மழுவாள் முதல் - மறக்களவேள்வி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மழுவாள் பரசாயுதம் .
மழுவாளி காண்க : மழுவோன் ; பரசுராமன் .
மழுவி நாணமிழந்தவள் .
மழுவெடுத்தல் கை , நா முதலியவற்றிலே மழுவையேந்திச் சூளுரைத்தல் .
மழுவேந்தி காண்க : மழுவாளி ; பொய்யன் .
மழுவோன் மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான் .
மழை மேகத்தினின்று பொழியும் நீர் ; நீருண்ட மேகம் ; காண்க : மழைக்கால் ; நீர் ; கருமை ; குளிர்ச்சி ; மிகுதி .
மழைக்கண்ணி ஒரு பறவை வகை .
மழைக்கரு மேகம் நீர்கொள்ளுதல் ; புகை .
மழைக்கால் பெய்யும் நிலையில் கருநிறத்தோடு மேகத்திலிருந்து இறங்கும் நீர்க்கால் .
மழைக்காலிருட்டு மழைபெய்யுங் காலத்து இரவிலுண்டாகும் பேரிருள் .
மழைக்குணம் காண்க : மழைத்தோற்றம் .
மழைக்குறி காண்க : மழைத்தோற்றம் .
மழைக்கோள் சுக்கிரன் .
மழைக்கோளாறு காண்க : மழைத்தோற்றம் ; புயலெடுக்கை .
மழைகாலம் மாரிக்காலம் .
மழைச்சிலை வானவில் .
மழைத்தல் மழை நிறைந்திருத்தல் ; கருநிறமாதல் ; குளிர்தல் ; மழைபெய்தல் .
மழைத்தாரை விடாது பொழியும் மழைநீர் .
மழைத்துளி மழைநீர்ச்சொட்டு .
மழைத்தூவல் சிறு திவலையாகத் தூற்றும் மழை .
மழைத்தூறல் சிறு திவலையாகத் தூற்றும் மழை .
மழைத்தோற்றம் மழை வருவதற்குக்குறியான மந்தாரம் .
மழைதாங்கி கொங்காணி ; குடை .
மழைப்புகார் காண்க : மழைத்தோற்றம் .
மழைபெய்தல் மேகத்தினின்று நீர்விழுதல் .
மழைமுகில் சூற்கொண்ட மேகம் .
மழையடை விடாது பெய்யும் மழை .
மழையலர் நீர் .
மழையான் காண்க : மழைவண்ணன் .
மழையேறு இடி .
மழையொறுத்தகாலம் வறண்ட காலம் .
மழைவண்ணக்குறிஞ்சி மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி .
மழைவண்ணன் திருமால் .
மழைவறங்கூர்தல் மழை பெய்யாதொழிதல் .
மழைவீற்றிருத்தல் பருவமழை பெய்கை .
மள்குதல் குறைதல் .
மள்ளம் வலிமை .
மள்ளல் வலிமை .
மள்ளன் உழவன் ; திண்ணியோன் ; வலிமையுடையவன் ; படைத்தலைவன் ; படைவீரன் ; இளைஞன் ; மருதநிலத்தோன் ; குறிஞ்சிநிலத்து வாழ்வோன் .
மள்ளு கைம்மரம் .
மளமளத்தல் மரக்கொம்பு முதலியன முறியும் போது ஒலியெழும்புதல் .
மளமளப்பு முறிதற்குறிப்புள்ள ஒலி .
மளமளெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
மளாரெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
மளிகாரம் வெண்காரம் .
மளிகை பலசரக்குக்கடை .
மளிகைக்கடை பலசரக்குக்கடை .
மளுக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
மற்கடம் குரங்கு .
மற்கரை குகை ; மலடி .
மற்கு கோபம் .
மற்குணம் மூட்டுப்பூச்சி .
மற்கூத்து திருமால் ஆடிய கூத்து .
மற்கோல் பகை .
மற்சம் மீன் ; மீனராசி ; ஆசனவகை .
மற்சரம் பொறாமை ; போட்டி .
மற்சரித்தல் போட்டியிடுதல் .
மற்சியம் காண்க : சுவடு ; மற்சம் ; மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப்பொன் ; சுவடு ; உடம்பிலுண்டாகும் புள்ளி .
மற்பயிலிடம் மல்வித்தை கற்குங் கூடம் .
மற்ற பிற .
மற்றது ஏனையது .
மற்றநாள் மறுநாள் ; நாளைநின்று மறுநாள் .
மற்றப்படி வேறுவகையில் .
மற்றவர் பிறர் ; ஏனையோர் .
மற்று ஓர் அசைநிலை ; பிறிதின் பொருட்குறிப்பு ; வினைமாற்றுக்குறிப்பு ; மறுபடியும் ; பின் ; காண்க : மற்றப்படி .
மற்றும் மேலும் ; மீண்டும் .
மற்றை காண்க : மற்ற .
மற்றையது குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று .
மற்றொழில் மல்வித்தை .
மற்றொன்று பிறிதொன்று .
மறக்கருணை அழித்து நலமுண்டாக்கும் அருள் .
மறக்களம் போர்க்களம் .
மறக்களவழி போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக்கூறும் புறத்துறை .
மறக்களவேள்வி காண்க : களவேள்வி .