சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆரோபித்தல் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபிதம் | ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம் |
| ஆல் | அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி . |
| ஆல்வாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆலவாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆல்வு | அகன்றது . |
| ஆலக்கச்சி | அரிதாரம் . |
| ஆலக்கட்டி | துரிசு . |
| ஆலக்கரண்டி | அகன்ற கரண்டி . |
| ஆரிடம் | வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் . |
| ஆரிடர் | முனிவர் . |
| ஆரிடலிங்கம் | முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் . |
| ஆரிடை | அரியவழி . |
| ஆரிப்படுகர் | அரிதாய் ஏறி இறங்கும் வழி . |
| ஆரிய | சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் . |
| ஆரியக்கூத்து | கழைக்கூத்து . |
| ஆரியகுச்சரி | மருத யாழ்த்திறவகை . |
| ஆரியச்சி | ஆரியப்பெண் . |
| ஆரியசத்தை | பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் . |
| ஆரியத்திரிவு | காண்க : தற்பவம் . |
| ஆரியப்பாவை | பாவைக்கூத்துவகை . |
| ஆரியப் பூமாலை | அடங்காப் பெண் ; காத்தவராயன் மனைவி . |
| ஆரியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் . |
| ஆரியம் | கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் . |
| ஆரியமொழி | வடமொழி . |
| ஆரியவராடி | ஒரு பண் ; வராடிவகை . |
| ஆரியவாசியம் | காண்க : ஓமம் . |
| ஆரியவேளர் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
| ஆரியவேளார் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
| ஆரியன் | ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் . |
| ஆரியாங்கனை | இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் . |
| ஆரியாவர்த்தம் | இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் . |
| ஆரியை | பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை . |
| ஆரீதம் | பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி . |
| ஆருகதம் | சமணமதம் ; நாவல்மரம் . |
| ஆருகதன் | சமணன் . |
| ஆருத்திரை | திருவாதிரை . |
| ஆருப்பியம் | வங்கமணல் . |
| ஆருபதம் | பித்தளை . |
| ஆருயிர் மருந்து | உணவு . |
| ஆருவம் | நீர் . |
| ஆருழலைப்படுதல் | வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் . |
| ஆரூடம் | ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் . |
| ஆரூடன் | ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் . |
| ஆரூபம் | ஒவ்வாமை ; நீங்காமை . |
| ஆரூர் | திருவாரூர் . |
| ஆரூர்க்கால் | கருப்பூரவகை . |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆரேவதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரை | நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் . |
| ஆரைக்காலி | கோரைவகை . |
| ஆரைக்கீரை | நீராரைக் கீரை . |
| ஆரைபற்றி | உடும்பு . |
| ஆரொட்டி | கூவைக்கிழங்கு . |
| ஆரோக்கியசாலை | மருத்துவவிடுதி ; மருத்துவமனை . |
| ஆரோக்கியம் | நோயின்மை ; நலம் . |
| ஆரோகணம் | ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி . |
| ஆரோகணித்தல் | எழும்புதல் ; ஏறுதல் . |
| ஆரோகம் | வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை . |
| ஆரோகி | இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று . |
| ஆரோசை | ஏற்றிப் பாடும் இசை . |
| ஆரோணம் | மீக்கோள் . |
| ஆரோதமடித்தல் | அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல் |
| ஆரோபணம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆராய்ச்சிமணி | முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி . |
| ஆராய்ச்சியார் | கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் . |
| ஆராய்ச்சியாளன் | ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் . |
| ஆராய்தல் | சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் . |
| ஆரார் | பகைவர் . |
| ஆரால் | மீன்வகை ; சேற்றாரால் . |
| ஆராவம் | பேரொலி சத்தம் . |
| ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் . |
| ஆராவமுது | காண்க : ஆராவமுதம் . |
| ஆரி | அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி . |
|
|
|