முடக்கம் முதல் - முடியுலகு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
முடக்கம் தடை ; அடக்கம் ; கைகால் முடங்குதல் ; வளைவு ; பணமுடை .
முடக்கற்றான் காண்க : முடக்கொற்றான் .
முடக்கறை காண்க : ஏவறை .
முடக்கன் தாழைமரம் .
முடக்கு வளைவு ; நாக்கு ; தெருவின் கோணம் ; விரலணியுள் ஒன்று ; காண்க : ஏவறை ; தடை ; தாமதம் ; சினம் ; வேலையின்மை ; நோய்வகை .
முடக்குச்சரக்கு விலைபடாது முடங்கிக்கிடக்குஞ் சரக்கு .
முடக்குமோதிரம் நெளிமோதிரம் .
முடக்குவாதம் கைகால் உறுப்புகளை முடங்கச்செய்யும் நோய்வகை .
முடக்கொற்றான் ஒரு கொடிவகை .
முடங்கர் ஈன்றணிமையில் உண்டாகும் மெலிவு .
முடங்கல் மடங்குகை ; தடைப்படுகை ; பணம் முதலியன தேங்கிக்கிடக்கை ; காண்க : முடக்குவாதம் ; முள்ளி ; மூங்கில் ; சுருளோலைக் கடிதம் ; சிறுமை ; தாழைமரம் .
முடங்கி நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் ; நிலத்தின் மூலைநீட்டம் .
முடங்கிறை கூடல்வாய் .
முடங்கு முடக்குவாதம் ; தெருச்சந்து ; தெருவளைவு ; நிலத்தின் மூலைநீட்டம் .
முடங்குதல் சுருங்குதல் ; கைகால் வழங்காமற்போதல் ; தடைப்படுதல் ; வளைதல் ; படுத்துக்கொள்ளுதல் ; கெடுதல் ; தங்குதல் .
முடங்குளை பிடரிமயிர் ; பிடரிமயிருடைய சிங்கம் .
முடத்தி முடப்பெண் ; வளைவுள்ளது .
முடத்தெங்கு கோணலாக வளர்ந்த தென்னை .
முடந்தை முடம் ; வளைந்தது ; சூதகக்கட்டு நோய்வகை .
முடம் கைகால் செயலற்றுப்போகும் நிலை ; வளைவு ; வளைந்தது ; ஆடல் , பாடல் முதலியவற்றின் குற்றம் .
முடமயிர் ஒரு புருவமயிர் நோய்வகை ; தொண்டையில் மயிர் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை .
முடமுடெனல் ஒலிக்குறிப்புவகை .
முடலை பெருமை ; வலி ; புலால்நாற்றம் ; உருண்டை ; முறுக்கு ; முருடு ; கழலை ; மனவன்மை ; திரட்சி ; பெருங்குறடு .
முடவன் நொண்டி ; அருணன் ; சனி .
முடவன்முழுக்கு காவிரியில் ஐப்பசிக் கடைமுகத்து நீராடற் பலனை அளிக்கும் கார்த்திகை முதல்நாள் முழுக்கு .
முடவுதல் நொண்டுதல் .
முடி முடிச்சு ; உச்சியில் முடித்தல் ; குடுமி ; மயிர் ; தலை ; உச்சி ; தலையணி ; முடிவு ; நாற்றுமுடி ; பறவைபடுக்குங் கண்ணி ; தேங்காய்க் குடுமி ; தேங்காயிற் பாதி ; காண்க : துளசி .
முடிக்கண்ணி காண்க : முடிமாலை .
முடிக்கலம் கிரீடம் .
முடிக்காணிக்கை தெய்வவேண்டுதலின் பொருட்டு வளர்த்த மயிர்முடியைக் கழித்துக் காணிக்கையாகத் தருதல் .
முடிகவித்தல் காண்க : முடிசூட்டுதல் .
முடிச்சவிழ்க்கி காண்க : முடிச்சுமாறி .
முடிச்சவிழ்த்தல் திருடுதல் ; முடிச்சை அவிழ்த்தல் .
முடிச்சாத்து தலைப்பாகை .
முடிச்சு முடியப்பட்டது ; கண்டறிந்து தீர்த்தற்குரிய தந்திரம் ; முட்டு ; கட்டு ; மயிர்முடி ; சிறு மூட்டை ; கணு : மகளிர் காதணிவகை .
முடிச்சுப்போடுதல் சண்டைமூட்டுதல் ; சம்பந்தப்படுத்துதல் ; இணைத்தல் .
முடிச்சுமாறி திருடன் ; முடிச்சை அவிழ்ப்பவன் .
முடிசாய்த்தல் படுத்துக்கொள்ளுதல் ; வணங்குதல் ; ஒரு பக்கமாய்த் தலையைச் சாய்த்தல் .
முடிசாய்தல் இறத்தல் .
முடிசூட்டுதல் அரசுக்குரிய முடியணிதல் .
முடித்தகேள்வி கரைகண்ட கேள்வி .
முடித்தல் முற்றுவித்தல் ; நிறைவேற்றுதல் ; அழித்தல் ; கட்டுதல் ; சூட்டுதல் .
முடித்துக்காட்டல் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது .
முடித்துக்கொடுத்தல் நிறைவேற்றித் தருதல் .
முடிதரித்தல் காண்க :முடிசூட்டுதல் .
முடிதல் முற்றுப்பெறுதல் ; நிறைவேறுதல் ; அழிதல் ; சாதல் ; தோன்றுதல் ; இயலுதல் ; சண்டைமூட்டுதல் ; சம்பந்தப்படுத்துதல் ; முடிச்சிடுதல் ; சூடுதல் .
முடிதீட்டுதல் வணங்குதல் .
முடிதுளக்குதல் தலையசைத்தல் ; வணங்குதல் .
முடிந்தகணம் நிகழ்காலம் .
முடிந்தகொள்கை முடிவான தீர்மானம் .
முடிந்ததுமுடித்தல் சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் பொதுவாய்பாட்டால் முடித்துக்காட்டும் நூல் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று .
முடிந்தபொழுது முதிர்ந்த பருவம் ; இயன்ற போது .
முடிநடை தலையால் நடக்கை .
முடிநர் கட்டுபவர் .
முடிநாதம் காண்க : இந்திரகோபம் .
முடிநாறு நாற்றுமுடி .
முடிபிசைக்குறி சொற்றொடரின் முடிவைக் காட்டும் முற்றுப்புள்ளி .
முடிப்பு முடிபோடுகை ; முடிச்சு ; கட்டு ; தலையிலணியும் பொருள் : பணமுடிச்சு ; சொத்து ; மொத்தத்தொகை : தீர்மானம் ; முடிவு .
முடிப்புக்கட்டுதல் முடிவுசெய்தல் ; பணமுடிப்புச் சேர்த்துவைத்தல் .
முடிபு காண்க : முடிவு .
முடிபெழுத்து எழுத்துவகைகளுள் ஒன்று .
முடிபொருட்டொடர்நிலை காப்பியம் .
முடிபோடுதல் ஒன்றோடொன்று மாட்டிப் பிணைத்தல் ; கணவன் மனைவியர் ஆவதற்கு விதியமைதல் .
முடிமணி கலைமணி ; சூடாமணி .
முடிமயிர் சேர்த்துமுடித்த தலைமயிர் ; மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடியும் கட்டுமயிர் , இடுமயிர் ; தெய்வத்துக்குக் காணிக்கையாகமழித்து இடும் தலைமயிர் .
முடிமார் முடிப்பவர் .
முடிமாலை தலையில் அணியும் மாலை .
முடிமேலழகி கோடகசாலைப்பூண்டு .
முடிய முழுதும் .
முடியரசன் முடிசூடிய மன்னன் .
முடியல் எல்லாம் .
முடியிறக்குதல் வேண்டுதலுக்காக மயிர்கழித்தல் ; அவமானஞ் செய்தல் .
முடியுயர்தல் அரசு செழித்தல் .
முடியுலகம் மேலுலகம் .
முடியுலகு மேலுலகம் .