மாலைநேரம் முதல் - மாற்றுமை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மாலைநேரம் அந்திவேளை .
மாலைப்படிகம் பளிங்கு .
மாலைமசங்கல் அந்திக்காலத்து மங்கற்பொழுது .
மாலைமாற்று எழுத்துகளை ஈறுமுதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமலிருக்கும் மிறைக்கவிவகை ; திருமணத்தில் மாலை மாற்றுதல் .
மாலைமாற்றுதல் திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாறிமாறி மாலையிடுதல் .
மாலையணி ஓர் அணிவகை .
மாலையணிதல் மாலையால் அலங்கரித்தல் ; புணர்ச்சியின்பந் துய்த்தல் .
மாலையந்தி காண்க : மாலைநேரம் .
மாலையிட்டவன் கணவன் .
மாலையிடுதல் காண்க : மாலைசூட்டுதல் .
மாலையீடு காண்க : மாலைசூட்டு ; உடன்கட்டையேறிய பெண்ணின் பொருட்டு எழுப்பிய நினைவுக் கூட்டம் ; அரசர் முதலியவரின் நினைவுச்சின்னம் அமைந்த ஈமம் .
மாலையுவமை பூமாலைபோல் உவமை பல ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை .
மாலைவாங்குதல் மாலையை விலைக்கு வாங்குதல் ; பரிசங் கொடுத்தல் .
மாலைவெயில் அந்திப்பொழுதின் மஞ்சள் வெயில் .
மாலைவெள்ளி அந்தியில் தோன்றும் சுக்கிரன் .
மாலோகம் மேலேழுலகத்துள் ஒன்று ; மிகுதி .
மாலோன் காண்க : மாலவன் ; இந்திரன் .
மாவட்டணம் நெடும்பரிசை .
மாவட்டம் மாநிலத்தின் ஒரு பிரிவு .
மாவடம் மாம்பலகை .
மாவடி மாவடு ; மாவடுவின் பிளவு .
மாவடு மாவின் பிஞ்சு .
மாவடை நிலத்திலடங்கிய விலங்குகள் ; ஊரில் கால்நடை அடையும் இடம் .
மாவயிரக்கல் நிலத்தில் அகப்படுங் கனிப்பொருள்வகை .
மாவரி சல்லடை .
மாவலன் குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் .
மாவலான் குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் .
மாவலி திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன் ; தீப்பொறி சிதறும் கார்த்திகை வாணவகை .
மாவிட்டம் கடல்நுரை .
மாவிடை காண்க : மாவடை .
மாவித்தன் காண்க : மாவுத்தன் .
மாவிரதம் சைவ உட்சமயங்களுள் ஒன்று ; பாதகங்கள் யாவும் விலகக்கொள்ளும் உறுதிமொழி .
மாவிரதியர் மாவிரத சமயத்தைச் சார்ந்த சைவத்துறவியர் .
மாவிருக்கம் காண்க : சதுரக்கள்ளி .
மாவிலங்கம் ஒரு மரவகை .
மாவிலங்கு ஒரு மரவகை ; இலிங்கபாடாணம் .
மாவிலங்கை இலிங்கபாடாணம் ; திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக்கோடனது தலைநகர் .
மாவிலிங்கம் ஒரு மரவகை ; இலிங்கபாடாணம் .
மாவிலைத்தோரணம் மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந்தோரணம் .
மாவிளக்கு மாவினாற் செய்த நெய்விளக்கு .
மாவிளம் வில்வமரம் .
மாவுத்தன் யானைப்பாகன் .
மாவெனல் அழைத்தற்குறிப்பு .
மாழ்கி காண்க : தொட்டாற்சிணுங்கி .
மாழ்கு மிருகசீரிடநாள் ; சுருள் .
மாழ்குதல் மயங்குதல் ; கெடுதல் ; சோம்புதல் ; கலத்தல் .
மாழாத்தல் மயங்குதல் ; ஒளிமழுங்குதல் .
மாழாம்பலம் தூக்கம் .
மாழை இளமை ; அழகு ; பேதைமை ; மாமரம் ; மாவடு ; மாதர் கூட்டம் ; ஓலை ; உலோகக்கட்டி ; பொன் ; திரட்சி .
மாள ஒரு முன்னிலை அசை .
மாளம் கத்தூரி .
மாளயம் புரட்டாசி மாதத்தில் இறந்தவரை நினைத்து அன்னார்க்குச் செய்யும் சிராத்தம் ; சாந்திரமான மாதத்துத் தேய்பிறை .
மாளவகவுளம் ஒரு பண்வகை .
மாளவி ஒரு பண்வகை .
மாளிகை அரண்மனை ; கோயில் ; மாடிவீட்டின் மேல்நிலம் ; மாடமுள்ள பெருவீடு ; வீடு .
மாளிகைச்சாந்து உயர்ந்த கலவைச்சந்தனம் .
மாளுதல் சாதல் ; அழிதல் ; கழிதல் ; இயலுதல் .
மாளை புளியம்பட்டை .
மாற்சரியம் பொறாமை .
மாற்ற ஓர் உவமச்சொல் .
மாற்றம் சொல் ; விடை ; வஞ்சினமொழி ; மாறுபட்ட நிலை ; பகை ; கழுவாய் ; வாதம் .
மாற்றல் கொடாமை ; ஒன்று கொடுத்து ஒன்று வாங்கல் ; ஒன்றை வேறொன்றாக்கல் ; தீர்த்தல் ; இடம் மாறல் ; மாற்றுதல் .
மாற்றலர் பகைவர் .
மாற்றவள் காண்க : மாற்றான் .
மாற்றாட்டி காண்க : மாற்றான் .
மாற்றாண்மை பகைமை .
மாற்றாந்தாய் தந்தையின் மறுதாரம் .
மாற்றாள் சக்களத்தி .
மாற்றான் பகைவன் ; ஒட்டுப்பலகை ; மாற்று மருந்து .
மாற்று வேறுபடுத்துகை ; ஒழிக்கை ; கொடிய மருந்து , நஞ்சு முதலிய குற்றத்தை நீக்கக் கொடுக்கும் மருந்து ; பண்டமாற்று ; விலை ; வண்ணான் வெளுத்த உருப்படி ; மாற்றி உடுத்தும் சீலை ; பொன் வெள்ளிகளின் உரைமாற்று ; தங்கம் ; எதிர் ; உவமை ; வலிமை ; வண்ணம் .
மாற்றுக்குறைச்சல் பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் .
மாற்றுத்தாய் காண்க : மாற்றாந்தாய் .
மாற்றுதல் வேறுபடுத்துதல் ; செம்மைப்படுத்துதல் ; நீக்குதல் ; கெடுத்தல் ; ஓடச்செய்தல் ; தடுத்தல் ; மறுத்துரைத்தல் ; அழித்தல் ; ஒடுக்குதல் ; மறைத்தல் ; நாணயம் மாற்றுதல் ; பண்டமாற்றுதல் ; இருப்பிடம் வேறுபடுத்துதல் ; பெருக்கித் துப்புரவு செய்தல் ; இடைவிடுதல் ; ஒழிதல் ; தாமதித்தல் ; ஓரிடத்துச் சமைத்த உணவை வேறிடத்துக்கு அனுப்புதல் .
மாற்றுபகாரம் கைம்மாறு .
மாற்றுமை மாறுபாடு .