ஆய்தக்குறுக்கம் முதல் - ஆயிரவருக்கம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆயானம் இயற்கைக் குணம் ; வருதல் .
ஆயி தாய் ; ஆயா ; ஒரு சக்தி ; ஒரு மரியாதைச் சொல் .
ஆயிட்டு ஆகையால் .
ஆயிடை அவ்விடம் ; அக்காலத்து .
ஆயிரக்கால் மண்டபம் ஆயிரம் தூண்களுள்ள கோயில் மண்டபம் .
ஆயிரக்காலி மரவட்டை ; துடைப்பம் .
ஆயிரக்கிரணன் சூரியன் .
ஆயிரங்கண்ணன் இந்திரன் .
ஆயிரங்கண்ணோன் இந்திரன் .
ஆயிரங்கண்ணுப் பானை கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை .
ஆயிரங்கதிரோன் காண்க : ஆயிரக்கிரணன் .
ஆயிரங்காய்ச்சி மிகுதியாகக் காய்க்கும் தென்னை , பலா , மாப் போன்ற மரங்கள் ; துடைப்பம் .
ஆயிரங்காற்சடை துடைப்பம் .
ஆயிரஞ்சோதி சூரியன் .
ஆயிரநாமன் ஆயிரம் திருப்பெயர்களையுடையவன் ; சிவன் ; திருமால் .
ஆயிரம் ஓர் எண் .
ஆயிரம்பெயரோன் காண்க : ஆயிரநாமன் .
ஆயிரமுகத்தோன் வீரபத்திரன் .
ஆயிரவருக்கம் உடற்கவசம் .
ஆய்தக்குறுக்கம் மாத்திரை குறுகிய ஆய்தம் .
ஆய்தப்புள்ளி ஆய்தவெழுத்து .
ஆய்தம் மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து , சார்பெழுத்துகளுள் ஒன்று .
ஆய்தல் நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் .
ஆய்தூவி சூட்டுமயிர் ; தலைமேலுள்ள மெல்லிய இறகு .
ஆய்ந்தோர் அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் .
ஆய்ப்பாடி காண்க : ஆயர்பாடி .
ஆய்ப்பு ஒடுங்குகை .
ஆய்மலர் தாமரை .
ஆய்மா காண்க : ஆவிமா ; சாரப்பருப்பு .
ஆய்மை ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் .
ஆய்வரல் ஆராய்தல் ; கூடிவருதல் .
ஆய்வருதல் ஆராய்தல் ; கூடிவருதல் .
ஆய்வாளர் ஆராய்ச்சியாளர் .
ஆய்வு ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் .
ஆய்வை துயிலிடம் .
ஆயக்கசுரம் முறைக்காய்ச்சல் .
ஆயக்கட்டு குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி .
ஆயக்கட்டுமானியம் அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் .
ஆயக்கர் ஊர்ப்பணியாளருள் ஒருவகையார் .
ஆயக்கல் காரக்கல் .
ஆயக்காரன் சுங்கம் முதலிய வரிவாங்குவோன் .
ஆயக்காரி பொதுமக்கள் .
ஆயக்கால் வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .
ஆயக்கோல் வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .
ஆயச்சாவடி சுங்கத்துறை .
ஆயசம் இருப்பாயுதம் ; இரும்புச்சட்டை ; இரும்பினாற் செய்யப்பட்டது .
ஆயசூரி கடுகு .
ஆயத்தம் முன்னேற்பாடு ; அணியம் , சித்தம் ; போருக்குத் தயார் ; கூர்மை ; கோபம் ; தள்ளுகை ; இசைக்கிளையில் ஒன்று .
ஆயத்தலம் மறைவிடம் ; காண்க : ஆயத்துறை .
ஆயத்தார் தோழியர் கூட்டம் ;
ஆயத்தி நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .
ஆயத்துறை சுங்கச்சாவடி .
ஆயதம் நீளம் ; அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் ; அளவிற்பெருமை .
ஆயதனம் ஆலயம் ; இடம் ; வீடு .
ஆயதி வருங்காலம் ; நீட்சி ; பெருமை ; பொருந்துகை .
ஆயந்தி அண்ணன் மனைவி .
ஆயந்தீர்த்தல் வரி செலுத்துதல் .
ஆயப்பாலை பாலைப்பண்வகை .
ஆயம் கமுக்கம் ; தோழியர் கூட்டம் ; வருத்தம் ; மேகம் ; மல்லரிப்பறை ; 34 அங்குல ஆழமுள்ள குழி ; வருவாய் ; குடியிறை ; கடமை ; சூதுகருவி ; கவற்றிற்றாயம் ; சூதாட்டம் ; பசுத்திரள் ; நீளம் ; மக்கள் தொகுதி ; பொன் .
ஆயமானம் உயிர்நிலை ; இரகசியம் .
ஆயமுற்கரவலன் குபேரன் .
ஆயமுற்கரவன் குபேரன் .
ஆயமேரை ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி .
ஆயர்பாடி இடைச்சேரி .
ஆயலோட்டல் பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை விரட்டுகை .
ஆயவன் அத்தகையவன் .
ஆயவியயம் வரவுசெலவு .
ஆயன் இடையன் .
ஆயனம் ஆண்டு ; நெல்வகை ; கிரணம் .
ஆயனி துர்க்கை .
ஆயா மரவகை ; பாட்டி ; தாதி .
ஆயாசம் களைப்பு ; மனவருத்தம் ; முயற்சி .
ஆயாமம் அடக்குகை ; நீளம் ; அகலம் .
ஆயாள் தாய் ; பாட்டி ; முதியவள் .
ஆயான் தந்தை ; தமையன் .