மருந்துவைத்தல் முதல் - மல்லூகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மருந்துவைத்தல் வசியமருந்திடுதல் .
மருந்தெண்ணெய் மருந்துச்சரக்குகள் கூட்டிக் காய்ச்சிய தைலம் .
மருநிலம் நீரும் நிழலுமற்ற நிலம் .
மருப்பு விலங்கின் கொம்பு ; யானைத்தந்தம் ; யாழின் உறுப்புவகை ; மரக்கொம்பு ; பிறைச்சந்திரனின் இருகோடு ; இஞ்சி .
மருப்புத்தாடி யானைத் தந்தத்தாற் செய்த விரலுறை .
மருபுகா ஒரு வாழைவகை .
மருபூ காண்க : மருநிலம் .
மருமக்கட்டாயம் மலையாளத்தில் ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடையும் உரிமைமுறை .
மருமக்கள் ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள் ; ஒருத்தியின் உடன்பிறந்தான் மக்கள் .
மருமகப்பிள்ளை காண்க : மருகன் .
மருமகள் மகன் மனைவி ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள் ; ஒருவனின் உடன்பிறந்தாள் மகள் .
மருமகன் மகள் கணவன் ; ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன் .
மருமதாரை உயிர்நிலை ; மார்பு .
மருமம் காண்க : மருமதாரை ; விதைப்பை ; கமுக்கம் , இரகசியம் ; உடம்பு .
மருமராஞ்சம் வில்லின் நாணொலி ; காற்றால் அசையுஞ் சீலையாலும் இலையாலும் எழும் ஒலி .
மருமாட்டி வழித்தோன்றியவள் ; மருமகள் .
மருமான் காண்க : மருமகன் ; வழித்தோன்றல் .
மருவகம் காண்க : மருக்காரை ; மருக்கொழுந்து ; கடாரநாரத்தை .
மருவலர் பகைவர் .
மருவலார் பகைவர் .
மருவார் பகைவர் .
மருவாளி பச்சைக்கருப்பூரம் ; வைப்புச் சூடன் வகை .
மருவிதழ் பூவிதழ் .
மருவீட்டுச்சடங்கு திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு .
மருவீடு திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு .
மருவு மருவுகை ; மணம் ; மணச்செடிவகை ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து .
மருவுதல் கலந்திருத்தல் ; வழக்கப்படுதல் ; தோன்றுதல் ; கிட்டுதல் ; தழூவுதல் ; பயிலுதல் ; புணர்தல் ; தியானித்தல் ; பதித்தல் .
மருள் மயக்கம் ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; உன்மத்தம் ; கள் ; குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று ; பண்வகை ; எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை ; சிறு செடிவகை ; புதர் ; பேய் ; ஆவேசம் ; புல்லுரு .
மருள ஓர் உவமஉருபு .
மருளல் அஞ்சல் ; மயங்கல் ; எழுத்திலாவோசை ; பேசலால் எழும் ஒலி ; வியத்தல் ; ஒப்பாதல் .
மருளன் அறிவுமயக்கமுள்ளவன் ; தெய்வமேறப் பெற்றவன் ; மதவெறிப்பிடித்தவன் .
மருளாளி பேயாவேசங்கொண்டு குறி சொல்லும் பூசாரி ; ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன் .
மருளி மயக்கம் ; புத்திமயக்கமுள்ளவன் .
மருளிந்தம் ஒரு பண்வகை .
மருளிந்தராகம் ஒரு பண்வகை .
மருளிந்தளம் ஒரு பண்வகை .
மருளுதல் மயங்குதல் ; வெருவுதல் ; வியத்தல் ; ஒப்பாதல் .
மருளூமத்தை ஊமத்தைவகை .
மரூஉ நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் .
மருஉமொழி நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் .
மரை ஒரு மான்வகை ; காட்டுப்பசு ; தவளை ; இரத்தினக்குற்றம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; தாமரை .
மரைக்காயர் துருக்கரில் ஒருவகையார் .
மரைக்கிட்டி வில்முடுக்கு .
மரைநீகம் தவளை .
மரையா காட்டுப்பசு .
மரையாடு ஆட்டுவகை .
மரையான் காண்க : மரையா .
மல் வளம் ; வருவாய் ; வலிமை ; மல்தொழில் ; மற்போர் செய்பவன் ; திருமாலாடிய கூத்து ; பருமை ; காண்க : மல்லுச்சட்டம் ; துகில்வகை .
மல்காத்தல் காண்க : மல்லாத்தல் .
மல்குதல் நிறைதல் ; செழித்தல் ; அதிகமாதல் .
மல்லகசாலை மல்வித்தை பயிலுமிடம் .
மல்லகதி குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று .
மல்லசம் மிளகு .
மல்லம் மற்போர் ; மல்லகதி ; வலிமை ; கிண்ணம் ; தட்டம் ; கதுப்பு ; வேள்வியில் எஞ்சியது ; பள்ளியறை .
மல்லமார்க்கம் காண்க : மல்லகதி .
மல்லயுத்தம் அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்றான மற்போர் .
மல்லர் மற்போர் செய்வோர் ; வலியர் ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் .
மல்லரங்கம் காண்க : மற்பயிலிடம் .
மல்லரி பறைவகை .
மல்லல் வளம் ; வலிமை ; மிகுதி ; பொலிவு ; அழகு ; செல்வம் .
மல்லன் மற்போர் செய்வோன் ; பெருமையிற் சிறந்தோன் .
மல்லாக்கடித்தல் காண்க : மல்லாத்தல் .
மல்லாட்டம் சண்டை .
மல்லாடல் திருமால் கூத்தினுள் ஒன்று .
மல்லாத்தல் மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் ; தோற்றுப்போதல் .
மல்லாத்துதல் முதுகுகீழாக முகம் மேலாகக் கிடக்கச்செய்தல் .
மல்லாய் இரப்போர் கலம் .
மல்லாரி பறைவகை ; பண்வகை ; சண்டைக்காரி .
மல்லி குடமுல்லை ; காண்க : எருமைமுல்லை ; காட்டுமல்லி ; பருத்துத்தடித்தவள் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; பேராமல்லிகை ; கொத்துமல்லி .
மல்லிகை பூங்கொடிவகை ; குடமல்லிகை ; விளக்குத்தண்டு ; இரப்போர் கலம் ; பாண்டம் ; மகரந்தமல்லிகை .
மல்லிகைமொட்டு மலராத மல்லிகைப்பூ ; மகளிர் தலையணிவகை ; மொட்டம்பு .
மல்லுக்கட்டுதல் மற்போர்புரிதல் ; பொருதல் ; கட்டாயப்படுத்துதல் ; வற்புறுத்தல் .
மல்லுச்சட்டம் குறுக்குவிட்டம் .
மல்லுப்பிடித்தல் காண்க : மல்லுக்கட்டுதல் .
மல்லூகம் புழு .