மாற்றுவேந்தன் முதல் - மானவர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மாற்றுவேந்தன் பகையரசன் .
மாற்றோர் காண்க : மாற்றலர் .
மாற்றோலைப்படுதல் ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோர் அட்டவணையிற் சேர்க்கப்படுதல் .
மாறன் பாண்டியன் ; சடகோபர் என்னும் நம்மாழ்வார் ; பகைவன் .
மாறாட்டம் மாற்றுகை ; புரட்டு ; தடுமாற்றம் ; பைத்தியம் ; தவறு .
மாறாட்டு புரட்டு ; காண்க : பரிவருத்தனை .
மாறாடுதல் உருவம் முதலியன மாறுதல் ; தடுமாறுதல் ; எதிர்த்துநிற்றல் ; மாறிப்புகுதல் ; புரட்டுதல் .
மாறிப்போடுதல் மாற்றுதல் .
மாறியடித்தல் காற்றுத் திருப்பிவீசுதல் ; ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல் .
மாறியாடுதல் காலை மாற்றி நடனமாடுதல் .
மாறிருமார்பினள் திருமகள் .
மாறு வேறுபாடு ; பகை ; ஒவ்வாதது ; ஒப்பு ; இறந்துபாடு ; பிறவி ; பதிலுதவி ; பதில் ; துடைப்பம் ; மிலாறு ; பருத்தி முதலியவற்றின் தூறு ; எதிர் ; பதிலியாகக் கொள்ளுவது ; பிரம்பு ; விதம் ; காரணப் பொருளுணர்த்தும் ஓர் இடைச்சொல் .
மாறு (வி) குணி ; ஒன்றை மற்றொன்றாக்கு ; வேறாக்கு ; மாற்று .
மாறுகண் சாய்ந்த பார்வை , ஓரப்பார்வை .
மாறுகம் சீலை .
மாறுகால் தேசிக்கூத்திற்குரிய கால்வகை .
மாறுகால்மாறுகைவாங்குதல் ஒரு பக்கத்துக் கையையும் மறுபக்கத்துக் காலையும் தண்டனையாக வெட்டுதல் .
மாறுகொள்ளுதல் காண்க : மாறுபடுதல் .
மாறுகொளக்கூறல் நூற்குற்றம் பத்தனுள் முன்னோடு பின் முரணாகக் கூறும் குற்றவகை .
மாறுகோள் வக்கிரம் ; ஒவ்வாமை .
மாறுத்தரம் பதில் .
மாறுதல் வேறுபடுதல் ; குணமாதல் ; சரிப்படுதல் ; பின்வாங்குதல் ; இருப்பிடம் வேறுபடுதல் ; நீங்குதல் ; முதுகிடுதல் ; கூத்தாடுதல் ; இறத்தல் ; இல்லையாதல் ; பொய்யாதல் ; விற்றல் ; பணிசெய்தல் ; கைவிடுதல் ; பிறனுக்குதவுதல் ; கழித்தல் ; மறுத்தல் ; எண் பெருக்குதல் ; அடித்தல் .
மாறுபடல் மாறிப்போதல் ; முரணுதல் ; பகைமைகொள்ளுதல் .
மாறுபடுதல் மாறிப்போதல் ; முரணுதல் ; பகைமைகொள்ளுதல் .
மாறுபடுபுகழ்நிலை சொல்லக்கருதிய பொருளைவிடுத்து அதனைப் பழிக்கும் பொருட்டு வேறொன்றை வெளிப்படையாக புகழும் அணிவகை .
மாறுபடுபொருண்மொழி முன்மொழிந்ததற்கு மாறாகப் பொருள் தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அணிவழு .
மாறுபாடு பகைமை ; வேறுபடுதல் ; ஒவ்வாமை ; புரட்டு .
மாறுமுகம் நினைத்தவாறு மாற்றிக்கொள்ளும் முகவடிவு .
மாறுரை காண்க : மாறுத்தரம் .
மான் ஒரு விலங்குவகை ; விலங்கின் பொது ; குதிரை ; சிங்கம் ; மகரமீன் ; மகரராசி ; ஒரு பெயர் விகுதி ; படியாக என்னும் பொருளில் வரும் இடைச்சொல் ; காண்க : மகத்தத்துவம் ; மூலப்பகுதி ; மானுடன் ; பெரியோன் ; மலை ; ஒப்பு .
மான்குளம்பு மானின் பாதம் ; காண்க : அடம்பு .
மான்கொம்பு பாதிரிமரம் .
மான்மகன் காண்க : மான்மைந்தன் .
மான்மதச்சாந்து கத்தூரியாற் செய்த நறுமணக் குழம்பு .
மான்மதச்சேறு கத்தூரியாற் செய்த நறுமணக் குழம்பு .
மான்மதம் கத்தூரி ; சவ்வாது .
மான்மறி மான்குட்டி ; பெண்மான் ; வள்ளிநாயகி .
மான்மியம் பெருமை ; தலப்பெருமையைக் கூறும் நூல் .
மான்முருகு காண்க : மால்முருகு ; துரிசு .
மான்மைத்துனன் சிவபிரான் ; காண்க : மான்முருகு .
மான்மைந்தன் திருமாலின் மைந்தனான மன்மதன் ; நான்முகன் .
மான்றல் மயக்கம் .
மான்றலை மிருகசீரிடநாள் ; அபிநயவகை .
மான்றார் புத்திமயங்கியவர் .
மான்றோல் மானின் தோல் .
மான ஓர் உவமவுருபு .
மானக்கவரி சாமரை ; கவரிமான் .
மானக்குருடன் முழுக்குருடன் .
மானக்குறை பெருமைக்கேடு .
மானக்கேடு பெருமைக்கேடு .
மானகவசன் மானத்தையே கவசமாகத் தரித்தோன் .
மானகீனன் மானங்கெட்டவன் .
மானங்காத்தல் ஒருவன் அல்லது ஒருத்தியின் மானத்தைப் பேணுதல் .
மானசம் மானத்தொடர்பானது ; கருத்து ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் .
மானசி உமை .
மானசிகம் மனத்தாற் செய்யுந் தவம் .
மானசூத்திரம் அரைஞாண் .
மானத்தாழ்ச்சி காண்க : மானக்கேடு .
மானதக்காட்சி ஆன்மா புத்தி தத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு .
மானதபூசை மனப்பாவனையால் வழிபடுதல் .
மானதம் மனத்தால் மந்திரம் நினைத்தல் ; பாவனை ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் .
மானதன் பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் ; மனத்தினின்று தோன்றியவன் .
மானதுங்கன் மானமிக்கவன் .
மானபங்கம் மானக்குறைவு .
மானபரன் தன்மதிப்புள்ளோன் ; அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர் .
மானம் மதிப்புடைமை ; கற்பு ; பெருமை ; புலவி ; வலிமை ; வஞ்சினம் ; கணிப்பு ; அளவு கருவி ; ஒப்புமை ; அளவை ; அன்பு ; பற்று ; இகழ்ச்சி ; வெட்கம் ; குற்றம் ; வானூர்தி ; கோயில் விமானம் ; மண்டபம் ; கத்தூரி ; சவ்வாது ; வானம் ; ஒரு தொழிற்பெயர் விகுதி ; ஓர் இடைச்சொல் .
மானம்பார்த்தபூமி மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம் .
மானமரியாதை மதிப்பு , சிறப்பு .
மானமா காண்க : கவரிமான் .
மானமுறுதல் பார்த்தல் .
மானமூடுதல் உடை முதலியவற்றால் உடலை மறைத்து மானங்காத்தல் .
மானரந்தரி நாழிகைவட்டில் .
மானரியம் விந்தையானது .
மானல் ஒப்பு ; ஐயுறுதல் ; நாணம் ; மயக்கம் .
மானவர் மாந்தர் .