ஆலக்கொடிச்சி முதல் - ஆலோகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆலிகை அகலிகை .
ஆலிங்கணம் தழுவுகை .
ஆலிடம் தெருச்சிறகு .
ஆலித்தல் ஒலித்தல் .
ஆலிநாடன் திருமங்கையாழ்வார் .
ஆலிப்பு ஆரவாரம் .
ஆலிம் அறிந்தவன் .
ஆலியதம் காண்க : சிறுகுறிஞ்சா .
ஆல¦டம் இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை .
ஆல¦னகம் துத்தநாகம் .
ஆலுதல் ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் .
ஆலூகம் காண்க : வில்வம் .
ஆலேகனம் எழுதுதல் ; சித்திரித்தல் .
ஆலேகனி எழுதுகோல் ; எழுத்தாணி .
ஆலேபனம் பூசுகை .
ஆலேபூலேயெனல் பொருளின்றிப் பேசுதற்குறிப்பு .
ஆலை கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை .
ஆலைக்குழி கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் .
ஆலைத்தொட்டி கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் .
ஆலைபாய்தல் ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் .
ஆலைமாலை தொந்தரை ; மயக்கம் .
ஆலோகம் பார்வை ; ஒளி .
ஆலக்கொடிச்சி காண்க : ஆலக்கச்சி .
ஆலகண்டன் கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் .
ஆலகம் காண்க : ஆமலகம் .
ஆலகாலம் பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை .
ஆலகாலி காளி .
ஆலகிரீடை காண்க : அலரி .
ஆலங்கட்டி கல்மழை .
ஆலாங்கட்டி கல்மழை .
ஆலங்காட்டாண்டி வரிக்கூத்துவகை .
ஆலச்சுவர் சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் .
ஆலசம் சோம்பு .
ஆலசியம் சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு .
ஆலத்தி காண்க : ஆரத்தி .
ஆலத்தியெடுத்தல் ஆலத்தி சுற்றுதல் .
ஆலத்திவழித்தல் ஆலத்தி சுற்றுதல் .
ஆலதரன் நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் .
ஆலந்தை ஒரு சிறுமரம் .
ஆலம் நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு
ஆலம்பம் பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
ஆலம்பனம் பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
ஆலம்பலிகிதம் எழுத்துக்கூட்டிலக்கணம் .
ஆலம்பி அரிதாரம் .
ஆலமர்கடவுள் கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
ஆலமர்செல்வன் கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
ஆலமரம் மரவகை .
ஆலமுடையோன் துரிசு .
ஆலமுண்டோன் பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் .
ஆலயம் தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் .
ஆலயவிஞ்ஞானம் சாகும்வரை நிற்கும் உணர்ச்சி .
ஆவல் ஒலி ; மயிற்குரல் .
ஆலலம் திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை .
ஆலவட்டம் பெருவிசிறி ; விசிறி .
ஆலவன் ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் .
ஆலவாய் பாம்பு ; மதுரை .
ஆலவாலம் மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் .
ஆலவிருட்சம் ஆலமரம் ; ஆதொண்டை .
ஆலா கடற்கரைப் பறவைவகை .
ஆலாகலம் காண்க : ஆலகாலம் .
ஆலாசியம் மதுரை ; ஆண்முதலை .
ஆலாட்டு சிறிது உலரவைத்தல் .
ஆலாட்டுதல் தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
ஆலவாட்டுதல் தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
ஆலாத்தி காண்க : ஆலத்தி .
ஆலாத்து கப்பலின் பெருங்கயிறு .
ஆலாதாடை அவுரி .
ஆலாப்பறத்தல் திண்டாடுதல் .
ஆலாபம் உரையாடல் .
ஆலாபனம் இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
ஆலாபித்தல் இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
ஆலாபினி சுரபேதம் .
ஆலாலம் துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு .
ஆலாவர்த்தம் காண்க : ஆலவட்டம் .
ஆலி மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் .