சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மரீசி | பிரமன் புதல்வர்களுள் ஒருவரான முனிவர் ; மிளகு ; கதிர் ; வரம்பு . |
| மரீசிகை | கானல் . |
| மரீசினம் | வால்மிளகு . |
| மரு | மணம் ; மருக்கொழுந்து , ஒரு மணச்செடி ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து ; இடம் ; நீரும் நிழலுமற்ற இடம் ; மலை . |
| மருக்கட்டி | மச்சம் ; பாலுண்ணி . |
| மருக்கம் | காற்று ; குரங்கு ; உடம்பு ; மிளகு ; காண்க : மருக்கொழுந்து . |
| மருக்காரை | சிறுமரவகை ; காரைவகை . |
| மருக்கொழுந்து | ஒரு மணச்செடிவகை . |
| மருக்கொழுந்துசக்களத்தி | அளத்துப்பச்சை ; மரவகை ; பூடுவகை . |
| மருகம் | மான்வகை ; ஆதொண்டைச்செடி . |
| மருகன் | காண்க : மருமகன் ; மகளின் கணவன் ; வழித்தோன்றல் . |
| மருகி | காண்க : மருமகள் . |
| மருகு | ஒரு மணச்செடிவகை ; பூண்டுவகை ; காட்டுமல்லிகை ; மகரவாழை ; மருகன் ; காண்க : மருமகன் ; வழித்தோன்றல் . |
| மருங்கு | பக்கம் ; விலாப்பக்கம் ; இடை ; வடிவு ; எல்லை ; இடம் ; சுவடு ; சுற்றம் ; குலம் ; ஒழுங்கு ; செல்வம் ; நூல் . |
| மருங்குல் | இடை , இடுப்பு ; வயிறு ; உடம்பு . |
| மருங்குற்பக்கம் | இடுப்பு . |
| மருங்கை | பிள்ளைபெற்ற ஐந்தாம் நாள் . |
| மருச்சகன் | இந்திரன் ; அக்கினி . |
| மருச்சுதன் | வீமன் ; அனுமான் . |
| மருஞ்சகம் | காண்க : இரசகருப்பூரம் . |
| மருட்கை | மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு ; மயக்கம் . |
| மருட்சி | பொய்யுணர்வு ; மயக்கம் . |
| மருட்டம் | மயக்கந்தருவது ; ஏமாற்று ; கள் . |
| மருட்டி | மயக்கந்தருவது ; கள் ; மயங்கும்படி மினுக்குபவள் . |
| மருட்டு | அச்சுறுத்துகை ; மயக்குகை . |
| மருட்டுதல் | மயக்குதல் ; அச்சுறுத்துதல் ; மாறுபடச் செய்தல் ; ஒத்தல் ; மனங்கவியச் செய்தல் ; ஏமாற்றுதல் ; மறக்கச்செய்தல் . |
| மருட்பா | வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் செய்யுள்வகை . |
| மருண்மா | யானை . |
| மருண்மாலை | அந்திநேரம் . |
| மருத்தன் | மருத்துவன் ; வாயுபகவான் . |
| மருத்தீடு | வசியமருந்திடுகை ; வசியமருந்து இடுதலால் வரும் நோய்வகை . |
| மருத்து | காற்று ; வாயுதேவன் ; வாதநோய் . |
| மருத்துச்சஞ்சீவி | மருந்தாக உதவும் புல் , மரம் , புதல் , பூடு , கொடி முதலியன . |
| மருத்துண்ணி | காற்றை உண்ணும் பாம்பு . |
| மருத்துபலம் | ஆலங்கட்டிமழை . |
| மருத்துபாலன் | இந்திரன் . |
| மருத்துவக்கலைஞன் | காண்க : மருத்துவநூலோன் . |
| மருத்துவச்சி | மருந்து கொடுத்து நோய் நீக்குபவள் ; மகப்பேற்றுக்கு உதவுவோள் . |
| மருத்துவதி | தாமிரபரணி . |
| மருத்துவநாள் | அசுவினிநாள் . |
| மருத்துவநூலோன் | மருத்துவன் . |
| மருத்துவப்பதம் | பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை . |
| மருத்துவம் | வைத்தியம் ; மருந்து ; பரிகாரம் ; மகப்பேறு பார்க்கும் தொழில் ; ஒரு யாழ் வகை . |
| மருத்துவர் | வைத்தியர் ; அசுவினிதேவர் . |
| மருத்துவன் | வைத்தியன் ; இந்திரன் . |
| மருத்துவான் | வைத்தியன் ; இந்திரன் . |
| மருத்துவி | மருத்துவம் செய்பவள் . |
| மருத்துவிச்சி | காண்க : மருத்துவச்சி . |
| மருதக்கிழவன் | மருதநிலத் தலைவன் ; மருத நிலத்துக்குரிய கடவுளான இந்திரன் . |
| மருதணி | ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் ; செடிவகை . |
| மருதத்திணை | ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சூழ்ந்த இடமும் . |
| மருதநாதன் | காண்க : மருதநிலவேந்தன் . |
| மருதநிலப்பறை | மருதநிலத்துக்குரிய பறை . |
| மருதநிலம் | காண்க : மருதத்திணை . |
| மருதநிலவேந்தன் | இந்திரன் . |
| மருதப்பண் | மருதநிலத்துக்குரிய காலைப்பண் வகை . |
| மருதப்பறை | காண்க : மருதநிலப்பறை . |
| மருதம் | காண்க : மருதத்திணை , மருதப்பண் ; அகத்திணை ஏழனுள் ஒன்றானதும் ஊடியுங் கூடியும் இன்பம் நுகர்வதுமான ஒழுக்கம் ; வயல் ; மருதமரம் . |
| மருதயாழ் | மருதநிலத்துக்குரிய யாழ்வகையுள் ஒன்று ; காண்க : மருதப்பண் . |
| மருதயாழ்த்திறம் | நவிர் , வடுகு , வஞ்சி , செய்திறம் என நால்வகைப்பட்ட மருதப் பண்வகை . |
| மருதவைப்பு | காண்க : மருதம் . |
| மருதாணி | காண்க : மருதோன்றி . |
| மருது | நீர்மருது ; கருமருது ; பூமருது . |
| மருதூணி | ஒரு மரவகை ; செடிவகை . |
| மருதோன்றி | ஒரு மரவகை ; செடிவகை . |
| மருந்தகம் | மருந்து கிடைக்குமிடம் ; மருந்து விற்குமிடம் . |
| மருந்தம் | நஞ்சு ; பாடாணவகை . |
| மருந்திடல் | வசியமருந்து கொடுக்கை ; கருவுற்றாளுக்கு மருந்துகொடுக்குஞ் சடங்கு . |
| மருந்தீடு | காண்க : மருத்தீடு . |
| மருந்து | அமுதம் ; ஔடதம் ; பரிகாரம் ; வசிய மருந்து ; சோறு ; குடிதண்ணீர் ; இனிமை ; வெடிமருந்து ; முள்ளுக்கடம்பு ; புதற்புல் என்னும் புல்வகை . |
| மருந்துக்குக்கூட | கொஞ்சமும் . |
| மருந்துக்கும் | கொஞ்சமும் . |
| மருந்துச்சரக்கு | மருந்து செய்ய உதவும் பண்டம் . |
| மருந்துச்சாலை | மருந்துச்சரக்கு விற்கும் கடை ; வெடிமருந்துக் கிடங்கு . |
| மருந்துபோடுதல் | காண்க : மருந்துவைத்தல் ; பூச்சிமருந்து தெளித்தல் . |
|
|
|