ஆலோகனம் முதல் - ஆவாளஞ்சீவாளம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆவரணம் மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி
ஆவரணமூர்த்தி கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் .
ஆவரணி பார்வதி .
ஆவரணீயம் மறைப்பது .
ஆவரி அம்பு .
ஆவரித்தல் மறைத்தல் .
ஆவல் ஆசை ; வளைவு .
ஆவல்லி சீந்திற்கொடி .
ஆவலங்கொட்டுதல் ஆர்த்து வாய்க்கொட்டுதல் .
ஆவலம் வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி .
ஆவலர் உற்றார் ; கணவர் ; காதலர் .
ஆவலாதி குறைகூறுகை ; அவதூறு .
ஆவலாதிக்காரன் போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் .
ஆவலி காண்க : ஆவளி .
ஆவலித்தல் அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் .
ஆவலிப்பு செருக்கு .
ஆவளி வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு .
ஆவளிச்சேவகம் உறுதியற்ற வேலை .
ஆவளித்தல் ஒழுங்குபடுத்துதல் .
ஆவற்காலம் ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் .
ஆவறியாவறியெனல் பேராசைக் குறிப்பு .
ஆவா இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு .
ஆவாகனம் அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை .
ஆவாகனமுத்திரை முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு .
ஆவாகித்தல் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் .
ஆவாகை காண்க : நிலவாகை .
ஆவாசம் நகரம் ; மருதநிலத்தூர் .
ஆவாதம் காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று .
ஆவாபம் விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் .
ஆவாபனம் நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி .
ஆவாய்கத்துதல் இல்லையென்று சொல்லித் திரிதல் .
ஆவாரம் மறைப்பு .
ஆவாரகம் மறைப்பு .
ஆவாரம்பூச்சம்பா சம்பாநெல்வகை .
ஆவாரைப் பஞ்சகம் ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன .
ஆவாலம் மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் .
ஆவாலை பாட்டுவகை .
ஆவாளஞ்சீவாளம் காண்க : ஆவச்சீவாளம் .
ஆலோகனம் பார்க்கை .
ஆலோசனை ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ;
ஆலோசித்தல் சிந்தித்தல் ; ஆராய்தல் .
ஆலோபம் வருத்தம் .
ஆலோலம் நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் .
ஆலோலிதமுகம் ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை .
ஆலோன் சந்திரன் .
ஆவ இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு .
ஆவகம் எழுவகைக் காற்றுகளுள் ஒன்று .
ஆவச்சீவாளம் முழு நிலைமை .
ஆவசியகம் இன்றியமையாதது .
ஆவசியம் இன்றியமையாதது .
ஆவஞ்சி இடக்கை என்னும் தோற்கருவி .
ஆவட்டங்கொட்டுதல் இல்லையென்று சொல்லித் திரிதல் .
ஆவட்டைசோவட்டை சோர்வு .
ஆவடதர் தேவசாதியார்வகை .
ஆவணக்களம் பத்திரப் பதிவுச்சாலை .
ஆவணக்களரி பத்திரப் பதிவுச்சாலை .
ஆவணம் கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
ஆபணம் கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
ஆவணமாக்கள் உறுதிமொழி வாங்குவோர் .
ஆவணி ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் .
ஆவணி அவிட்டம் ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா .
ஆவணிமுழக்கம் ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் .
ஆவது ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் .
ஆவதை திரும்பக் கூறுகை .
ஆவநாழி காண்க : அம்பறாத்தூணி .
ஆவநாழிகை காண்க : அம்பறாத்தூணி .
ஆவம் அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி .
ஆவயின் அவ்விடத்தில் .
ஆவர் யாவர் .
ஆவர்த்தம் எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை .
ஆவர்த்தனம் மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் .
ஆவர்த்தி தடவை .
ஆவர்த்தித்தல் முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் .
ஆவரணச்சுவர் கோயில் திருமதில் .
ஆவரணசக்தி மாயை .