சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மனங்கூம்புதல் | ஊக்கங்குன்றுதல் ; மனவமைதி கொள்ளுதல் . |
| மனங்கொதித்தல் | கோபங்கொள்ளுதல் ; துக்கித்தல் ; பேராவல்கொள்ளுதல் . |
| மனங்கொள்ளுதல் | மனத்திற் கொள்ளுதல் ; விரும்புதல் . |
| மனங்கோணுதல் | மனமாறுதல் ; வெறுப்படைதல் ; கோபங்கொள்ளுதல் . |
| மனச்சஞ்சலம் | மனக்குழப்பம் . |
| மனச்சலிப்பு | வெறுப்பு ; துயரம் . |
| மனச்சாட்சி | அந்தக்கரணமாகிய சான்று . |
| மனச்சாய்வு | காண்க : மனப்போக்கு ; ஒருசார்பு . |
| மனச்சார்பு | மனப்பற்று ; காண்க : மனப்போக்கு . |
| மனச்செருக்கு | அகம்பாவம் ; காண்க : மனக்களிப்பு . |
| மனச்சோர்வு | ஊக்கக்குறைவு . |
| மனசறிந்தவன் | உண்மையான நண்பன் ; அந்தக்கரண சுத்தியாக நடப்பவன் . |
| மனசறிய | நெஞ்சறிய ; மனச்சாட்சிப்படி . |
| மனசார | காண்க : மனசறிய ; முழுமனத்துடன் . |
| மனசிரங்குதல் | நெஞ்சிளகுதல் . |
| மனத்தழுக்கு | அழுக்காறு . |
| மனத்தளர்ச்சி | காண்க : மனச்சோர்வு . |
| மனத்தாபம் | துக்கம் ; வெறுப்பு ; இணக்கமின்மை ; மனந்திரும்புகை . |
| மனத்தாழ்மை | பணிவான எண்ணத்துடன் இருக்கை . |
| மனத்திட்டம் | மதிப்பு ; மனநேர்மை . |
| மனத்திட்பம் | மனவுறுதி . |
| மனத்திடம் | மனவுறுதி . |
| மனத்திடன் | மனவுறுதி . |
| மனத்திருத்தி | மனநிறைவு ; கிடைத்ததுபோதுமெனக் கொண்டு மகிழ்கை . |
| மனத்துக்கம் | காண்க : மனத்துயர் . |
| மனத்துடிப்பு | மிகுந்த ஆசை ; விரைவு . |
| மனத்துப்புரவு | காண்க : மனத்தூய்மை . |
| மனத்துயர் | மனத்துன்பம் . |
| மனத்தூய்மை | மனமாசின்மை ; மனத்தின் நேர்மை . |
| மனத்தெளிவு | மனம் கலங்குதலின்மை . |
| மனத்தேற்றம் | மனம் கலங்குதலின்மை . |
| மனதார | நெஞ்சறிய ; முழுமனத்துடன் . |
| மனது | காண்க : மனம் . |
| மனந்தளம்புதல் | உள்ளம் நிலைதடுமாறுதல் ; கவலையால் உள்ளம் வருந்துதல் . |
| மனந்தளர்தல் | ஊக்கங்குறைதல் . |
| மனந்திரும்புதல் | மனமாறுதல் ; செய்த பிழைக்கு வருத்தமுறல் . |
| மனந்தீய்தல் | ஏங்குதல் ; மனம்புழுங்குதல் . |
| மனநடுக்கம் | அச்சம் . |
| மனநிதானம் | காண்க : மனத்திட்பம் ; மனத்திடம்(ன்) . |
| மனநியாயம் | மனச்சாட்சிக்குரிய நீதி . |
| மனநிலை | உளப்பாங்கு ; மனம் ஒருநிலையில் நிற்கை . |
| மனநிறை | மனம் ஒருநிலையில் நிற்கை ; மனங்கோடாமை ; மனவடக்கம் . |
| மனநெகிழ்ச்சி | பிறர் துயரம் , அச்சம் முதலியவற்றால் உண்டாம் மனவேறுபாடு . |
| மனநேர்மை | மனத்தின் வஞ்சகமற்ற நிலை . |
| மனநோதல் | வருந்துதல் . |
| மனநோய் | மனவருத்தம் . |
| மனநோவு | மனவருத்தம் . |
| மனப்படுத்துதல் | இணக்குதல் ; மனப்பாடஞ் செய்தல் . |
| மனப்பதற்றம் | காண்க : மனநடுக்கம் . |
| மனப்பதைப்பு | மனக்கவலை ; மனத்திற்கு உகந்தது . |
| மனப்பரிப்பு | காண்க : மனத்துயர் . |
| மனப்பரியயஞானம் | பிறர் கருத்துகள் , முற்பிறப்புகள் முதலியவற்றை அறியும் அறிவு . |
| மனப்பற்று | விருப்பு ; மனம் அழுந்தியிருக்கை . |
| மனப்பாங்கு | காண்க : மனநிலை . |
| மனப்பாடம் | கற்றதை மறதியின்றிச் சொல்லும் பாடம் . |
| மனப்பால்குடித்தல் | கை கூடாதவற்றைப்பற்றி நெடுக எண்ணி அகமகிழ்தல் . |
| மனப்பிடிப்பு | காண்க : மனப்பற்று . |
| மனப்பிரமை | மனத்தில் உண்டாகும் மயக்கம் . |
| மனப்பிரிப்பு | காண்க : மனக்கலக்கம் . |
| மனப்பூர்த்தி | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூர்வம் | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூரணம் | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூரிப்பு | மிகுகளிப்பு ; முழுமனநிறைவு . |
| மனப்பொருத்தம் | மனவொன்றிப்பு ; தன்மனத்துக்கு ஏற்றதாகை . |
| மனப்பொறுப்பு | மனஞ்சகிக்கை . |
| மனப்போக்கு | மனம்போகும் வழி . |
| மனம் | நெஞ்சம் ; எண்ணம் ; விருப்பம் ; இந்துப்பு . |
| மனம்பதிதல் | கருத்துவைத்தல் . |
| மனம்பேதித்தல் | கருத்துவேறுபடுதல் ; மனங்கலங்குதல் . |
| மனம்பொங்குதல் | மனம் அலைவுறுதல் ; சினங்கொள்ளல் . |
| மனம்பொருந்துதல் | இசைதல் ; ஏற்றுக்கொள்ளல் ; மனமொற்றுமையாதல் . |
| மனம்போனபோக்கு | சிந்தை சென்றவழியே செல்லுகை . |
| மனமகிழ்ச்சி | அகக்களிப்பு . |
| மனமடிவு | காண்க : மனச்சோர்வு ; மனமழிகை . |
| மனமலர்ச்சி | காண்க : மனமகிழ்ச்சி . |
|
|
|