ஆதிமடக்கு முதல் - ஆப்பியாயனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆதிரம் நெய் ; நெய்ச்சிட்டி .
ஆதிரவிச்சிலை செங்கழுநீர்க்கல் .
ஆதிரன் பெரியோன் .
ஆதிரை திருவாதிரை நாள் ; மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி .
ஆதிரை முதல்வன் சிவன் .
ஆதிரையான் சிவன் .
ஆதிவராகம் பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .
ஆதிவராகன் பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .
ஆதிவாகியம் நுண்ணுடம்பு .
ஆதிவாரம் ஞாயிற்றுக்கிழமை .
ஆதிவிந்து கார்முகில்பாடாணம் .
ஆதிவிராகன் சோரபாடாணம் .
ஆதிவிராட்டியன் சூதபாடாணம் ; சோரபாடாணம் .
ஆதிவேதனிகம் கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் .
ஆதீண்டுகுற்றி ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் .
ஆதீனகர்த்தன் நிலக்கிழார் .
ஆதீனகர்த்தா சைவ மடாதிபதி .
ஆதீனத்தர் காண்க : ஆதீனகர்த்தா .
ஆதீனம் சைவமடம் ; உரிமை ; வசம் .
ஆது பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் .
ஆதும் ஒன்றும் , சிறிதும் .
ஆதுமம் அரத்தை .
ஆதுரசாலை அறச்சாலை .
ஆதுரம் பரபரப்பு ; அவா ; நோய் .
ஆதுரன் நோயுற்றோன் ; ஆசையுற்றோன் .
ஆதுலசாலை ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை .
ஆதுலர்சாலை ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை
ஆதுலன் ஆற்றலற்றவன் ; வறியோன் .
ஆதுவம் கள் .
ஆதுனிகன் இக்காலத்தவன் .
ஆதேசம் கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் .
ஆதேயம் தாங்கப்படுவது .
ஆதொண்டை காற்றோட்டிக் கொடி ; காற்றோட்டிச் செடி .
ஆதோரணன் யானைப்பாகன் .
ஆந்தரங்கம் காண்க : அந்தரங்கம் .
ஆந்தரம் உள்ளேயிருப்பது ; மறைபொருள் .
ஆந்தராளிகன் நடுநிலையாளன் .
ஆந்திரம் குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி .
ஆந்தை பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் .
ஆந்தைக்காதல் ஆந்தை கூவுதல் ; ஆந்தை நூல் .
ஆந்தோளம் இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று .
ஆந்தோளி சிவிகை .
ஆந்தோளிகம் சிவிகை .
ஆநிலை பசுக்கொட்டில் .
ஆநின்று நிகழ்கால இடைநிலை .
ஆப்தசேவை குருவுக்குச் செய்யும் தொண்டு .
ஆப்தம் நட்பு .
ஆப்தவாக்கியம் பெரியோர்களின் வாக்கியங்கள் .
ஆப்தன் நம்பத்தக்கோன் ; உற்ற நண்பன் .
ஆப்திகம் தலைத்திவசம் .
ஆப்பம் அப்பம் ; ஒருவகைத் தின்பண்டம் ; கும்பராசி .
ஆப்பி பசுவின் சாணி .
ஆப்பிடுதல் அகப்படுதல் .
ஆப்பியந்தரம் உள்ளானது .
ஆப்பியாயனம் மனநிறைவு .
ஆதிமடக்கு அடியின் முதலில் சொல் மடங்கி வருவது .
ஆதிமருந்து திரிகடுகம் ; சுக்கு , மிளகு , திப்பிலி .
ஆதிமலை இமயமலை .
ஆதிமீன் காண்க : அசுவினி .
ஆதிமுத்தன் ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மா .
ஆதிமூர்த்தி முதற் கடவுள் .
ஆதிமூலபுத்தகம் அரிச்சுவடி .
ஆதிமூலம் முதற்காரணம் , மூலகாரணமானது .
ஆதிமொழி முதன்மொழி , தமிழ்மொழி ; வடமொழி .
ஆதியங்கடவுள் முதற்கடவுள் ; அருகன் .
ஆதியந்தகாலநாடி நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .
ஆதியந்தகாலம் நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .
ஆதியந்தணன் பிரமதேவன் .
ஆதியந்தம் முதலும் முடிவும் , அடிமுடி .
ஆதியரிவஞ்சம் போகபூமிவகை .
ஆதியாகமம் பகுசுருதியாகமம் ; விவிலிய நூலில் முதற்பகுதி .
ஆதியாமம் சங்கஞ்செடி .
ஆதியூழி கிருதயுகம் .
ஆதியெழுத்து முதலெழுத்துகள் ; உயிர் 12 , மெய் 18 .
ஆதிரசாலை காண்க : ஆதுலர்சாலை .