சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆதிச்சுவடி | காண்க : அரிச்சுவடி . |
| ஆதிசத்தி | பஞ்ச சக்திகளுள் ஒன்று ; ஆதியாகிய சக்தி . |
| ஆதிசேடன் | பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கிறது எனக் கூறும் 'அனந்தன்' என்கிற பாம்பு . |
| ஆதிசைவம் | சைவ சமயப் பிரிவுகள் பதினாறனுள் ஒன்று . |
| ஆதிசைவர் | சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் . |
| ஆதிட்டம் | கட்டளையிடப்பட்டது , சொல்லப்பட்டது ; உண்டுகழிந்த மிச்சில் . |
| ஆதித்தநோக்கு | சூரியனுடைய பார்வை . |
| ஆதித்தபுடம் | சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை . |
| ஆதித்தபுத்தி | சூரியனது நாட்கதி . |
| ஆதித்தம் | காவிக்கல் ; துரிசு . |
| ஆதித்தமண்டலம் | சூரிய வட்டம் ; இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் ; சூரிய உலகம் . |
| ஆதித்தர் | தேவர் ; பன்னிரு சூரியர் . |
| ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதித்தவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதித்தன் | சூரியன் ; உவர்மண் . |
| ஆதித்தியம் | விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் . |
| ஆதித்தியன் | சூரியன் ; விருந்தோம்புவோன் . |
| ஆதிதாசர் | சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர் . |
| ஆதிதாளம் | தாளவகை . |
| ஆதிதிராவிடர் | தமிழகப் பழங்குடி மக்கள் . |
| ஆதிதேயம் | உண்டி , நீர் முதலியன அளித்து வழிபடல் . |
| ஆதிதேயன் | விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் . |
| ஆதிதேவன் | கடவுள் . |
| ஆதிதைவிகம் | தெய்வத்தால் வருந்துன்பம் . |
| ஆதிநாடி | ஆதாரமாயுள்ள நாடி . |
| ஆதிநாதர் | நவநாத சித்தருள் ஒருவர் ; முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் . |
| ஆதிநாதன் | கடவுள் . |
| ஆதிநாராயணன் | திருமால் ; வயிரக்கல் . |
| ஆதிநாள் | வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதிநித்தியர் | படைக்கப்பட்டும் ஒரு நாளும் அழியாதவர் . |
| ஆதிநூல் | முதனூல் ; வேதம் . |
| ஆதிபகவன் | கடவுள் . |
| ஆதிபத்தியம் | தலைமை ; இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் . |
| ஆதிபரன் | கடவுள் . |
| ஆதிபலம் | சாதிக்காய் . |
| ஆதிபன் | இறைவன் . |
| ஆதிபுங்கவன் | கடவுள் ; அருகன் . |
| ஆதிபுரி | திருவொற்றியூர் . |
| ஆதிபூதன் | பிரமன் , முன்பிறந்தவன் , முன்னுள்ளவன் . |
| ஆதிபூமி | திருமண வேள்வி நடத்தும் இடம் . |
| ஆதிபௌதிகம் | பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் . |
| ஆதிமகாகுரு | துரிசு . |
| ஆதிமகாநாதம் | உலோகமணல் . |
| ஆதாயம் | இலாபம் ; இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| ஆதாரசக்தி | சிவசக்தி . |
| ஆதாரசிலை | கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் . |
| ஆதாரணை | ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம் . |
| ஆதாரதண்டம் | முதுகெலும்பு . |
| ஆதாரநிலை | பற்றுக்கோடு . |
| ஆதாரபீடம் | காண்க : ஆதாரசிலை . |
| ஆதாரம் | பற்றுக்கோடு ; ஆதரவுச்சாதனம் ; பிரமாணம் ; உடல் ; மழை ; ஆறாதாரம் ; மூலம் ; அடகு ; ஏரி ; பாத்தி ; அதிகரணம் . |
| ஆதாரலக்கணை | இடவாகுபெயர் . |
| ஆதாளி | பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு . |
| ஆதாளிக்காரன் | வீம்பு பேசுகின்றவன் . |
| ஆதாளித்தல் | ஆயாசப்படுதல் . |
| ஆதாளிமன்னன் | கரடி . |
| ஆதாளை | காண்க : ஆதளை . |
| ஆதானம் | வைக்கை ; பற்றுகை ; குதிரையணி . |
| ஆதானும் | எதுவாயினும் . |
| ஆதி | தொடக்கம் ; தொடக்கமுள்ளது ; காரணம் ; பழைமை ; கடவுள் ; எப்பொருட்கும் இறைவன் ; சூரியன் ; சுக்கிரன் ; திரோதான சக்தி ; காண்க : ஆதிதாளம் ; அதிட்டானம் ; ஒற்றி ; காய்ச்சற்பாடாணம் ; மிருதபாடாணம் ; நாரை ; ஆடாதோடை ; குதிரையின் நேரோட்டம் ; மனநோய் . |
| ஆதிக்கடுஞ்சாரி | நவச்சாரம் . |
| ஆதிக்கப்பேறு | வரிவகை . |
| ஆதிக்கம் | தலைமை ; அரசாளிடம் ; உரிமை ; மிகுதி . |
| ஆதிக்கற்பேதம் | அன்னபேதி . |
| ஆதிக்கன்னாதம் | அன்னபேதி . |
| ஆதிக்கன் | சிறப்புடையோன் ; மரபோன் . |
| ஆதிக்கியம் | தலைமை ; மேன்மை ; உரிமை ; காண்க : ஆதிக்கம் . |
| ஆதிக்குடி | சவர்க்காரம் . |
| ஆதிக்குரு | பூவழலை . |
| ஆதிகம் | சிறுகுறிஞ்சாக்கொடி முதலியன . |
| ஆதிகவி | முதற்புலவன் ; வான்மீகி முனிவர் . |
| ஆதிகாரணம் | முதற்காரணம் . |
| ஆதிகாலம் | பண்டைக்காலம் . |
| ஆதிகாவியம் | முதலில் தோன்றிய காவியம் ; வால்மீகி இராமாயணம் . |
| ஆதிச்சனி | காண்க : மகம் . |
|
|
|