பு சிலிர்த்தல் . |
| மயிர்க்குட்டி | காண்க : மயிர்ப்புழு . |
| மயிர்க்குடி | மயிர்ச்செறிவு . |
| மயிர்க்குழற்சி | மயிர்க்குழைவு ; உடம்பு சிலிர்த்தல் . |
| மயிர்க்கூச்சு | மயிர்சிலிர்க்கை . |
| மயிர்க்கேடகம் | காண்க : மயிர்க்கிடுகு . |
| மயிர்க்கோள் | காண்க : மயிர்க்கூச்சு . |
| மயிர்கழித்தல் | மழித்தல் , சவரஞ்செய்தல் . |
| மயிர்களைதல் | மழித்தல் , சவரஞ்செய்தல் . |
| மயிர்களைவோன் | காண்க : மயிர்வினைஞன் . |
| மயிர்குறைகருவி | மயிர்க்கத்திரி ; சவரக்கத்தி . |
| மயிர்ச்சந்தனம் | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சாந்தம் | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சாந்து | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சிகைப்பூண்டு | காண்க : அரிவாள் முனைப்பூண்டு . |
| மயிர்ச்சுருள் | மயிர்க்குழைவு ; மயிரின் சுருள் . |
| மயிர்ச்சேணம் | மயிரடைத்துச் செய்த மெத்தை . |
| மயிர்த்தவிசு | மயிரடைத்துச் செய்த இருக்கை . |
| மயிர்ப்படம் | கம்பளியாடை . |
| மயிர்ப்பாடு | மயிர் செறிந்து தோன்றுகை . |
| மயிர்ப்பிளவை | தலைப்பொடுகு . |
| மயிர்ப்புழு | கம்பளிப்பூச்சி . |
| மயிர்பிடித்துக்கொள்ளுதல் | சண்டைபோடுதல் . |
| மயிர்பொடித்தல் | மயிர்சிலிர்த்தல் . |
| மயிர்மாட்டி | ஓர் அணிகலவகை . |
| மயிர்மாணிக்கம் | அரிவாள்முனைப்பூண்டு ; ஒரு செடிவகை ; பூடுவகை ; மரவகை ; கொடிவகை ; கோரோசனை . |
| மயிர்முடி | முடிந்த மயிர் . |
| மயிர்முள் | முள்ளம்பன்றியின் மயிர் . |
| மயிர்வாங்கி | காண்க : சிமிட்டா . |
| மயிர்வாரி | சீப்பு . |
| மயிர்வினை | சவரம் ; குழந்தைகளுக்கு முதன் முதலில் மயிர்கழிக்கும் சடங்கு ; கத்திரிக்கோல் ; காண்க : மயிர்வினைஞன் ; சவரக்கத்தி . |
| மயிர்வினைஞன் | நாவிதன் . |
| மயிரிழவு | துன்பக்குறியாக மயிர்நீக்குகை . |
| மயிருதிரல் | வழுக்கைநோய் . |
| மயிரெறிகருவி | காண்க : மயிர்குறைகருவி . |
| மயிரெறிதல் | மயிர் சிலிர்த்தல் . |
| மயிரொழுக்கு | மயிர்வரிசை . |
| மயிரொழுங்கு | மயிர்வரிசை . |
|
|
|