ஆழாத்தல் முதல் - ஆளோடி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆளொட்டி காவற்கட்டு .
ஆளொதுங்கி காவற்கட்டு .
ஆளோட்டி வேலை வாங்குவோன் .
ஆளோடி வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி .
ஆழித்தொட்டான் ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் .
ஆழிமால்வரை சக்கரவாளகிரி .
ஆழிமுரசோன் கடலை முரசாகவுடைய மன்மதன் .
ஆழிமூழையாய் மிக விரைவாய் .
ஆழியான் திருமால் ; அரசன் .
ஆழியிழைத்தல் கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி .
ஆழிவலியான்மணி மிளகு .
ஆழிவித்து முத்து .
ஆழிவிரல் மோதிரவிரல் .
ஆழும்பாழுமாய் சீர்கேடாய் ; வீணாக .
ஆள் ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி .
ஆள்காட்டிவேலை ஏமாற்று வேலை .
ஆள்கை ஆளுதல் .
ஆள்திட்டம் ஓர் ஆளுக்குரிய அளவு ; ஓர் ஆளின் உடலடையாளம் .
ஆள்மட்டச்சுவர் கைப்பிடிச் சுவர் ; மதிற்சுவர் .
ஆள்மட்டம் ஒரு மனிதனின் உயரவளவு .
ஆள்மாகாணம் ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு .
ஆள்மாறாட்டம் வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை .
ஆள்வணங்கி அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி .
ஆள்வரி தலைவரி .
ஆள்வார் சுவாமி .
ஆள்வாரம் பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு .
ஆள்வாரி காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி .
ஆள்வாரிநிலம் கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி .
ஆள்வாரில்லா மாடு பட்டிமாடு .
ஆள்வாரிலி மாடு பட்டிமாடு .
ஆள்விடுதல் தூதனுப்புதல் .
ஆள்வினை முயற்சி ; மகிழ்ச்சி .
ஆள்வினை வேள்வி விருந்து புறந்தருகை .
ஆள்வீதம் ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு .
ஆளகம் சுரைக்கொடி .
ஆளடிமை அடியான்(ள்) .
ஆளத்தி ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .
ஆளம் ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .
ஆளமஞ்சி கூலியின்றி வாங்கும் வேலை .
ஆளரவம் மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி .
ஆளரி ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி .
ஆளல் ஆளுதல் ; மீன்வகை .
ஆளறுதி தனிமை .
ஆளன் ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் .
ஆளாதல் அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் .
ஆளாபம் காண்க : ஆலாபனம் .
ஆளாழம் ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் .
ஆளானம் யானை கட்டுந் தறி .
ஆளி ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு .
ஆளிட்டான் காசு பழைய நாணயவகை .
ஆளிடுதல் பதிலாளை அமர்த்துதல் .
ஆளியூர்தி துர்க்கை .
ஆளிவிதை சிறு சணல்வித்து .
ஆளிவிரை சிறு சணல்வித்து .
ஆளுகை ஆட்சி ; ஆளுதல் .
ஆளுங்கணத்தார் ஊர்ச்சபை அதகாரிகள் .
ஆளுங்கணம் ஊரையாளும் சபை .
ஆளுடையதேவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் .
ஆளுடைய நம்பி சுந்தரமூர்த்தி நாயனார் .
ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் .
ஆளுடையவரசு திருநாவுக்கரசு நாயனார் .
ஆளுடையான் அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி .
ஆளெழுத்துச் சேலை சித்திரம் எழுதிய சேலை வகை .
ஆளெனல் நாயின் கதறல் குறிப்பு .
ஆளை காண்க : அறுகு .
ஆளையடிச்சான் புளியமரம் .
ஆழாத்தல் ஈடுபடுதல் .
ஆழாரம் பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி .
ஆழி சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி .
ஆழிக்கொடி பவளம் .
ஆழிக்கடல்விழுது கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு .
ஆழித்தல் ஆழமாய்த் தோண்டுதல் .
ஆழித்தீ வடவையனல் .
ஆழித்தேர் சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் .
ஆழிதிருத்துதல் கூடலிழைத்தல் .