சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மறக்கற்பு | பத்தினி தன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு . |
| மறக்காஞ்சி | போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை . |
| மறக்குடி | வீரகுலம் ; மறவர்குலம் . |
| மறங்குதல் | கலங்குதல் . |
| மறச்செவி | பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது . |
| மறத்தல் | அயர்த்தல் ; அசட்டைபண்ணல் ; ஒழிதல் ; நினைவின்றிப்போதல் ; பொச்சாப்பு . |
| மறத்தி | மறக்குடிப் பெண் ; பாலைநிலப் பெண் ; குறிஞ்சிநிலப் பெண் . |
| மறத்துறை | பாவநெறி ; வீரச்செயல்கள் . |
| மறதி | நினைவின்மை . |
| மறநிலைப்பொருள் | வெற்றி ; திறை , தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள் . |
| மறநிலையறம் | அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல் . |
| மறநிலையின்பம் | வீரச்செயல் , குறியெய்தல் , ஏறுதழுவல் , வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய கன்னியை அரசன் மணமுடித்து இன்புறல் . |
| மறப்பிலி | கடவுள் . |
| மறப்பு | நினைவின்மை ; மறுப்பு . |
| மறப்புகழ் | வீரச்செயலால் வருங் கீர்த்தி . |
| மறப்புலி | கொடியபுலி ; சிங்கம் . |
| மறம் | வீரம் ; கோபம் ; பகை ; வலிமை ; வெற்றி ; போர் ; கொலைத்தொழில் ; யமன் ; கெடுதி ; பாவம் ; கலம்பகத்தின் ஓர் உறுப்பு ; மறவர் குலம் ; மயக்கம் . |
| மறமலி | யானை . |
| மறமுல்லை | வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதா நிலையைக் கூறும் புறத்துறை . |
| மறல் | பகை ; பிணக்கு ; போர் ; யமன் ; மரணம் ; எழுச்சி ; ஒரு கூத்துவகை ; மறதி ; மயக்கம் ; மறுத்தல் ; வறுமை ; குற்றம் . |
| மறலி | மறதி ; மயக்கம் ; யமன் ; பொறாமை . |
| மறலிமறலி | சிவன் . |
| மறலுதல் | மாறுபடுதல் ; போர்செய்தல் ; கொல்லுதல் . |
| மறலை | புல்லறிவாளன் . |
| மறவணம் | பாவகுணம் . |
| மறவன் | பாலைநிலத்தான் ; மலைவேடன் ; மறக்குடியான் ; வீரன் ; வலியவன் ; படைத் தலைவன் ; கொடியோன் . |
| மறவாணர் | மலைவேடர் . |
| மறவி | மறதி ; கள் ; தேன் ; பதநீர் ; மறதியுள்ளவன் ; அழுக்காறு ; இழிவு ; குற்றம் . |
| மறவுரை | தீய உபதேசமொழி . |
| மறவை | வன்கண்மையுடையது . |
| மறவோன் | வீரன் ; பத்துக்குமேல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஆண்மகன் . |
| மறி | ஆடு , குதிரை , மான் இவற்றின் குட்டி ; ஆடு , குதிரை , மான் இவற்றின் பெண் ; ஆடு ; மேடராசி ; அழுங்கு ; அழுங்கின் குட்டி ; மான் ; நிறுத்துகை . |
| மறிக்கையான் | சிவபிரான் . |
| மறிகாணுதல் | குதிரை , மான் முதலியன குட்டி போடுதல் . |
| மறித்தல் | தடுத்தல் ; திருப்புதல் ; மேல்கீழாக்குதல் ; அழித்தல் ; தடுத்தற்குறியாகக் கையசைத்தல் ; திரும்பச்செய்தல் . |
| மறித்தும் | மீண்டும் . |
| மறிதரல் | மீளுகை . |
| மறிதல் | கீழ்மேலாதல் ; மீளுதல் ; முதுகிடுதல் ; விழுதல் ; சாய்தல் ; கிளர்தல் ; முறுக்குண்ணுதல் ; பலகாலுந்திரிதல் ; தடைப்படுதல் ; நிலைகுலைதல் ; அறுபடுதல் ; சாதல் ; துள்ளுதல் . |
| மறிந்து | மீண்டும் . |
| மறிபடுதல் | தடுக்கப்படுதல் ; இடையூறுபடுதல் . |
| மறியல் | நிறுத்துகை ; தடை ; வழக்கில் செய்யும் தடையாணை ; வேலைநிறுத்தம் ; வாணிகம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிறுத்துகை . |
| மறிவு | திரும்புகை ; கேடு . |
| மறு | குற்றம் ; களங்கம் ; தீமை ; அடையாளம் ; மச்சம் ; பாலுண்ணி ; மற்ற . |
| மறுக்கம் | சுழற்சி ; துன்பம் ; மனக்கலக்கம் . |
| மறுக்களித்தல் | மறுத்தல் ; காண்க : மறுகலித்தல் . |
| மறுக்களித்துப்பேசுதல் | சொன்னதை மறுத்துப்பேசுதல் . |
| மறுக்குத்து | ஒரு செடிவகை . |
| மறுக்குதல் | புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல் ; மனத்தைக் கலக்குதல் ; எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் . |
| மறுகரை | எதிர்க்கரை . |
| மறுகல் | நோய்திரும்பல் ; சுழலல் ; கலங்குதல் . |
| மறுகலித்தல் | நோய் முதலியன திரும்புதல் . |
| மறுகால் | மதகு ; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால் ; மறுபடி ; இரண்டாம் முறை பயிரிட்ட பயிர் . |
| மறுகு | தெரு ; குறுந்தெரு ; அறுத்த தாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல் . |
| மறுகுசிறை | தெருவின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசை . |
| மறுகுதல் | சுழலுதல் ; பலகாலுந் திரிதல் ; மனம் கலங்குதல் ; வருந்துதல் ; சிதைதல் ; அரைபடுதல் ; கொண்டுபோதல் . |
| மறுகை | தெரு ; மாட்டின் பொதிப்பாரத்தில் பாதியளவு ; நுங்கு . |
| மறுசொல் | பதில்விடை . |
| மறுத்தருதல் | மீட்டல் . |
| மறுத்தல் | தடுத்தல் ; திருப்புதல் ; இல்லையென்னுதல் ; நீக்குதல் ; வெட்குதல் ; திரும்பச் செய்தல் ; இல்லாமற்போதல் . |
| மறுத்து | மறுபடியும் ; மேலும் . |
| மறுத்துப்போதல் | பலன் கொடுக்காமற் போதல் . |
| மறுத்துமொழிநிலை | ஓர் அணிவகை . |
| மறுத்துரைத்தல் | எதிர்ப்புக்கூறல் . |
| மறுத்தரவு | மீட்கை . |
| மறுதரவு | மீட்கை . |
| மறுதலித்தல் | வேறுபடுதல் ; மாறுபடுதல் ; மறுத்தல் ; நெறியைவிட்டு நீங்குதல் ; காண்க : மறுகலித்தல் . |
| மறுதலிப்பு | மறுக்கை ; வேறுபடுகை . |
| மறுதலை | எதிர்க்கட்சி ; பூர்வபட்சம் ; பகைப்பொருள் ; பகை ; நிகர் ; இரண்டாம் முறை . |
| மறுதலைத்தல் | எதிரிட்டுத் தோன்றுதல் ; மறுத்தல் . |
| மறுதலைப்பெண் | காண்க : மறுதாரம் . |
| மறுதாக்கல் | எதிருரை ; விடை . |
| மறுதாய் | மாற்றாந்தாய் . |
| மறுதாரம் | இரண்டாந்தாரம் . |
| மறுதொழில் | பாவம் . |
| மறுநாள் | அடுத்த தினம் . |
|
|
|