சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆரணி | மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் . |
| ஆரணியகன் | காட்டில் வாழ்வோன் . |
| ஆரணியசஷ்டி | மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு . |
| ஆரத்தி | ஆலத்தி ; தீபாராதனை . |
| ஆரதக்கறி | மரக்கறி . |
| ஆரதம் | சைவ உணவு . |
| ஆரதி | காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு . |
| ஆரதிகர்ப்பூரம் | கருப்பூரவகை . |
| ஆரநாளம் | காடி . |
| ஆரபடி | பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி . |
| ஆரபி | ஒரு பண் . |
| ஆரம் | சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் . |
| ஆரம்பக்கொசு | சமுத்திராப்பழம் . |
| ஆரம்பசூரன் | தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் . |
| ஆரம்பம் | தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை . |
| ஆரம்பவாதம் | முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை . |
| ஆரம்பித்தல் | தொடங்குதல் ; ஒலித்தல் . |
| ஆரல் | நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் . |
| ஆரவடம் | முத்துவடம் . |
| ஆரவம் | ஒலி ; பகை . |
| ஆரவமர | காண்க : ஆறவமர . |
| ஆரவலர் | காட்டாத்திப்பூ . |
| ஆரவாரம் | பேரொலி ; பகட்டு ; துன்பம் . |
| ஆரவாரித்தல் | மிக்கொலித்தல் . |
| ஆரவை | கொந்தளிப்பு . |
| ஆரற்சுவர் | மேலே மறைப்புடைய சுவர் . |
| ஆராக்கியம் | அரசமரம் . |
| ஆராகரியம் | அரசமரம் . |
| ஆராவரியம் | அரசமரம் . |
| ஆராட்சி | பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் . |
| ஆராட்டுதல் | தாலாட்டுதல் . |
| ஆராத்தியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
| ஆராத்திரியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
| ஆராத்தொட்டி | மினிக்கி என்னும் மரம் . |
| ஆராதகர் | அருச்சகர் . |
| ஆராதனம் | பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் . |
| ஆராதனை | பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு . |
| ஆராதித்தல் | பூசை செய்தல் ; உபசரித்தல் . |
| ஆராதூரி | ஊதாரி ; அழிப்புக்காரன் . |
| ஆராப்பத்தியம் | கடும்பத்தியம் ; அற்பம் . |
| ஆராமம் | உபவனம் ; மலைச்சோலை ; தான்றி . |
| ஆராமை | நிரம்பாமை ; பேரன்பு . |
| ஆராமைசோராமை | தள்ளாமை . |
| ஆராய்ச்சி | ஆய்வு ; பரிசீலனம் ; சோதனை ; தலையாரி . |
| ஆர்பதம் | வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை . |
| ஆர்பதன் | உணவு . |
| ஆர்மதி | கற்கடக ராசி ; நண்டு . |
| ஆர்மை | கூர்மை ; மதில் . |
| ஆர்வம் | அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று . |
| ஆர்வமொழி | உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் . |
| ஆர்வலன் | அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் . |
| ஆர்வலித்தல் | அன்புகூர்தல் . |
| ஆர்வு | நிறைவு ; உண்ணுகை ; ஆசை . |
| ஆர்வை | கோரைப்பாய் . |
| ஆர | ஓர் உவமச்சொல் ; மிக . |
| ஆரக்கம் | செஞ்சந்தனம் ; அகில் . |
| ஆரக்கழுத்தி | கழுத்தில் தீயரேகையுள்ள பெண் . |
| ஆரக்கால் | சக்கரத்தின் ஆரம் . |
| ஆரக்குவதம் | சரக்கொன்றை . |
| ஆரகந்தி | திப்பிலி . |
| ஆரகம் | வகுக்குமெண் ; குருதி . |
| ஆரகன் | அழிப்போன் ; கள்வன் ; கபடன் . |
| ஆரகுடம் | பித்தளை . |
| ஆரகூடம் | பித்தளை . |
| ஆரகோதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரசகம் | அகில்மரம் . |
| ஆரங்கம்பாக்கு | பாக்குவகை . |
| ஆரஞ்சு | கிச்சிலி . |
| ஆரண்ணியகம் | வேதத்தின் ஒரு பகுதி . |
| ஆரணங்கு | தெய்வப்பெண் ; பேரழகி . |
| ஆரணத்தான் | வேதங்களை அருளிய பிரமன் . |
| ஆரணம் | காண்க : ஆரண்ணியகம் ; வேதம் . |
| ஆரணவாணன் | அந்தணன் . |
| ஆரணவுருவன் | சிவபெருமான் . |
| ஆரணன் | பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் . |
|
|
|