ஆனந்தக்களிப்பு முதல் - ஆனைக்குன்றிமணி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆனந்தரியம் இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு .
ஆனந்தவருவி இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு .
ஆனந்தவல்லி பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் .
ஆனந்தவுவமை மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் .
ஆனந்தவோமம் ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு .
ஆனந்தன் சிவன் ; அருகன் .
ஆனந்தான்மவாதி ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் .
ஆனந்தி பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை .
ஆனந்தித்தல் மகிழ்வடைதல் .
ஆனந்தை உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை .
ஆனம் எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் .
ஆனமட்டும் கூடியவரை .
ஆனயம் கொண்டுவருகை ; பூணூல்சடங்கு .
ஆனயனம் கொண்டுவருகை ; பூணூல்சடங்கு .
ஆனர்த்தகம் போர் ; நாடகசாலை ; ஒரு நாடு .
ஆனவர் இடையர் .
ஆனவன் நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு .
ஆனவாள் கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் .
ஆனனம் முகம் .
ஆனா நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி .
ஆனாகம் நீட்சி ; வயிற்றுப்பொருமல் நோய் .
ஆனாங்குருவி குருவிவகை .
ஆனாமை நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் .
ஆனாயகலை கண்ணறைத்தசை .
ஆனாயம் வாயுக்கண்ணறை .
ஆனாயன் மாட்டிடையன் .
ஆனால் ஆயின் ; ஆகையால் .
ஆனாலும் ஆயினும் .
ஆனி மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு .
ஆனிக்கருந்தலை ஆனிமாதக் கடைசி .
ஆனித்தூக்கம் ஆனிமாதத்தில் கடலின் அமைதி .
ஆனியம் நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் .
ஆனிரை பசுக்கூட்டம் .
ஆனிலன் வாயு புதல்வனாகிய அனுமான் ; பீமன் .
ஆனிலை பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் .
ஆனிலையுலகம் காண்க : ஆனுலகு .
ஆனீர் கோமூத்திரம் .
ஆனுகூலியம் அனுகூலமுடைமை .
ஆனுதல் நீங்குதல் .
ஆனும் ஆயினும் ; ஆவது .
ஆனுலகு கோலோகம் .
ஆனெய் பசுவின் நெய் .
ஆனேறு எருது .
ஆனை யானை ; காண்க : அத்தி : ஆத்தி .
ஆனைக்கசடன் நெல்வகை .
ஆனைக்கண் அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி .
ஆனைக்கரடு ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் .
ஆனைக்கள்ளிமுளையான் பூடுவகை .
ஆனைக்கற்றலை கடல்மீன்வகை .
ஆனைக்கற்றாழை ஒருவகை நீண்ட கற்றாழை .
ஆனைக்காசு நாணயவகை .
ஆனைக்காயம் காண்க : ஆனைப்பெருங்காயம் .
ஆனைக்காரன் யானைப்பாகன் .
ஆனைக்காரை காண்க : ஒதிமரம் .
ஆனைக்கால் பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு .
ஆனைக்குப்பு சதுரங்க விளையாட்டு .
ஆனைக்குரு மரவகை .
ஆனைக்குருகு அன்றில் .
ஆனைக்குழி யானை பிடிக்குமிடம் .
ஆனைக்குன்றிமணி காண்க : மஞ்சாடிமரம் .
ஆனந்தக்களிப்பு பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் .
ஆனந்தகானம் காசி .
ஆனந்தகுறுவை நெல்வகை .
ஆனந்ததாண்டவம் நடராசர் புரியும் நடனம் .
ஆனந்ததீர்த்தர் மத்துவாசாரியார் .
ஆனந்தநித்திரை யோகநித்திரை .
ஆனந்தநிருத்தம் காண்க : ஆனந்ததாண்டவம் .
ஆனந்தப்பையுள் கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை .
ஆனந்தபரவசம் மகிழ்ச்சியால் தன்னை மறக்கை .
ஆனந்தபைரவம் சிந்தூரவகை .
ஆனந்தபைரவி ஒரு பண் .
ஆனந்தம் பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை .
ஆனந்தமயகோசம் உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று .
ஆனந்தமயம் இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் .
ஆனந்தமூலி கஞ்சா .