ஆளோலை முதல் - ஆறலைத்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆற்றுப்பித்தல் ஆற்றோரம் .
ஆற்றுப்புரவு ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் .
ஆற்றுப்பூத்தான் காண்க : பூனைக்காலி .
ஆற்றுப்பூவரசு மரவகை .
ஆற்றுப்பொடி ஆற்றிலுள்ள சிறுமீன் .
ஆற்றுமரி நீருமரிச்செடி ; காண்க : ஆற்றுக்கொடி .
ஆற்றுமல்லிகை நீர்ப்பூடுவகை .
ஆற்றுமுள்ளங்கி முள்ளங்கிவகை .
ஆற்றுமுள்ளி காண்க : கண்டங்கத்தரி : கழுதை முள்ளி .
ஆற்றுமேலழகி பூடுவகை .
ஆற்றுல்லம் உல்ல மீன்வகை .
ஆற்றுவரி ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் .
ஆற்றுவாய்முகம் ஆறு கடலொடு கலக்குமிடம் .
ஆற்றுவாளை ஏரி வாளைமீன் .
ஆற்றுவைப்பு ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் .
ஆற்றொழுக்கு ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று .
ஆறக்கட்டுதல் பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் .
ஆறகோரம் கொன்றை .
ஆறங்கம் வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு .
ஆறத்தணிய காண்க : ஆறவமர .
ஆறதீகம் கல்நார் .
ஆறப்போடுதல் காலந்தாழ்த்தல் .
ஆறல்பீறல் பயனற்றது .
ஆறலை வழிப்பறி .
ஆறலைத்தல் வழிப்பறி செய்தல் .
ஆளோலை அடிமைப்பத்திரம் .
ஆற்கந்திதம் குதிரை நடைவகை .
ஆற்பணம் விருப்பம் ; உரியதாகக் கொடுத்தல் .
ஆற்பதம் பற்றுக்கோடு .
ஆற்பனேபதம் வடமொழி வினைவகை .
ஆற்போடம் காக்கணம் .
ஆற்போதம் எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை .
ஆற்ற மிக ; முற்ற .
ஆற்றங்கரைத்தேவை வரிவகை .
ஆற்றங்கால் காண்க : காட்டுப்பூவரசு .
ஆற்றடம்பு அடம்புவகை .
ஆற்றமாட்டாமை முடியாமை ; தாங்க முடியாமை .
ஆற்றரசு காண்க : ஆற்றுப்பூவரசு .
ஆற்றல் சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் .
ஆற்றலரி காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் .
ஆற்றறுத்தல் இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் .
ஆற்றாச்சண்டி வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் .
ஆற்றாமை தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை .
ஆற்றான் வலிமையற்றவன் ; வறிஞன் .
ஆற்றிக்கொடுத்தல் சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் .
ஆற்றிடைக்குறை ஆற்றினிடையேயுள்ள திட்டு .
ஆற்றித்தேற்றுதல் சமாதானப்படுத்துதல் .
ஆற்றிலுப்பை மரவகை .
ஆற்றிறால் இறால் மீன்வகை .
ஆற்றின்வித்து கற்பூர சிலாசத்து .
ஆற்றுக்கால் ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் .
ஆற்றுக்காலாட்டியார் மருதநிலப் பெண்டிர் .
ஆற்றுக்காலேரி ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி .
ஆற்றுக்கால் பாய்ச்சல் ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் .
ஆற்றுக்குலை ஆற்றின் கரை ; வரிவகை .
ஆற்றுக்கெண்டை ஒருவகைச் சிறுமீன் .
ஆற்றுக்கொடி பேய்க்கொம்மட்டி .
ஆற்றுச்சஞ்சலை காண்க : மலைவட்டை .
ஆற்றுச்சவுக்கு காண்க : கோடைச்சவுக்கு ; செடிவகை .
ஆற்றுச்செருப்படி பூடுவகை .
ஆற்றுணா கட்டுச்சோறு ; வழியுணவு .
ஆற்றுத்தும்மட்டி காண்க : ஆற்றுக்கொடி .
ஆற்றுத்துவரை செடிவகை .
ஆற்றுதல் வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் .
ஆற்றுநீர் செயல்புரிபவர் ; உதவி செய்வார் ; வன்மையுடையார் .
ஆற்றுநெட்டி காண்க : நீர்ச்சுண்டி .
ஆற்றுப்பச்சை நாகப்பச்சைக்கல் .
ஆற்றுப்படுகை ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் .
ஆற்றுப்படுத்தல் வழிச்செலுத்துதல் ; போக்குதல் .
ஆற்றுப்படை பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை .
ஆற்றுப்பாசி நீர்ப்பூடுவகை .
ஆற்றுப்பாட்டம் வரிவகை .
ஆற்றுப்பாய்ச்சல் காண்க : ஆற்றுக்கால் பாய்ச்சல் .
ஆற்றுப்பாய்ச்சி ஆற்றில் கப்பல் செலுத்துவோன் .
ஆற்றுப்பாலை மரவகை .