சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மரணக்கொடி | இறப்பச்சம் . |
| மரணசனி | சாவைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றுமுறை வருவதுமான ஏழரையாண்டுச் சனி . |
| மரணசாசனம் | சாகுந்தறுவாயில் ஒருவன் தன் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைக் குறித்து எழுதிவைக்கும் ஆவணம் , இறுதிமுறி . |
| மரணதண்டணை | உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை . |
| மரணம் | சாவு ; ஐவகை அவத்தையுள் மிகு மயக்கமும் அயர்ச்சியும் உண்டாகும் நிலை . |
| மரணயோகம் | கெடுதியை விளைவிக்கும் யோகவகை ; தீங்கைக் குறிக்கும் வேளை . |
| மரணவாக்குமூலம் | சாவு நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி . |
| மரணவேதனை | சாகும்வேளையிற் படும் அவத்தை . |
| மரணித்தல் | சாதல் . |
| மரணை | சாதல் ; நினைவு ; உணர்ச்சி . |
| மரத்தல் | காண்க : மரத்துப்போதல் . |
| மரத்தார் | பகுத்தறிவில்லாதவர் . |
| மரத்துப்பால் | கள் . |
| மரத்துப்போதல் | கால் முதலியன உணர்ச்சியற்றுப்போதல் ; விறைத்தல் ; திகைத்தல் . |
| மரத்தோல் | காண்க : மரப்பட்டை , மரவுரி . |
| மரந்தம் | பூந்தேன் . |
| மரந்தலை ஆயக்கட்டு | ஊரிலுள்ள மரங்களின் விவரங்குறிக்கும் பட்டி . |
| மரநாய் | விலங்குவகை . |
| மரப்பட்டை | மரத்தின்மேலுள்ள தோல் . |
| மரப்பத்தல் | இறைமரம் . |
| மரப்பந்தர் | சோலை . |
| மரப்பாச்சி | சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை . |
| மரப்பாவை | சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை . |
| மரப்புணை | மரத்தால் செய்யப்பட்ட தெப்பம் . |
| மரப்பெட்டி | மரத்தாலான பெட்டி . |
| மரப்பொது | சோலை . |
| மரபியல் | முன்னோர் வழங்கிய சொல்வழக்கைக் கூறும் இலக்கணப்பகுதி . |
| மரபினோர் | வழித்தோன்றியவர் ; மூதாதையர் ; ஒரு குடியினர் ; சுற்றத்தார் . |
| மரபு | முறைமை ; சான்றோரின் சொல்வழக்குமுறை ; பழைமை ; வமிசம் ; பாரம்பரியம் ; இயல்பு ; இலக்கணம் ; நல்லொழுக்கம் ; பெருமை ; பாடு ; நியாயம் ; வழிபாடு ; பருவம் . |
| மரபுச்சொல் | ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் . |
| மரபுப்பெயர் | ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் . |
| மரபுமயக்கம் | தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது . |
| மரபுவழு | தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது . |
| மரபுவழுவமைதி | மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது . |
| மரபுளோர் | காண்க : மரபினோர் . |
| மரம் | உள்வயிரமுள்ள தாவரம் ; அறுக்கப்பட்ட மரம் ; மூலிகை ; தொழுமரம் ; மரக்கலம் ; காண்க : இயமரம் ; உழுத வயலைச் சமப்படுத்தும் பலகை . |
| மரமஞ்சள் | ஒரு கொடிவகை . |
| மரமுலை | ஆண் பெண்ணுருக் கொள்ளும்போது கட்டிக்கொள்ளும் பொய்ம்முலை . |
| மரமேறி | கள் இறங்குவதற்குத் தென்னை , பனை முதலிய மரமேறுஞ் சாணான் . |
| மரயம் | புளியம்புறணி . |
| மரல் | சிறு செடிவகை . |
| மரல்மஞ்சி | மரல்நார் . |
| மரலுகம் | குங்குமப்பூ . |
| மரவட்டணம் | மரத்தட்டு ; நெடும்பரிசை . |
| மரவட்டை | பூச்சிவகை ; மரவகை . |
| மரவடி | பாதக்குறடு . |
| மரவம் | குங்குமமரம் ; வெண்கடம்பு ; மரவகை . |
| மரவள்ளி | ஒரு செடிவகை . |
| மரவாடி | மரக்கடை . |
| மரவாணி | மரத்தாலாகிய ஆணி . |
| மரவிடை | பயன்தரும் மரம் ; பத்திரம் எழுதுவோர் விற்கும் நிலத்திலுள்ள மரங்களைக் குறிக்கும் சொல் . |
| மரவினைஞர் | தச்சர் . |
| மரவினையாளர் | தச்சர் . |
| மரவுப்பு | ஓர் உப்புவகை . |
| மரவுரல் | மரத்தாலான உரல் . |
| மரவுரி | மரப்பட்டையால் செய்த ஆடை ; முனிவர் உடுக்கும் மரப்பட்டை ஆடைவகை ; மரவகை ; காண்க : சீரகம் . |
| மரவை | மரத்தாலான பாண்டம் . |
| மராட்டம் | புறமயிர் ; பெண்மயிர் ; மகாராட்டிர மாநிலம் ; இடம் . |
| மராடி | மரத்தின் அடிப்பகுதி ; பாதுகை . |
| மராம் | வெண்கடப்பமரம் ; கடப்பமரம் ; காண்க : செங்கடம்பு . |
| மராமத்திலாகா | பொதுப்பணித்துறை . |
| மராமத்து | கட்டடம் முதலியவற்றின் சீர்திருத்த வேலை . |
| மராமரம் | அரசமரம் ; ஆச்சாமரம் . |
| மராளம் | அன்னம் ; பூநாரை ; பாம்பு ; மாதுளை . |
| மரிச்சம் | மாமரம் . |
| மரிசம் | மிளகு . |
| மரிசி | புது வரம்புவழி ; செடி . |
| மரிசிதம் | பொறுமை . |
| மரிசு | வரம்பு ; வரம்பருகு . |
| மரித்தல் | சாதல் ; நினைத்தல் . |
| மரியவர் | பின்பற்றி நடப்பவர் . |
| மரியாதை | சிறப்பான நடக்கை ; சாதியொழுக்கம் ; நேர்மையான ஒழுக்கம் ; நீதி ; விதம் ; வரம்பு ; நன்கொடை . |
| மரியாதைக்காரன் | நல்லொழுக்கமுள்ளவன் ; சிறப்பித்தற்குரியவன் . |
| மரியாதைப்பிழை | மதிப்புக் குறைவான நடத்தை . |
| மரீசம் | காண்க : மரிசம் . |
|
|
|