சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆர்க்கு | இலைக்காம்பு ; கிளிஞ்சில் வகை ; எருக்கு ; ஒரு மீன் . |
| ஆர்க்குவதம் | கொன்றைமரம் . |
| ஆர்க்கை | வாரடை ; கட்டுகை ; துரும்பு . |
| ஆர்கதி | திப்பிலி . |
| ஆர்கலி | கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி . |
| ஆர்கோதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆர்ச்சவம் | ஒத்த நோக்கம் . |
| ஆர்ச்சனம் | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
| ஆர்ச்சனை | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
| ஆர்ச்சி | ஆத்தி . |
| ஆர்ச்சித்தல் | காண்க : ஆர்ச்சனம் . |
| ஆர்ச்சிதம் | சம்பாத்தியம் ; கைப்பற்றப்பட்டது . |
| ஆர்த்தபம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
| ஆர்த்தவம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
| ஆர்த்தம் | துன்பம் அடைந்தது . |
| ஆர்த்தர் | எளியவர் ; நோயுற்றோர் ; பெரியோர் . |
| ஆர்த்தல் | ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் . |
| ஆர்த்தன் | நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் . |
| ஆர்த்தார்க்கோன் | சோழன் . |
| ஆர்த்தி | வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று . |
| ஆர்த்திகை | துன்பம் . |
| ஆர்த்தியம் | காட்டுத் தேன் . |
| ஆர்த்திரகம் | இஞ்சி . |
| ஆர்த்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
| ஆருத்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
| ஆர்த்திரை | திருவாதிரை . |
| ஆர்த்துதல் | ஊட்டுதல் ; நிறைவித்தல் ; நுகர்வித்தல் ; கொடுத்தல் . |
| ஆர்த்துபம் | பேரரத்தை . |
| ஆர்த்துவம் | பேரரத்தை . |
| ஆர்தல் | நிறைதல் ; பரவுதல் ; பொருந்துதல் ; தங்குதல் ; உண்ணுதல் ; துய்த்தல் ; ஒத்தல் ; அணிதல் ; பெறுதல் . |
| ஆர்ப்பரவம் | ஆரவாரம் ; போர் . |
| ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல் . |
| ஆர்ப்பரிப்பு | ஆரவாரம் . |
| ஆர்ப்பாட்டம் | ஆரவாரம் ; வீண்பேச்சு . |
| ஆர்ப்பு | பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் . |
| ஆயிரவாரத்தாழியன் | திருவடிகளில் ஆயிரம் வரி கொண்ட சக்கரத்தையுடையவன் ; புத்தன் . |
| ஆயில் | மதகரிவேம்பு ; செவ்வகில் ; அசோகு ; ஆயிலிய நாள் . |
| ஆயிலியம் | ஒன்பதாம் மீன் . |
| ஆயிழை | தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி . |
| ஆயின் | ஆனால் ; ஆராயின் . |
| ஆயின்மேனி | மரகதவகை . |
| ஆயின்று | ஆயிற்று . |
| ஆயினும் | ஆனாலும் ; ஆவது ; உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் . |
| ஆயு | ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது . |
| ஆயுகம் | வாழ்நாள் . |
| ஆயுசகன் | வாயு . |
| ஆயுசு | வாழ்நாள் . |
| ஆயுசுகாரகன் | சனி . |
| ஆயுசுமான் | நீண்ட ஆயுளுடையவன் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| ஆயுட்கோள் | சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி . |
| ஆயுட்டானம் | சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் . |
| ஆயுட்டோமம் | நீண்ட வாணாளின் பொருட்டுச் செய்யும் வேள்வி . |
| ஆயுதசாலை | படைக்கலக் கொட்டில் . |
| ஆயுதப்பயிற்சி | படைக்கலம் பயில்கை . |
| ஆயுதபாணி | கையில் ஆயுதம் கொண்டவன் . |
| ஆயுதபூசை | நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை . |
| ஆயுதம் | படைக்கலம் ; கருவி ; ஆயத்தம் ; இசைக்கிளையில் ஒன்று . |
| ஆயுதிகன் | பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் . |
| ஆயுநூல் | காண்க : ஆயுர்(ள்)வேதம் . |
| ஆயுர்ப்பாவம் | வாணாளின் போக்கு . |
| ஆயுர்வேதம் | மருத்துவ நூல் . |
| ஆயுள்வேதம் | மருத்துவ நூல் . |
| ஆயுர்வேதாக்கினி | கமலாக்கினி , தீபாக்கினி , காடாக்கினி என்னும் மூன்று தீ . |
| ஆயுவின்மை | அருகன் எண்குணத்துள் ஒன்று . |
| ஆயுள் | வாழ்நாள் ; அப்பொழுது . |
| ஆயுள்வேதர் | ஆயுள்வேதம் வல்லார் . |
| ஆயுள்வேதியர் | ஆயுள்வேதம் வல்லார் . |
| ஆயெறும்பு | எறும்புவகை . |
| ஆயோகம் | நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை . |
| ஆயோதம் | மோர் ; வேட்டம் . |
| ஆயோதனம் | மோர் ; வேட்டம் . |
| ஆயோர் | அவர்கள் ; ஆனோர் . |
| ஆர் | நிறைவு ; பூமி ; கூர்மை ; அழகு ; மலரின் பொருத்துவாய் ; காண்க : ஆத்தி ; திருவாத்தி ; ஆரக்கால் ; தேரின் அகத்தில் செறிகதிர் ; அச்சு மரம் ; செவ்வாய் ; சரக்கொன்றை ; அண்மை ; ஏவல் ; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி ; மரியாதைப் பன்மை விகுதி ; ஓர் அசை ; அருமையான . |
| ஆர்க்கங்கோடன் | காண்க : கொல்லங்கோவை . |
| ஆர்க்கம் | இலாபம் ; காண்க : ஆரகம் ; ஆரக்கம் ; சந்தனம் ; பித்தளை . |
|
|
|