மல்லை முதல் - மலாகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மல்லை வளம் ; பெருமை ; காண்க : மல்லாய் ; வட்டம் ; மாமல்லபுரம் .
மல்வென்றி வாகைத்திணையுள் மற்போரில் வெற்றியைக் கூறும் ஒரு புறத்துறை .
மலக்கட்டு காண்க : மலச்சிக்கல் .
மலக்கடி மனக்கலக்கம் .
மலக்கம் காண்க : மலக்கடி ; துன்பம் ; மாறுபாடு .
மலக்கு மயக்கம் ; தேவன் .
மலக்குண்ணுதல் கலக்கப்படுதல் .
மலக்குதல் கலக்குதல் .
மலகரி குறிஞ்சிப்பண்வகை .
மலங்கல் குளம் ; காண்க : மலங்கு .
மலங்கழித்தல் உடல்மலத்தை வெளியேற்றுதல் ; ஆணவம் முதலிய மலம் நீக்குதல் .
மலங்கழிதல் உடல்மலம் வெளியேறுதல் ; ஆணவம் முதலிய மலம் நீங்குதல் .
மலங்கு விலாங்குமீன் .
மலங்குதல் நீர் முதலியன குழம்புதல் ; கெடுதல் ; மனங்கலங்குதல் ; பிறழ்தல் ; ததும்புதல் .
மலச்சிக்கல் மலவடைப்பு .
மலச்சிக்கு மலவடைப்பு .
மலசகிதர் மும்மலத்தோடு கூடியவர் .
மலசலம் மலமூத்திரங்கள் .
மலட்டா கன்று போடாத பசு .
மலட்டாறு காடுகளில் ஓடுவதும் விரைவில் நீர் வற்றுவதுமான ஆறு .
மலடன் பிள்ளையில்லாதவன் .
மலடி மகப்பேறில்லாதவள் ; கருத்தரியாமை ; ஈனாதவள் ; ஈனாதது .
மலத்திரயம் காண்க : மும்மலம் .
மலநானம் தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை .
மலநீர் சிறுநீர் ; மலமூத்திரம் .
மலப்பு கடவுள் திருமுன்னர் ஆடும் ஒரு கூத்து வகை .
மலப்பை மலம் தங்குமிடம் ; உடம்பு .
மலபந்தம் காண்க : மலச்சிக்கல் ; மும்மலத்தாற் கட்டுண்கை .
மலபரிபாகம் மலங்கள் தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை .
மலபாண்டம் உடம்பு .
மலம் அழுக்கு ; பவ்வீ ; சுக்கிலம் ; தீட்டு ; மூத்திரம் முதலிய உடல்மாசு ; வண்டல் ; துரு ; காண்க : மும்மலம் ; பாவம் ; கருப்பூரம் .
மலம்பாதை மலைவழி .
மலமலத்தல் ஓர் ஒலிக்குறிப்பு .
மலமலெனல் ஓர் ஒலிக்குறிப்பு , கண்ணீர் பெருகுதற்குறிப்பு .
மலயக்கால் காண்க : மலையக்கால் .
மலயக்கோ பொதியமலைக்குத் தலைவனான பாண்டியன் .
மலயசம் காண்க : மலையசம் .
மலயம் பொதியமலை ; சந்தனமரம் .
மலயமாருதம் காண்க : மலையக்கால் ; பண்வகை .
மலயமுனி அகத்தியர் .
மலர் பூ ; தாமரை ; ஒரு பேரெண் ; ஆயுதம் முதலியவற்றின் மேற்குமிழ் ; வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று ; மும்மலமுடையவர் .
மலர்க்கடை பூ விற்கும் கடை .
மலர்க்கணையோன் பூக்களை அம்பாகவுடைய மன்மதன் .
மலர்க்கா பூங்காவனம் .
மலர்க்காம்பு பூவில் இதழின் கீழுள்ள பாகம் .
மலர்ச்சி பொலிவு ; மகிழ்ச்சி ; மலர்தல் .
மலர்த்தல் நிமிரச்செய்தல் ; மலரச்செய்தல் .
மலர்த்தாது காண்க : பூந்தாது .
மலர்த்தாள் காண்க : மலர்க்காம்பு .
மலர்த்திரள் பூங்கொத்து .
மலர்த்துதல் மலரச்செய்தல் ; மூடிய கை ; குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல் ; மல்லாத்துதல் .
மலர்த்தூள் பூந்தாது .
மலர்த்தேவி காண்க : மலர்மகள் .
மலர்த்தேன் பூவிலுண்டாகும் தேன் ; பூந்தாது தங்குமிடம் .
மலர்தல் பூவின் மொட்டவிழ்தல் ; பரத்தல் ; மனமகிழ்தல் ; தோன்றல் ; எதிர்தல் ; அகலுதல் ; மிகுதல் .
மலர்தொடுத்தல் பூவை இணைத்துக் கட்டுதல் .
மலர்ப்பலி கைநிறையக் கொண்டு வழிபாடாக இடும் பூ .
மலர்ப்பள்ளி பூவாலாகிய படுக்கை .
மலர்ப்பு மலர்விக்கை ; வெளிப்படக் காட்டுகை .
மலர்மகள் திருமகள் .
மலர்மங்கை திருமகள் .
மலர்மண்டபம் பூத்தொடுக்கும் மண்டபம் .
மலர்மிசைநடந்தான் தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் .
மலர்மிசையேகினான் தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் .
மலர்மிசையோன் தாமரையிலிருப்பவனான பிரமன் .
மலரகிதர் மும்மலம் நீங்கப்பெற்றவர் .
மலரடி பெரியார் அல்லது தெய்வத்தின் தாமரைபோன்ற திருவடி .
மலரணை காண்க : மலர்ப்பள்ளி .
மலரவன் காண்க : மலரோன் .
மலருக்குநாயகம் கருவண்டு .
மலரோன் காண்க : மலர்மிசையோன் .
மலவாசயம் காண்க : மலப்பை .
மலவாயில் உடலினின்றும் மலங்கழியும் வழி .
மலவைரி சிவபிரான் .
மலாகை தூதுசெல்பவள் ; காமமிக்கவள் ; பெண்யானை .