ஆப்பு முதல் - ஆமக்கழிச்சல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆமக்கழிச்சல் சீதபேதி .
ஆவத்து விபத்து , கேடு .
ஆபத்துசம்பத்து தாழ்வு வாழ்வு .
ஆபதம் காண்க : ஆபத்து .
ஆபதமறுத்தல் கேடு நீக்குதல் .
ஆபதுத்தாரணம் கேட்டை நீக்கிக் காத்தல் .
ஆபதுத்தாரணன் துன்பத்தினின்றும் காப்போன் .
ஆபந்தம் அலங்காரம் ; கட்டு ; நுகக்கயிறு .
ஆபம் நீர் ; தீவினை .
ஆபயன் பால் .
ஆபரணச்செப்பு அணிகலப் பேழை .
ஆபரணம் அணிகலம் ; அலங்காரம் .
ஆபற்காலம் ஆபத்துச் சமயம் .
ஆபற்சன்னியாசம் காண்க : ஆபத்சன்னியாசம் .
ஆபனம் காண்க : மிளகு .
ஆபாசம் போலி ; எதுரொளி ; தூய்மையின்மை ; முறைத்தவறு ; அவதூறு .
ஆபாசித்தல் உண்மையான பொருளைப்போலத் தோன்றுதல் , எதிரொளித்தல் .
ஆபாடம் பாயிரம் .
ஆபாத் போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் .
ஆபாத்செய்தல் குடியேற்றி வளஞ்செய்தல் .
ஆபாதகேசம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை .
ஆபாதசூடம் அடிமுதல் முடிவரை .
ஆபாதம் நிகழ்காலம் ; விழுகை ; காண்க : ஆபாதகேசம் .
ஆபாதமத்தம் காண்க : ஆபாதகேசம் .
ஆபாதமத்தகம் காண்க : ஆபாதகேசம் .
ஆபாதன் தீயவன் .
ஆபாலகோபம் எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் .
ஆபாலகோபாலம் எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் .
ஆபாலவிருத்தர் சிறுவர் முதல் முதியோர்வரை உள்ளவர் .
ஆபாலி பேன் .
ஆபானம் மதுக்கடை .
ஆபிசாரம் காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் .
ஆபிமுக்கியம் அனுகூலமாயிருக்கை .
ஆபீரம் ஆயர்வீதி .
ஆபீரவல்லி இடைச்சேரி .
ஆபீரன் இடையன் .
ஆபீலம் துன்பம் ; அச்சம் .
ஆபீனம் பசுவின் மடி .
ஆபூபிகம் அப்பவரிசை .
ஆபூபிகன் அப்பஞ்சுடுவோன் ; அப்பம் விற்போன் .
ஆபை அழகு ; ஒளி ; தோற்றம் ; நிறம் .
ஆபோக்கிலிமம் இலக்கினத்திற்கு மூன்று , ஆறு , ஒன்பது , பன்னிரண்டாம் இடங்கள் .
ஆபோகம் கீதவுறுப்புள் ஒன்று ; எத்தனம் ; நிறைவு ; வருணன் குடை .
ஆபோசனம் விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை .
ஆம் நீர் ; ஈரம் ; வீடு ; மாமரம் ; அழகு ; சம்மதங் காட்டும் சொல் ; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் ; இகழ்ச்சிக் குறிப்பு ; அனுமதி , தகுதி , ஊக்கம் குறிக்கும் சொல் ; ஆவது ; ஆகிய ; சாரியை ; அசைநிலை ; தன்மைப் பன்மை விகுதி ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி .
ஆம்பரியம் மின்சாரம் .
ஆம்பல் அல்லி ; காண்க : ஆம்பற்குழல் ; பண்வகை ; மூங்கில் ; ஊதுகொம்பு ; யானை ; கள் ; ஒரு பேரெண் ; துன்பம் ; அடைவு ; சந்திரன் ; நெல்லிமரம் ; புளியாரைப்பூண்டு ; பேரொலி .
ஆம்பலரி கதிரவன் ; முதலை .
ஆம்பலா புளியாரைப்பூண்டு .
ஆம்பற்குழல் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி .
ஆம்பாறுதல் செழிப்புக் குறைதல் .
ஆம்பி காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி .
ஆம்பிகேயன் முருகக்கடவுள் ; திரிதராட்டிரன் .
ஆம்பியம் பாதரசம் .
ஆம்பிரம் காண்க : தேமா ; புளிமா ; கள் ; புளிப்பு .
ஆம்பிலம் புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி .
ஆம்பு காண்க : காஞ்சொறி .
ஆம்புகு சூரை ; புளியமரம் .
ஆம்புடை உபாயம் .
ஆம்புலம் காண்க : சூரை .
ஆம்பூறு சூரைச்செடி .
ஆம்மிரம் ஒரு பலம் எடை .
ஆமக்கட்டி சுரக்கட்டி .
ஆப்பு முளை ; காண்க : எட்டி ; நோய் ; உணவு ; கட்டு ; உடல் .
ஆப்புத்தள்ளி அச்சுக்கூடக் கருவிகளிலொன்று .
ஆப்புலுதம் குதிரையின் நடைவகை .
ஆப்புளண்டம் காண்க : கரிசலாங்கண்ணி .
ஆபகம் ஆறு ; கங்கை .
ஆபகை ஆறு ; கங்கை .
ஆபணியம் அங்காடிச் சரக்கு ; அங்காடி வீதி .
ஆபத்சகாயன் துன்பத்தில் உதவுவோன் .
ஆபத்சன்னியாசம் இறக்குங்கால் பெறும் துறவு .
ஆபத்தனம் எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் .
ஆவத்தனம் எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் .
ஆபத்து விபத்து , கேடு .