மன்றம் முதல் - மனங்கூசுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மன்றம் அவை : கழகம் ; வழக்குமன்றம் ; ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம் ; காண்க : செண்டுவெளி ; வெளியிடம் ; போர்க்களப் பரப்பின் நடுவிடம் ; சிதம்பரம் ; வீடு ; பசுவின் தொழுவம் ; நெடுந்தெரு ; மெய்ம்மை ; உறுதி ; மணம் .
மன்றல் திருமணம் ; மணம் ; புணர்ச்சி ; நெடுந்தெரு ; பாலைப்பண்வகை .
மன்றவாணன் தில்லைச் சிவபிரான் .
மன்றன் சிவபிரான் .
மன்றாட்டம் வேண்டுகோள் ; தொந்தரவு .
மன்றாட்டு வேண்டுகோள் .
மன்றாடி சிவபெருமான் ; கூத்தப்பிரான் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன் ; சபையில் வழக்காடுபவன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; ஆட்டிடையன் .
மன்றாடுதல் குறையிரந்து வேண்டுதல் ; வழக்காடுதல் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல் .
மன்றில் வாயில்முற்றம் .
மன்று சபை ; தில்லையிலுள்ள பொன்னம்பலம் ; நீதிமன்றம் ; பசுத்தொழுவம் ; பசுமந்தை ; மரத்தடிப் பொதுவிடம் ; தோட்டத்தின் நடு ; நாற்சந்தி ; மணம் .
மன்றுதல் தண்டஞ்செய்தல் , ஒறுத்தல் .
மன்றுபடுதல் வெளிப்படுதல் .
மன்றுபாடு தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள் .
மன்றுளாடி சிவபிரான் .
மன்னகுமரன் இளவரசன் .
மன்னர்பின்னர் வணிகர் .
மன்னர்பின்னோர் வணிகர் .
மன்னர்மன்னவன் பேரரசன் , சக்கரவர்த்தி ; துரியோதனன் .
மன்னர்விழைச்சி அரசனால் நுகர்தற்குரியது .
மன்னல் நிலைபேறு ; வலிமை ; பெருமை ; உயர்ச்சி ; விடாமுயற்சி .
மன்னவன் காண்க : மன்னன் ; இந்திரன் .
மன்னன் அரசன் ; எப்பொருட்கு மிறைவன் ; கணவன் ; தலைவன் ; முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன் ; உத்தரட்டாதிநாள் .
மன்னாப்புக்குற்றவாளி அரசாங்கத்தாரால் மன்னிப்புப்பெற்றுச் சாட்சிகூறுங் குற்றவாளி .
மன்னார் பகைவர் .
மன்னாவுலகம் காண்க : மன்னுலகம் .
மன்னி அண்ணன் மனைவி .
மன்னித்தல் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் .
மன்னிப்பு குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் .
மன்னியர் மதிக்கத்தக்கவர் .
மன்னிறைதருதல் அரசனுக்குரிய வரியைத் தருதல் .
மன்னினை வரிவிலக்கு .
மன்னுதல் நிலைபெறுதல் ; தங்குதல் ; பொருந்துதல் ; விடாது முயலுதல் ; உறுதியாய் நிற்றல் ; அடுத்தல் ; மிகுதல் ; ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல் .
மன்னும் பெரும்பான்மையும் , ஓர் இடைச்சொல் .
மன்னுமான் கடவுள் .
மன்னுயிர் நிலைபெற்ற உயிர் ; விலங்குச்சாதி ; மானிடச்சாதி ; ஆன்மா .
மன்னுயிர்முதல்வன் கடவுள் .
மன்னுலகம் துறக்கம் .
மன்னுலகு துறக்கம் .
மன்னை தொண்டை ; கோபம் ; கதுப்பு ; காண்க : மன்னைக்காஞ்சி .
மன்னைக்காஞ்சி இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை .
மன்னைப்பிடி தொண்டையை இறுகப்பிடிக்கை .
மன்னைப்பிடித்தல் தொண்டையைப் பிடித்தல் ; ஒருவனைத் தாங்கிக்கேட்டல் .
மன மிகவும் ; வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாக வரும் இடைச்சொல் .
மனக்கசப்பு வெறுப்பு .
மனக்கசிவு காண்க : மனவுருக்கம் .
மனக்கடினம் நெஞ்சழுத்தம் .
மனக்கடுப்பு உட்கோபம் .
மனக்கண் மனமாகிய கண் .
மனக்கலக்கம் மனந்தடுமாறுகை .
மனக்கவலை ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் .
மனக்கவற்சி ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் .
மனக்களிப்பு அகமகிழச்சி .
மனக்கனிவு காண்க : மனவுருக்கம் .
மனக்காய்ச்சல் காண்க : மனவெரிச்சல் .
மனக்கிடக்கை உள்ளக்கருத்து .
மனக்கிடை உள்ளக்கருத்து .
மனக்கிலேசம் காண்க : மனத்துயர் .
மனக்குருடு அறிவின்மை .
மனக்குழப்பம் மனக்கலக்கம் .
மனக்குள்ளம் வஞ்சகம் ; விரகு .
மனக்குறிப்பு உட்கருத்து ; மதிப்பு .
மனக்குறை வருத்தம் ; திருப்தியின்மை .
மனக்கொதி மனவெரிச்சல் .
மனக்கொள்ளுதல் நன்கறிதல் .
மனக்கோட்டம் புத்தியின் கோணல் ; அழுக்காறு .
மனக்கோட்டரவு ஊக்கக்குறைவு ; துணிவின்மை .
மனக்கோட்டை வீண் எண்ணம் ; புலவிநீட்டம் .
மனக்கோண் அழுக்காறு .
மனக்கோழை துணிவில்லாதவர் .
மனக்கோள் காண்க : மனக்குறிப்பு .
மனங்கசிதல் மனமுருகல் .
மனங்கரைதல் நெஞ்சிளகுதல் ; பின்னிரங்குதல் ; துயரப்படுதல் .
மனங்குத்துதல் தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம் .
மனங்குவிதல் மனமொடுங்குதல் ; மனவமைதி கொள்ளுதல் .
மனங்கூசுதல் மனம் பின்னிடைதல் .