மறுநோய் முதல் - மன்றகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மறுநோய் மறுக்களித்த நோய் ; பழம்பிறப்புணர்வு .
மறுப்ப ஓர் உவம வாய்பாடு .
மறுப்படுதல் வசைப்பாடல் ; சிதைவுறுதல் ; புள்ளியுடைத்தாதல் ; துன்பப்படுதல் .
மறுப்பு மறுத்தல் ; எதிர்த்தல் ; கண்டனம் ; மறு உழவு ; முன்னுழுத சாலுக்குக் குறுக்காக உழுகை .
மறுபடி விடை ; காண்க : மறுபடியும் .
மறுபடியும் மீளவும் .
மறுபாடு பின்பக்கம் .
மறுபாடுருவ நன்றாக .
மறுபாடுருவுதல் ஊடுருவிப்போதல் .
மறுபாவி பகைவன் .
மறுபிறப்பு முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு .
மறுபிறவி முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு .
மறுபுலம் பாலைநிலம் .
மறுபேச்சு மாற்றிக் கூறும் சொல் ; தடுத்துரைக்கை ; காண்க : மறுசொல் .
மறுபோகம் ஆண்டின் இரண்டாம் முறை விளைச்சல் .
மறுமணம் கணவன் அல்லது மனைவி இறந்த பின் மீண்டும் செய்துகொள்ளுங் கலியாணம் .
மறுமனசுபடுதல் முன்னிருந்த எண்ணம் மாறுதல் .
மறுமாடி வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச்சுவர் ; மாடிக்குமேல்மாடி ; மலைப்பிளவு ; வரம்பு .
மறுமாற்றம் காண்க : மறுசொல் ; கறிப்பொருள் .
மறுமுகம் வேறு பக்கம் ; அயலான் முகம் .
மறுமுள் பாலுண்ணி ; அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து ; ஆறிவரும் புண்ணில் தோன்றும் சிரங்கு .
மறுமுறை மறுதடவை ; மறுபிறப்பு .
மறுமை மறுபிறவி ; மறுவுலகம் .
மறுமொழி பதில்விடை ; அனுப்புஞ் செய்தி .
மறுவருதல் மனஞ்சுழலுதல் .
மறுவல் கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மீட்டும் .
மறுவலிடுதல் திரும்புதல் ; சிறிது எஞ்சிநிற்றல் .
மறுவலும் மீண்டும் .
மறுவி காண்க : மறுவல் .
மறை மறைக்கை ; இரகசியம் ; மந்திராலோசனை ; வேதம் ; உபநிடதம் ; ஆகமம் ; மந்திரம் ; உபதேசப் பொருள் ; சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன ; களவுப் புணர்ச்சி ; பெண்குறி ; உருக்கரந்த வேடம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவும் இறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; புகலிடம் ; சிறைக்கூடம் ; மறைவிடம் ; வஞ்சனை ; இரண்டாம் உழவு ; கேடகம் ; எதிர்மறை ; விலக்குகை ; புள்ளி ; சங்கின் முறுக்கு .
மறைக்கிழவன் காண்க : மறைக்கோ .
மறைக்கொடியோன் துரோணாச்சாரியன் ; பார்ப்பனன் ; பிரமன் .
மறைக்கோ பிரமன் .
மறைச்சி புள்ளியுள்ள பெண்விலங்கு ; பார்ப்பனத்தி .
மறைச்சிரம் உபநிடதம் .
மறைசை மறைக்காடு ; வேதாரணியம் .
மறைசொல் காண்க : மறைமொழி .
மறைத்தல் மறையச்செய்தல் ; மூடுதல் ; தீது வாராமற் காத்தல் .
மறைத்தலைவி திருமகள் .
மறைத்துமொழிகிளவி இடக்கரடக்கல் .
மறைதல் ஒளிந்துகொள்ளுதல் ; தோன்றாமற்போதல் .
மறைப்பு நிரைச்சல் ; ஒளிப்பு .
மறைப்புச்சுவர் வீட்டுக்குள் கட்டப்படும் கனமில்லாத சுவர் .
மறைபதி கள்ளக்கணவன் .
மறைபுகல் அடைக்கலம் புகுதல் .
மறைபொருள் உட்கருத்து ; ஒளிக்கத்தக்கது ; இரகசியம் .
மறைமுடுக்கி வில்முடுக்கி .
மறைமுடிவு வேதாந்தம் ; கடவுள் .
மறைமுதல் கடவுள் ; சிவபிரான் ; பிரணவம் .
மறைமுதல்வன் கடவுள் ; வேதம்வல்ல அந்தணன் .
மறைமுதலி காண்க : மறைமுதல் .
மறைமூலம் உச்சிமையம் ; பிரமரந்திரம் .
மறைமொழி மந்திரம் ; வேதம் ; இடக்கரடக்கல் .
மறையான் பிரமன் ; காண்க : மறைபதி .
மறையிலார் இழிந்தோர் .
மறையிறை காண்க : மறுசொல் .
மறையீறு உபநிடதம் .
மறையோன் பிரமன் ; வியாழன் ; அந்தணன் .
மறைவாணர் பார்ப்பனர் .
மறைவிடம் வெளியிலிருந்து காணவியலாத இடம் ; கழிவிடம் .
மறைவிடை மறுத்துக்கூறும் விடை .
மறைவு மறைகை ; ஒளிப்பிடம் ; இரகசியம் ; நிரைச்சல் ; கோள்கள் ஒன்றாலொன்று மறைகை .
மன் ஓர் அசைநிலை ; எதிர்காலங் காட்டும் இடைநிலை ; ஒழியிசைக்குறிப்பு ; பிறிதொன்றாகைக் குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; ஆக்கக் குறிப்பு ; கழிவுக்குறிப்பு ; நிலைபேற்றுக்குறிப்பு ; ஒரு பெயர்விகுதி ; அரசன் ; வீரன் ; தலைவன் ; கணவன் ; உத்தரட்டாதிநாள் ; பெருமை ; இழிவு ; மந்திரம் ; மணங்கு .
மன்பது மக்கட்பரப்பு .
மன்பதை காண்க : மன்பது ; படை .
மன்மகளிர் அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர் .
மன்மத அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்பதாம் ஆண்டு .
மன்மததந்திரம் மன்மதனுடைய மலர்க்கணை .
மன்மதபாணம் காண்க : சாதிமல்லிகை ; மன்மததந்திரம் .
மன்மதன் காமன் .
மன்மதன்கணை மன்மதனின் மலரம்பு ; மாமரம் .
மன்மதோபாலம்பனம் காமனைப் பழிக்கை .
மன்மம் தீராப்பகை ; வஞ்சினம் .
மன்ற ஓர் அசைச்சொல் ; உறுதியாக ; தெளிவாக ; மிக .
மன்றகம் அவை .