சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆவிருத்தியலங்காரம் | பின்வருநிலையணி . |
| ஆவிருதம் | மறைக்கப்பட்டது |
| ஆவிருதி | ஆணவமலம் . |
| ஆவிருந்து | நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை . |
| ஆவிரை | செடிவகை . |
| ஆவிலம் | கலங்கல் நீர் . |
| ஆவிலியர் | வேளாளர் ; வேடர் . |
| ஆவிவாங்குதல் | உயிர் கவர்தல் ; வருத்துதல் . |
| ஆவிவிடுதல் | சாதல் ; உயிர்விடத் துணிதல் . |
| ஆவினன்குடி | முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி . |
| ஆவு | காண்க : குன்றி . |
| ஆவுடையார் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுடையாள் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுதல் | விரும்புதல் . |
| ஆவுதி | ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு . |
| ஆவுரிஞ்சி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவுரிஞ்சுதறி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவெனல் | அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு . |
| ஆவேகி | காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| ஆவேசசமவாதம் | காண்க : காபாலமதம் . |
| ஆவேசநீர் | வெறியூட்டும் கள் முதலியன . |
| ஆவேசம் | தெய்வமேறுகை ; பேய் ; கோபம் . |
| ஆவேசவாதி | காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் . |
| ஆவேசனம் | உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை . |
| ஆவேசாவதாரம் | ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு . |
| ஆவேசி | காண்க : ஆவேகி . |
| ஆவேசித்தல் | உட்புகுதல் ; தெய்வமேறுதல் |
| ஆவேதனம் | அறிக்கை . |
| ஆவேலம் | தம்பலம் . |
| ஆவேலி | தொழுவம் . |
| ஆவேறு | காளை , இடபம் . |
| ஆவோ | வியப்பு இரக்கச் சொல் . |
| ஆழ்கடற்றுயின்றோன் | திருமால் . |
| ஆழ்த்துதல் | அமிழ்த்துதல் . |
| ஆழ்தல் | மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் . |
| ஆழ்வள்ளி | மரவள்ளி , கிழங்குவகை . |
| ஆழ்வார் | பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி . |
| ஆழ்வார்கன்மி | திருமால்கோயில் அருச்சகன் . |
| ஆழ்வார்திருநாள் | திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா . |
| ஆழ்வான் | சூரியன் . |
| ஆழ்வி | தலைவன் ; தலைவி . |
| ஆழ்வு | ஆழம் . |
| ஆழங்கால் | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை . |
| ஆழங்காற்படுதல் | அழுந்துதல் ; ஈடுபடுதல் . |
| ஆழம் | ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து . |
| ஆழம்பார்த்தல் | ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் . |
| ஆழமுடைத்தாதல் | நுண்பொருள் பொதிந்திருத்தல் ; நூலழகுகளுள் ஒன்று . |
| ஆழரம் | அத்தி . |
| ஆழல் | காண்க : கறையான் . |
| ஆழாக்கு | அரைக்காற்படி . |
| ஆழாங்கு | காண்க : ஆழங்கால் . |
| ஆழாடக்கிடங்கு | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| ஆவி | உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் . |
| ஆவிகம் | ஆட்டுமயிர்க் கம்பளம் . |
| ஆவிகாட்டுதல் | நிவேதனஞ் செய்தல் . |
| ஆவிகை | பற்றுக்கோடு . |
| ஆவிடை | காண்க : ஆவுடையார் . |
| ஆவிடையார் | காண்க : ஆவுடையார் . |
| ஆவித்தல் | வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் . |
| ஆவித்தைலம் | நீராவியால் வடிக்கும் தைலம் . |
| ஆவிதம் | காண்க : மரை ; திருகூசி . |
| ஆவிநீர் | நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் . |
| ஆவிபத்தம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபதம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபத்திரம் | புகையிலை . |
| ஆவிபறிதல் | நீராவி எழும்புதல் ; மரித்தல் |
| ஆவிபிடித்தல் | நீராவியால் வேது கொள்ளுதல் . |
| ஆவிமா | மரவகை . |
| ஆவியர் | வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் . |
| ஆவிர்தம் | சுழற்சி . |
| ஆவிர்ப்பவித்தல் | வெளிப்படுதல் . |
| ஆவிர்ப்பாவம் | வெளிப்படுகை . |
| ஆவிர்ப்பூதம் | தோன்றியது ; வெளிப்பட்டது . |
| ஆவிரம் | இடையரூர் ; நரகவகை . |
| ஆவிருத்தி | தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை . |
|
|
|