சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆய்ச்சி | தாய் ; பாட்டி ; பெண் ; இடைச்சி . |
| ஆய்ஞன் | ஆராய்பவன் . |
| ஆய்த்தி | காண்க : ஆய்ச்சி . |
| ஆய்த்து | ஆயிற்று . |
| ஆமக்கள் | கணவன் . |
| ஆமக்கன் | கணவன் . |
| ஆமகணம் | குழந்தைகட்குச் சீதவழும்பு விழும் நோய் . |
| ஆமசன்னி | செரியாமையால் வரும் சன்னி . |
| ஆமசிராத்தம் | சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் . |
| ஆமசுரம் | செரியாமையால் குழந்தைகளுக்கு வரும் சுரம் . |
| ஆமசூலை | செரியாமையால் வரும் வயிற்று வலி . |
| ஆமடி | எட்டிமரவகை . |
| ஆமண்டம் | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
| ஆமணக்கு | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
| ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய் , விளக்கெண்ணெய் . |
| ஆமணக்குமுத்து | கொட்டைமுத்து . |
| ஆமணக்கெண்ணெய் | காண்க : ஆமணக்குநெய் . |
| ஆமணத்தி | கோரோசனை . |
| ஆமதி | நண்டு . |
| ஆமந்திரிகை | இடக்கை வாத்தியம் . |
| ஆமநாயம் | வழக்கம் ; ஆகமம் ; குலன் . |
| ஆமம் | பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை . |
| ஆமயம் | பசுவின் சாணி ; நோய் . |
| ஆமரகோளம் | கடுக்காய்ப்பூ . |
| ஆமரம் | எட்டிமரம் . |
| ஆமரி | சொல் . |
| ஆமரிகம் | காண்க : ஆமலகம் . |
| ஆமல் | காண்க : மூங்கில் ; விடமூங்கில் . |
| ஆமலகம் | நெல்லி . |
| ஆமலகமலம் | காண்க : கொட்டைப்பாசி . |
| ஆமலகி | நெல்லி . |
| ஆமவாதரோகம் | வாதநோய் வகை . |
| ஆமளம் | சிவத்துதிவகை . |
| ஆமா | காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் . |
| ஆமாகோளா | காண்க : ஆமரகோளம் . |
| ஆமாசயம் | இரைப்பை . |
| ஆமாத்தியன் | அமைச்சன் ; படைத்தலைவன் ; மருத்துவன் . |
| ஆமாத்திரர் | அமைச்சர் ; மருத்துவர் . |
| ஆமாம் | ஒரு சம்மதக் குறிச்சொல் . |
| ஆமாம்போடுதல் | எதற்கும் ஒத்துக் கூறுதல் . |
| ஆமாறு | வழி . |
| ஆமான் | காட்டுப்பசு . |
| ஆமான்புகல்வி | ஆமான் ஏறு . |
| ஆமானவன் | சிறந்தவன் . |
| ஆமிசம் | ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் . |
| ஆமிடம் | உணவு ; கண்டுமுதல் ; விளைவுமதிப்பு . |
| ஆமிநாயம் | காண்க : ஆமநாயம் . |
| ஆமிரம் | மாமரம் ; புளிப்பு . |
| ஆமிரேசர் | மாமரத்தின்கீழ்க் கோயில் கொண்டுள்ளவர் , ஏகாம்பரநாதர் . |
| ஆமிலம் | புளிப்பு ; புளியமரம் . |
| ஆமிலிகை | புளிப்பு . |
| ஆமிலை | காண்க : புளியாரை . |
| ஆமின் | காண்க : அமீன் . |
| ஆமுகம் | தொடக்கம் . |
| ஆமுகர் | நந்திதேவர் . |
| ஆமென் | அப்படியே ஆகுக . |
| ஆமேற்பல்லூரி | கோரோசனை . |
| ஆமை | கூர்மம் ; ஓர் உயிரினம் ; ஒரு நோய் ; மணம் . |
| ஆமைத்தாலி | ஆமை வடிவுள்ள தாலி . |
| ஆமைதவழி | ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் . |
| ஆமைப்பலகை | ஆமை உரு அமைத்த மணை . |
| ஆமைப்பூட்டு | பூட்டுவகை . |
| ஆமைமடி | பால் நிரம்பச்சுரக்கும் சிறுமடி . |
| ஆமையாழ் | செவ்வழி யாழ்வகை . |
| ஆமையோட்டுக்கட்டி | பெரும் புண்கட்டி . |
| ஆமையோடு | ஆமையின் முதுகோடு . |
| ஆமோசனம் | கட்டுதல் ; ஒளிவீசுதல் ; விடுதலை செய்தல் . |
| ஆமோதம் | மகிழ்ச்சி ; மிகுமணம் . |
| ஆமோதனம் | எடுத்து மொழிந்ததற்கு உட்படுகை , முன்மொழிந்ததற்கு உட்படுகை . |
| ஆமோதித்தல் | உடன்பட்டதைத் தெரிவித்தல் . |
| ஆய் | அழகு ; நுண்மை ; சிறுமை ; மென்மை ; வருத்தம் ; இடைச்சாதி ; தாய் ; கடைவள்ளல்களுள் ஒருவன் ; மலம் ; பொன் ; அருவருப்புக்குறிப்பு ; முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; ஏவலொருமை விகுதி ; ஆக ; ஒரு விளியுருபு . |
| ஆய்க்குடி | இடைச்சேரி . |
| ஆய்க்குழல் | புல்லாங்குழல் . |
| ஆயக்குழல் | புல்லாங்குழல் . |
| ஆய்ச்சல் | வேகம் ; முறை ; பாட்டம் . |
|
|
|