சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மயில் | பறவைவகை ; செடிவகை ; சிறு மரவகை ; இருக்கைவகை . |
| மயில்வாகனன் | மயிலேறிச் செல்லும் முருகக் கடவுள் . |
| மயில்விசிறி | மயில்தோகையால் அமைந்த ஆலவட்டம் . |
| மயிலடி | மாதர் காலணியுள் ஒன்று , காற்பீலி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; எருமை . |
| மயிலம் | மயிலிறகு ; ஓர் ஊர் ; பருத்திவகை ; குப்பைமேனி . |
| மயிலாப்பு | மயிலாப்பூர் . |
| மயிலாபுரி | மயிலாப்பூர் . |
| மயிலார் | கன்னிப்பெண்கள் நோற்கும் சடங்குவகை ; பொங்கற்பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வவழிபாடு . |
| மயிலாளி | மயிலை ஏறி ஆள்வோனாகிய முருகக்கடவுள் . |
| மயிலியம் | செடிவகை . |
| மயிலியல் | மயில்போலுஞ் சாயலுள்ள பெண் . |
| மயிலூர்தி | காண்க : மயில்வாகனன் . |
| மயிலெண்ணெய் | மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய்வகை . |
| மயிலெள் | ஓர் எள்வகை . |
| மயிலை | இருவாட்சி ; மீன் ; மீனராசி ; காண்க : வெட்சி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; மயிலாப்பூர் ; அழுக்கு ; வெண்மை கலந்த கருநிறம் . |
| மயிலைநந்தி | ஒரு செடிவகை . |
| மயிலைப்பச்சை | கருமை கலந்த பச்சை . |
| மயிற்கழுத்து | மயிலின் கழுத்து உருவும் வண்ணமுமமைந்த மாலைவகை . |
| மயிற்கூத்து | ஒரு காலை யூன்றி ஒரு காலைத் தூக்கியாடுங் கூத்துவகை ; ஒன்றை நாட்டும் வழி மற்றொன்று விட்டுப்போவதைக் காட்டும் ஒருவகை நியாயம் . |
| மயிற்கொடி | தாலிவகை ; முருகக்கடவுட்குரிய மயில் எழுதிய கொடி . |
| மயிற்கொன்றை | ஒரு செடிவகை ; ஒரு மரவகை . |
| மயிற்கொன்றைமரம் | கொன்றை மரவகை . |
| மயிற்சிகை | மயிலின் கொண்டை ; ஒரு கொடிவகை . |
| மயிற்பகை | பச்சோந்தி . |
| மயிற்பிச்சம் | மயிலிறகால் செய்த குடை ; மயில்தோகை விசிறி . |
| மயிற்பீலி | மயிலிறகு ; மயில்தோகை விசிறி . |
| மயிற்பீலிக்குடை | மயிலிறகாற் செய்த குடை . |
| மயிற்றுத்தம் | ஒரு மருந்துவகை . |
| மயிற்றோகை | வாலாக நீண்ட மயிலின் இறகு . |
| மயூகம் | அழகு ; நாழிகைவட்டத்தின் ஊசிநிழல் ; கதிர் ; சுடர் ; ஒளி . |
| மயூரகதி | குதிரைநடை ஐந்தனுள் ஒன்று . |
| மயூரகம் | மயில் ; மருந்துவகை ; நாயுருவிச்செடி ; நாய்வேளைப்பூண்டு ; காண்க : மயூரகதி ; செடிவகை . |
| மயூரம் | மயில் ; சிறுமரம் ; ஆசனவகை ; காண்க : மயூரகதி ; செடிவகை . |
| மயூராரி | பல்லி ; பச்சோந்தி . |
| மயேச்சுரன் | சிவபிரான் ; யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் . |
| மயேசன் | சிவபிரான் . |
| மயேசுரன் | சிவபிரான் . |
| மயேசுவரன் | சிவபிரான் . |
| மயேசுவரி | பார்வதி . |
| மயேடம் | இலவம்பிசின் . |
| மயேந்திரசாலம் | மாயவித்தைகளுள் ஒன்று ; வியத்தகு செயல் செய்யும் வித்தை . |
| மயேனம் | வால்மிளகு . |
| மர்க்கடகம் | பெருங்காயம் . |
| மர்க்கடம் | குரங்கு . |
| மர்க்கடமுட்டி | குரங்குப்பிடி . |
| மர்த்தித்தல் | காண்க : மத்தித்தல் . |
| மர்த்தியம் | நிலவுலகம் . |
| மர்மம் | காண்க : மருமம் . |
| மரக்கண் | காண்க : மரக்கணு ; புலனற்ற கண் ; மரப்பாவையின் கண் . |
| மரக்கணு | மரத்தில் கிளையுண்டாகும் முடிச்சு . |
| மரக்கரி | அடுப்புக்குப் பயன்படும் கரி . |
| மரக்கலம் | கப்பல் . |
| மரக்கறி | காய்கறி ; சமைத்த காய்கறியுணவு . |
| மரக்கன்று | இளமரம் . |
| மரக்கா | பூஞ்சோலை ; ஓர் அளவுவகை . |
| மரக்காயர் | தமிழ்த் துலுக்கவகையினர் ; மரக்கலம் ஓட்டுபவர் . |
| மரக்கால் | முகத்தலளவைக் கருவி ; ஓர் அளவு வகை ; ஒரு மரக்கால் விதைப்பாடு ; ஒரு குறுணி ; ஆண்டுமழையின் அளவு ; மரத்தாற் செய்த பாதம் ; திருமால் கூத்துவகை ; கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து ; உப்பளம் ; ஆயிலியநாள் ; சோதிநாள் . |
| மரக்காலாடல் | கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து . |
| மரக்காழ் | மரவயிரம் . |
| மரக்காளான் | மரத்தில் முளைக்கும் காளான் வகை . |
| மரக்காற்கூத்து | திருமால் கூத்து ; காண்க : மரக்காலாடல் . |
| மரக்கானாரை | நாரைவகை . |
| மரக்கோவை | காண்க : மரக்கலம் . |
| மரகதக்குணம் | நெய்த்தல் , கிளிக்கழுத்தொத்தல் , மயிற்கழுத்தொத்தல் , பயிரிற் பசுத்தல் , பொன்மையுடன் பசுத்தல் , பத்திபாய்தல் , பொன்வண்டின் வயிறொத்தல் , தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சைமணிக்குணம் . |
| மரகதக்குற்றம் | கருகல் , வெள்ளை , கல் , மணல் , கீற்று , பொரிவு , தராசம் , இறுகுதல் என்னும் எண்வகையான பச்சைமணிக் குற்றம் . |
| மரகதநாயகம் | நடுவிற் பச்சைக்கல் வைத்து இழைத்த காலாழிவகை . |
| மரகதப்பச்சை | நாகப்பச்சை . |
| மரகதம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்றான பச்சைமணி ; பச்சைநிறம் . |
| மரகதமேனியன் | திருமால் . |
| மரகதவல்லி | பார்வதி ; அறக்கடவுள் . |
| மரகதன் | குபேரன் . |
| மரங்கொத்தி | ஒரு பறவைவகை . |
| மரச்சக்கை | சிறாய் . |
| மரச்செவி | மரப்பாவையின் காது ; சற்றுங் கேளாத காது . |
| மரச்செறிவு | சோலை . |
|
|
|