சொல்
|
அருஞ்சொற்பொருள் |
முகமன் | உபசாரச் சொற்கள் ; முகத்துதி ; துதி . |
முகமாதல் | உடன்படுதல் . |
முகமாயம் | முகவழகில் உண்டாகும் கவர்ச்சி . |
முகமாறுதல் | காண்க : முகங்கோணுதல . |
முகமில்வரி | இசைப்பாட்டுவகை . |
முகமுகங்கணோக்குதல் | முகத்தை முகம் பார்த்தல் . |
முகமுகம்பார்த்தல் | முகத்தை முகம் பார்த்தல் . |
முகமுகமாய் | நேருக்கு நேராய் . |
முகமுடைவரி | மூன்றடிமுதல் ஏழடிவரை வரும் இசைப்பாட்டுவகை . |
முகமுறித்தல் | இரக்கமின்றித் துன்புறுத்துதல் ; சினமூட்டுதல் . |
முகமுறிதல் | இரக்கமறுதல் ; மனநோதல் . |
முகமுறிவு | வெறுப்பு ; அருளின்றி நடந்து கொள்ளுதல் . |
முகமுன்னிலை | நேர்முகம் . |
முகமூடி | பிறக்கும்பொழுது குழந்தையின் முகத்தை மூடியுள்ள பை ; முக்காடு ; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை ; முகத்தை மறைக்கும் துணி . |
முகர்தல் | காண்க : முகருதல் . |
முகர்வைத்தல் | முத்திரையிடுதல் . |
முகரதம் | முகத்திற் புணர்கை . |
முகரம் | கடிய ஒலி ; சங்கு ; காகம் . |
முகரன் | பயனில்சொல் சொல்லுவோன் . |
முகராசி | முகக்கவர்ச்சி ; நற்பேறு . |
முகரி | மல்லிகைப்பூ ; தாழைமரம் ; ஆரவாரஞ்செய்வோன் ; முன்புறம் ; தொடக்கம் ; தலைமை ; மூக்கின் அடி ; ஓர் ஆறு ; காண்க : மூரி . |
முகரிமை | பேரறிவு ; தலைமை . |
முகரியோலை | முடங்கின பனையோலை . |
முகருதல் | மூக்கால் மோத்தல் . |
முகரை | மூக்கின் அடி ; காண்க : முகரைக்கட்டை . |
முகரைக்கட்டை | முகம் ; முகவாய்க்கட்டை . |
முகரோமம் | மீசைமயிர் . |
முகவங்கு | முகத்திற் படரும் தேமல் . |
முகவசிகரம் | முகத்தின் அழகு ; பார்வையால் மயக்கும் மாயவித்தை ; முக இரக்கமான பார்வை . |
முகவசியம் | முகத்தின அழகு ; பார்வையால் மயக்கும் மாயவித்தை ; முக இரக்கமான பார்வை . |
முகவட்டு | விலங்கின் தலையணிவகை . |
முகவணை | முகவுரை ; முகப்பு ; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம் ; காண்க : முகவணைக்கல் ; முகவீணை . |
முகவணைக்கல் | வாசலின் மேலுள்ள உத்திரப்படிக்கல் . |
முகவபிநயம் | பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள் . |
முகவரி | மேல்விலாசம் . |
முகவல்லபம் | மாதுளை . |
முகவழி | மூலம் . |
முகவாசம் | வாயிலிடும் நறுமணப் பண்டம் ; வெற்றிலை ; முகப்பழக்கம் ; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை . |
முகவாசல் | தலைவாசல் . |
முகவாட்டம் | முகத்தில் தோன்றும் சோர்வு . |
முகவாய்க்கட்டை | மோவாய் . |
முகவாள் | கலப்பைக்கூர் . |
முகவிச்சகம் | எதிர்நின்று கூறும் புகழ்ச்சிமொழி . |
முகவிச்சை | காண்க : முகத்துதி ; முகவழகில் ஈடுபட்டு உண்டாகிய காதல் . |
முகவியர் | இன்முகமுள்ளோர் . |
முகவிலாசம் | முகப்பொலிவு . |
முகவீணை | ஓர் இசைக்கருவிவகை . |
முகவுரை | முன்னுரை ; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு , மாதம் , நாள் முதலியகுறிப்பு . |
முகவெட்டு | காண்க : முகவசிகரம் . |
முகவெழுத்து | முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம் . |
முகவேலை | காண்க : முகச்சவரம் ; முகப்பில் செய்யப்படும் அலங்காரம் . |
முகவை | முகந்துகொள்ளுகை ; மிகுதியாகக்கொடுக்கும் பொருள் ; நீர் முகக்குங் கருவி ; அகப்பை ; நெற்பொலி ; இராமநாதபுரம் . |
முகவைப்பாட்டு | களத்தில் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட் . |
முகவோலை | அரசர் முதலியோர் எழுதுந் திருமுகம் . |
முகனை | முன்புறம் ; தலைமை ; தொடக்கம் ; முன்கோபம் ; பொழுது . |
முகனைக்கல் | கோயில் முதலியவற்றின் வாசற்காலின் மேல் உள்ள உத்திரக்கல் . |
முகனைக்காரன் | முதலாளி . |
முகாந்தரம் | காரணம் ; மூலம் ; வேறுசெய்தி . |
முகாந்திரம் | காரணம் ; மூலம் ; வேறுசெய்தி . |
முகாம் | சுற்றுப்பயணத்தில் தங்குமிடம் . |
முகாமை | முதன்மை . |
முகாமைக்காரன் | முன்னின்று நடத்துவோன் . |
முகாரி | ஒரு பண்வகை ; காண்க : முகாமைக்காரன் . |
முகித்தல் | முடித்தல் . |
முகிதல் | முடிதல் . |
முகிரம் | அன்பு ; காமம் . |
முகிரன் | காமன் ; மூடன் . |
முகில் | மேகம் ; திரள் . |
முகில்வண்ணன் | மேகநிறம் வாய்ந்த திருமால் . |
முகில்வாகனன் | மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் . |
முகிலூர்தி | மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் . |
முகிவு | முடிவு . |
முகிழ் | அரும்பு ; காண்க : முகிழ்ப்புறம் ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; ஐந்து விரலும் தம்மில் தலைகுனிந்து உயர்ந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தயிர் முதலியவற்றின் கட்டி . |
முகிழ்காங்கூலம் | காங்கூலக் கைவகை . |
முகிழ்த்தம் | காண்க : முகூர்த்தம் . |
![]() |
![]() |
![]() |