சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மலாசு | காண்க : சிறுபூளை . |
| மலாஞ்சி | வெள்ளுள்ளி . |
| மலாடு | பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு . |
| மலாம் | முலாம்பூசுகை . |
| மலார் | வளார் . |
| மலாரம் | வளையற்கோவை . |
| மலாவகம் | பிண்ணாக்கு . |
| மலிசம் | அரசமரம் . |
| மலிதல் | நிறைதல் ; பெருகல் ; மிகுதல் ; நெருங்குதல் ; புணர்ச்சியில் மகிழ்தல் ; செருக்குதல் ; விம்முதல் ; பரத்தல் ; விரைதல் ; விலைநயத்தல் ; சொல்லுதல் . |
| மலிபு | மிகுதி ; நிறைவு ; காதலரின் சேர்க்கை வகை ; உவகை ; நயவிலை ; தன்மை ; உயர்வு ; உத்தமம் . |
| மலிர்தல் | பெருகுதல் ; நீர் முதலியன ஒழுகுதல் ; பயிலுதல் . |
| மலிர்நிறை | பெருவெள்ளம் ; நீரூற்று . |
| மலினம் | கருமை ; மாசு ; மரவகை ; தீயகுணம் ; பாவம் ; குற்றம் ; கெடுதி ; மோர் . |
| மலினமுகன் | அக்கினி ; பிசாசு ; கருங்குரங்கு ; கொடியவன் ; கருவண்டு . |
| மலினி | தீட்டாயுள்ள பெண் . |
| மல¦மசம் | அழுக்கு ; இரும்பு . |
| மலூகம் | குருவி . |
| மலை | ஈட்டம் ; காண்க : மலைக்கட்டுக்குளம் . |
| மலைகட்டுக்குளம் | மலையடிவாரத்தில் அமைக்கப்பெற்ற குளம் . |
| மலைக்கால் | ஆட்டுக்கல் . |
| மலைக்குகை | மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம் . |
| மலைக்குடவு | இருமலைகளின் இடைப்பட்ட பள்ளம் . |
| மலைக்குண்டுவேர் | ஒரு செடிவகை . |
| மலைக்கொடிமன்னன் | தடாதகைப்பிராட்டியின் தந்தையாகிய பாண்டியமன்னன் . |
| மலைக்கோன் | கொன்றைமரவகை . |
| மலைகலக்கி | ஒரு பூண்டுவகை . |
| மலைகுனியநின்றபிரான் | திருவேங்கடமுடையான் . |
| மலைகுனியநின்றான் | திருவேங்கடமுடையான் . |
| மலைச்சரக்கு | கருப்பூரவகை ; மலையில் உண்டாகும் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு . |
| மலைச்சார்பு | மலைப்பகுதி . |
| மலைச்சார்வு | மலைப்பகுதி . |
| மலைச்சாரல் | மலையின் சரிவான பகுதி ; மலையிற் சாரலாகப் பெய்துசெல்லும் மேகம் ; மலையில் விழும் மழை ; சாரற்காற்று . |
| மலைச்சிகரம் | மலையினுச்சி . |
| மலைத்தல் | மாறுபடுதல் ; பொருதல் ; மயங்குதல் ; வருத்துதல் ; திகைத்தல் ; வியத்தல் . |
| மலைத்தாரம் | காண்க : மலைபடுபொருள் . |
| மலைத்துவரை | ஒரு துவரைவகை . |
| மலைத்தேன் | மலையில் உண்டாகுந் தேன் ; இன்சுவையுள்ள பலாப்பழம் . |
| மலைதல் | சூடுதல் ; மேற்கொள்ளுதல் ; ஒத்தல் ; பறித்தல் ; எதிர்த்தல் ; பகைத்து மாறுபடுதல் ; மயங்குதல் ; வாதாடுதல் . |
| மலைதாங்கி | காண்க : அரிவாள்முனைப்பூண்டு ; செடிவகை ; வட்டத்திருப்பி . |
| மலைநாடன் | மலைவளமுடைய நாட்டுக்கு அரசன் ; சேரன் . |
| மலைநாடு | மலைப்பாங்கான நாடு ; சேரநாடு . |
| மலைநாதம் | கன்மதம் ; சகஸ்பரபேதி ; வக்கிராந்த பாடாணம் . |
| மலைநார் | காண்க : கல்நார் . |
| மலைநெல் | நெல்வகை . |
| மலைப்பக்கம் | மலையின் சரிவான பாகம் . |
| மலைப்பச்சை | ஒரு செடிவகை . |
| மலைப்பள்ளி | அருந்தவர் வாழும் மலையிடம் . |
| மலைப்பாம்பு | ஒரு பாம்புவகை . |
| மலைப்பாழி | காண்க : மலைக்குகை . |
| மலைப்பிஞ்சு | சிறுகல் . |
| மலைப்பிளப்பு | மலையில் உள்ள விடர் . |
| மலைப்பிறங்கம் | உலோகமணல் . |
| மலைப்பு | அறிவுமயக்கம் ; திகைப்பு ; போர் ; மாறுபாடு ; கூத்தின் விகற்பம் ; மயக்கம் ; சம்பிரமம் . |
| மலைப்புறம் | காண்க : மலைச்சார்பு(வு) . |
| மலைப்புனம் | தினைவிளையும் நிலம் . |
| மலைபடுபொருள் | மலையில் உண்டாகும் மிளகு , கோட்டம் , அகில் , தக்கோலம் , குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம் . |
| மலைமகள் | பார்வதி . |
| மலைமஞ்சி | பெருங்குரும்பை எனும் செடிவகை . |
| மலைமடந்தை | காண்க : மலைமகள் . |
| மலைமதம் | கன்மதம் . |
| மலைமல்லிகை | காட்டுமல்லி , மரமல்லிகை . |
| மலைமாது | காண்க : மலைமகள் . |
| மலைமான் | காண்க : மலைமகள் . |
| மலைமுழக்கு | மலையினின்று கேட்கும் எதிரொலி . |
| மலைமுழை | காண்க : மலைக்குகை . |
| மலைமுழைஞ்சு | காண்க : மலைக்குகை . |
| மலைய | ஓர் உவம வாய்ப்பாடு . |
| மலையக்கால் | பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று . |
| மலையசம் | சந்தனமரம் ; தென்றற்காற்று ; மலையாடு . |
| மலையடி | தாழ்வரை ; சேவற்கோழி ; கொங்கு வேளாளர் . |
| மலையடிப்படி | குறிஞ்சிநிலத்தூர் . |
| மலையடிவாரம் | தாழ்வரை . |
| மலையப்பொருப்பன் | பாண்டியன் . |
| மலையம் | மலையினுச்சி ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று ; பொதியமலை . |
| மலையமாருதம் | காண்க : மலையக்கால் . |
|
|
|