மலையமான் முதல் - மழுவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மலையமான் சேரன் ; உடையார்சாதியின் உட்பிரிவினர் ; மலாடு ஆளும் அரசன் .
மலையமானாடு செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு .
மலையரசன் மலைநாட்டுக்கு அரசன் ; மலாடு ஆளும் அரசன் ; இமயமலைக்கு அரசன் .
மலையரண் அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம் ; மலைமேற்கோட்டை .
மலையருவி மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி .
மலையரையன் காண்க : மலையரசன் .
மலையன் குறிஞ்சிநிலத் தலைவன் ; சேர மன்னன் ; கடையெழு வள்ளலுள் ஒருவனான காரி ; தமிழ்நாட்டுப் பணிக்கச் சாதியினர் .
மலையாட்டி மலைநாட்டுப் பெண் .
மலையாரம் சந்தனமரம் .
மலையாள் காண்க : மலைமகள் .
மலையாளபகவதி மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி ; பெருமோசக்காரன் .
மலையாளர் மலைநாட்டார் .
மலையாளி மலையில் வாழ்பவன் ; மலையாள நாட்டான் ; வேளாள வகுப்பின் ஒரு பிரிவினர் ; மிளகு .
மலையானிலம் காண்க : மலையக்கால் .
மலையிடறு பெருந்தடை .
மலையிலக்கு வெளிப்படையானது .
மலையிறக்கம் மலையின் இறங்குசரிவு .
மலையின்முனிவன் அகத்திமரம் ; மிளகு ; அத்திவகை .
மலையீந்து ஒரு மரவகை .
மலையேறுதல் தெய்வம் இடத்தினின்று நீங்குதல் ; முடிவடைதல் ; மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல் ; மலையின்மேல் ஏறுதல் .
மலைவசம்பு ஒரு செடிவகை ; மிளகு .
மலைவட்டை ஒரு மரவகை .
மலைவமைதி இடம் , காலம் , கலை முதலிய அறுவகை மலைவும் சில காரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்து கொள்ளப்படுவது .
மலைவளம் மலைநிலத்தின் செழிப்பு ; காண்க : மலைபடுபொருள் .
மலைவளர்காதலி காண்க : மலைமகள் .
மலைவாசம் மிளகு ; உடல்நலம் கருதி மலையிற் சென்று வசிக்கை .
மலைவாசி மலையில் வாழ்பவர் ; மலையில் வாழ்வது .
மலைவாசிக்கொம்பு பன்றிக்கொம்பு .
மலைவாணர் மலைவாழ்நர் .
மலைவாழை ஒரு வாழைவகை .
மலைவீரியம் அன்னபேதி .
மலைவு உவமச்சொல் ; மயக்கம் ; மாறுபாடு ; திகைப்பு ; உரை செயல்களின் முன்னுக்குப் பின் முரண் ; இடம் , காலம் , கலை , உலகம் , நியாயம் , ஆகமம் என்பவற்றைப் பொருத்தமின்றிக் கூறுகையாகிய குற்றம் ; போர் .
மலைவேம்பு வேப்பமரவகை ; பெருமரவகை .
மவ்வம் அழகு .
மவ்வல் காண்க : மௌவல் .
மவுட்டியம் அறியாமை .
மவுணன் கணவன் .
மவுலி முடி ; சடை ; தலை .
மவுனம் மோனம் , பேசாமை .
மவுனி ஆமை ; மவுனஞானி .
மழ காண்க : மழவு .
மழகொங்கம் திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி .
மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி .
மழபுலம் திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி .
மழபுலவஞ்சி பகைவர் நாட்டைப் பாழ்படுத்தும் புறத்துறை .
மழபுலவர் பள்ளியிற் படிக்கும் சிறுவர் .
மழமழத்தல் வழவழப்பாதல் .
மழமழப்பு மெதுத்தன்மை ; உரை செயல்களில் உறுதியின்மை .
மழமழெனல் மெத்தெனற்குறிப்பு .
மழலை குழந்தைகளின் திருந்தாச் சொல் ; மென்மொழி ; இளமை ; மெல்லோசை .
மழலைத்தேன் புதுத்தேன் .
மழலைப்பேச்சு குதலைச்சொல் ; திருந்தாப்பேச்சு .
மழவன் இளைஞன் ; வீரன் ; மழநாட்டான் .
மழவு இளமை ; குழந்தை ; மயக்கம் .
மழறுதல் மென்மையாதல் ; தெளிவில்லாதிருத்தல் .
மழித்தல் மொட்டையடித்துக்கொள்ளுதல் .
மழித்தலை மொட்டைத்தலை .
மழு கோடரி ; காண்க : மழுவாள் ; பழுக்கக் காய்ச்சிய இரும்பு ; கடல் ; மழுங்கிய ; அதிகமான .
மழு (வி) கப்பு ; மங்கு .
மழுக்கம் கூரின்மை ; நிலைமைத்தாழ்வு ; ஒளிமழுங்குகை ; விவேகமின்மை ; மொட்டை .
மழுக்கல் நெல்லை ஒருமுறை குற்றியெடுத்த தவிடு நீங்காத அரிசி .
மழுக்குதல் மழுங்கச்செய்தல் ; ஒளிகுறையச்செய்தல் ; விவேகத்தைக் குறைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; மொக்குதல் .
மழுகுதல் மழுங்குதல் ; ஒளிகுறைதல் .
மழுகூழை வாலிழந்த விலங்கு ; மூடன் .
மழுங்கல் மழுங்கினது ; நாணிலி ; மூடன் ; மட்டமான பொன் வகை .
மழுங்குணி அறிவற்றவன் .
மழுங்குதல் கூர்நீங்குதல் ; பொலிவழிதல் ; கெடுதல் ; ஒளிகுறைதல் ; அறிவுக்கூர்மை குறைதல் ; கவனிப்பின்றி மறைந்துபோதல் .
மழுப்பன் செயலை மழுப்பிவிடுவோன் ; தாமதப்படுத்துவோன் ; குதர்க்கம் பேசுவோன் .
மழுப்புதல் நெகிழவிடுதல் ; செயலைப் பயனற்றதாக நெகிழ்த்துதல் ; தாமதப்படுத்தல் ; ஏமாற்றுதல் .
மழுமட்டை கூர்மழுங்கினது ; முழுமூடத்தனம் .
மழுமாறி புரட்டன் .
மழுமாறுதல் தந்திரம் பண்ணுதல் .
மழுமொட்டை கூர்மழுங்கினது ; முழுமொட்டையான தலை .
மழுவலான் காண்க : மழுவாளி .
மழுவன் அஞ்சாதவன் ; நகர்காப்போன் ; பிடிவாதமுள்ளவன் .