ஆறவமர முதல் - ஆனந்தகரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆன் பெற்றம் , எருமை , மரை இவற்றின் பெண் ; காளை ; அவ்விடம் ; மூன்றனுருபு ; ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை .
ஆன்காவலன் வைசியன் .
ஆன்பொருந்தம் ஆன்பொருநை ஆறு , தாமிரபரணியாறு .
ஆன்மசுத்தி பத்துச் செயலுள் ஒன்று ; ஐந்து சுத்தியுள் ஒன்று ; தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று .
ஆன்மஞானம் ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு .
ஆன்மதத்துவம் காண்க : அசுத்ததத்துவம் .
ஆன்மதரிசனம் தன்னையுணரும் அறிவு ; பத்துச் செயலுள் ஒன்று
ஆன்மபூ மன்மதன் ; பிரமன் .
ஆன்மபோதம் உயிருணர்வு .
ஆன்மமந்திரம் காண்க : அசபா .
ஆன்மயோனி காண்க : ஆன்மபூ .
ஆன்மரூபம் பத்துச் செயலுள் ஒன்று .
ஆன்மலாபம் ஆத்மாவின் பேறு .
ஆன்மவீரன் விறலோன் : மைத்துனன் : புதல்வன் : கற்றோன் .
ஆன்மா உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு .
ஆன்மாச்சிரயம் தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் .
ஆன்மாதீனன் ஆன்மவீரன் : பிராணாதாரன் .
ஆன்மார்த்தபூசை தன் மனமொன்றிய வழிபாடு .
ஆன்மார்த்தம் தற்பொருட்டு .
ஆன்மெழுக்கு பசுவின் சாணம் .
ஆன்வல்லவர் முல்லைநில மாக்கள் .
ஆன்வல்லோர் முல்லைநில மாக்கள் .
ஆன்ற மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன .
ஆன்றமைதல் அடங்கியமைதல் .
ஆன்றல் அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி .
ஆன்றவர் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்றார் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்றோர் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்று நிறைந்து : விரிந்து ; நீங்கி .
ஆன்றோள் மாண்புடையாள் .
ஆன்னிகம் நாட்கடன் .
ஆன அந்த ; ஆகிய .
ஆனகதுந்துபி முரசுவகை ; வாசுதேவர் .
ஆனகம் படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் .
ஆனஞ்சு பஞ்சகவ்வியம் ; பசுவின் பால் ; தயிர் ; நெய் ; சிறுநீர் , சாணம் சேர்ந்த கலவை .
ஆனத்தவாயு வாதநோய்வகை .
ஆனத்தேர் விடத்தேர்ச்செடி .
ஆனதம் சமணரது கற்பலோகங்களுள் ஒன்று .
ஆனது எழுவாய்ச் சொல்லுருபு .
ஆனதும்பி மீன்வகை .
ஆனந்த அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு .
ஆனந்தக்கண்ணீர் மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் .
ஆனந்தக்கரப்பான் ஒருவகைப் கரப்பான் நோய் .
ஆனந்தகரந்தம் மருக்கொழுந்து .
ஆனந்தகரம் மகிழ்ச்சி தருவது .
ஆறவமர அமைதியாய் , நிதானமாக .
ஆறவிடுதல் காணக : ஆறப்போடுதல்
ஆறறிவுயிர் ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் .
ஆறன்மட்டம் தாளவகை .
ஆறாட்டம் நோயுற்றோர் படும் துயரம் .
ஆறாட்டு தீர்த்தவாரித் திருவிழா .
ஆறாடி நிலைகெட்டவன் .
ஆறாடுதல் தீர்த்தவாரி மூழ்குதல் .
ஆறாதாரம் உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .
ஆறாதூறு காண்க : அவதூறு .
ஆறாமீன் கார்த்திகை .
ஆறாமீனறவோட்டு கார்த்திகையில் சூரியன் புகும் காலம் .
ஆறாயிரப்படி ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் ; திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது .
ஆறாரைச்சக்கரம் மிறைக்கவியுள் ஒன்று .
ஆறியகற்பு அறக்கற்பு .
ஆறிலொன்று அரசனுக்குரிய ஆறிலொரு பாகம் .
ஆறு நதி ; வழி ; பக்கம் ; சமயம் ; அறம் ; சூழச்சி ; விதம் ; இயல்பு ; ஓர் எண்ணிக்கை ; தலைக்கடை .
ஆறுகட்டி ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் .
ஆறுகட்டுதல் ஆற்றில் அணை கட்டுதல் ; ஆற்றிற்குக் கரையிடுதல் .
ஆறுகாட்டி வழிகாட்டி .
ஆறுசூடி கங்கையைத் தலையில் அணிந்துள்ள சிவன் .
ஆறுதல் தணிதல் ; சூடு தணிதல் ; அமைதியாதல் ; புண் காய்தல் ; அடங்குதல் ; மனவமைதி .
ஆறுபரியான் இராகு ; கேது .
ஆறுமணிப்பூ மாலையில் மலரும் மலைப்பூ வகை .
ஆறுமாசக் கடன்காரன் ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் .
ஆறுமாசமூட்டைக்காரன் ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் .
ஆறுமாதக்காடி மிகப் புளிக்க வைத்த காடி மருந்து .
ஆறெழுத்து ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் .
ஆறெறிபறை வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை .
ஆறை ஆற்றூர் .