சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| முடியுறுப்பு | தாமம் , முகுடம் , பதுமம் , கோடகம் , கிம்புரி என்னும் ஐவகையான மகுட வகுப்புகள் . |
| முடியெடுத்தல் | தலைமயிர் நீக்குதல் ; தலையெடுத்தோங்குதல் ; அவமானஞ் செய்தல் . |
| முடிவறிதல் | நன்றாக உணர்தல் . |
| முடிவாங்குதல் | காண்க : முடியிறக்குதல் . |
| முடிவிடங்கூறல் | தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதிகூறும் இடத்தைக் குறிப்பது . |
| முடிவிலாற்றல் | சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல் . |
| முடிவிலாற்றலுடைமை | சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல் . |
| முடிவினை | ஊழ்வினை . |
| முடிவு | இறுதி ; எல்லை ; தீர்மானம் ; முடிவான உட்கோள் ; நிறைவு ; பயன் ; இசைப் பாகுபாடு ; சாவு . |
| முடிவுகட்டுதல் | தீர்மானித்தல் . |
| முடிவுகாலம் | இறுதிக்காலம் . |
| முடிவுசொல்லுதல் | தீர்ப்புச்சொல்லுதல் . |
| முடிவுபோக்குதல் | நிறைவேற்றுதல் . |
| முடிவுபோதல் | நிறைவேறுதல் . |
| முடிவுரை | நூலிறுதியில் அமையும் கட்டுரை . |
| முடிவெட்டுதல் | மயிர் கத்தரித்தல் . |
| முடிவேந்தர் | முடிசூடிய மன்னர் . |
| முடுக்கம் | விலையேற்றம் ; இறுகல் . |
| முடுக்கர் | குறுந்தெரு ; அருவழி ; தெருச்சந்து ; கோணத்தெரு ; மலைக்குகை ; நீர்க்குத்தான இடம் ; இடைவெளி . |
| முடுக்கன் | வலியோன் . |
| முடுக்கு | விரைவுபடுதல் ; மூலை ; கோணல்தெரு ; மிகுதி ; வலிமை ; ஆணவம் . |
| முடுக்குதல் | விரைவுபடுத்துதல் ; திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல் ; விரைவாகச் செலுத்துதல் ; விரைந்து கடித்தல் ; உழுதல் ; தூண்டிவிடுதல் ; உணர்ச்சிமிகுதல் ; மிகுதல் ; விரைதல் . |
| முடுக்குவழி | ஒடுக்குவழி ; சிறுசந்து . |
| முடுகடி | அண்மை ; விரைவுக்குறிப்பு . |
| முடுகல் | விரைவு ; வலிமை . |
| முடுகியல் | அராகம் என்னும் கலிப்பாவுறுப்பு . |
| முடுகு | முடுகிச் செல்லும் சந்தவகை ; நாற்றம் ; அரக்காற் செய்யப்பட்ட கங்கணம் ; கடமை ; தோணிவகை ; மோதிரவகை ; விலங்கின் பெண் ; விரைவு . |
| முடுகுதல் | விரைந்து செல்லுதல் ; நெருங்குதல் ; வலிமையாதல் ; எதிர்தல் . |
| முடுகுவண்ணம் | அராகந் தொடுத்த அடியோடு பிற அடி சேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம் . |
| முடுத்தார் | மூடுகை . |
| முடுவல் | பெண்ணாய் ; செந்நாய் ; நாய் . |
| முடுவற்படையோன் | நாய்ப்படை உடையவனான வயிரவன் . |
| முடை | காண்க : முடைநாற்றம் ; தவிடு ; குடையோலை ; ஓலைக்குடை ; நெருக்கடி . |
| முடைச்சேரி | முல்லைநிலத்தூர் . |
| முடைசல் | முடைகை ; முடையப்பட்டது ; வெள்ளத்தடுப்பு . |
| முடைஞ்சல் | இடையூறு . |
| முடைதல் | பின்னுதல் ; மெலிதல் . |
| முடைநாற்றம் | புலால் ; தீநாற்றம் ; புளித்தமோர் முதலியவற்றின் மணம் . |
| முடைப்படுதல் | நெருக்கடி உண்டாதல் . |
| முண்டகம் | முள் ; முள்ளுடைத் தூறு ; தாழைமரம் ; தாமரை ; காண்க : நீர்முள்ளி ; கழிமுள்ளி ; கருக்குவாய்ச்சிமரம் ; பதநீர் ; கள் ; கருப்புக்கட்டி ; நெற்றி ; தலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; வாழை ; கடல் . |
| முண்டகன் | பிரமன் . |
| முண்டகாசனி | தாமரையில் இருப்பவளான திருமகள் . |
| முண்டகாசனை | தாமரையில் இருப்பவளான திருமகள் . |
| முண்டம் | தலை ; நெற்றி ; மழித்த தலை ; வழுக்கைத்தலை ; கபாலம் ; உடற்குறை ; உறுப்புக்குறை ; நிரம்பாக் கருப்பிண்டம் ; நிருவாணமான உடல் ; அறிவில்லாதவன் ; திரட்சி ; குற்றி ; காண்க : மண்டூரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; சிவனை வழிபடல் ; புண்டரம் ; பிட்டு ; கணுக்காற்பொருத்து ; மரத்துண்டு ; கட்டி . |
| முண்டன் | மொட்டைத்தலையன் ; கையில் மண்டையோட்டையுடைய சிவபிரான் ; சைவன் ; அமணன் ; நாவிதன் ; இராகு ; வலியவன் ; விடாப்பிடியன் ; கிழங்கின் கடினமான பகுதி . |
| முண்டனம் | தலைசிரைத்தல் . |
| முண்டா | தோள் . |
| முண்டாசு | தலைப்பாகைவகை . |
| முண்டி | மழித்த தலையன் ; நாவிதன் ; நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன் ; காண்க : கல்லுளிமங்கன் . |
| முண்டித்தல் | மொட்டையாய்ச் சிரைத்தல் . |
| முண்டிதம் | மொட்டையடித்தல் ; வரிக்கூத்துவகை . |
| முண்டிதன் | மொட்டைத்தலையன் . |
| முண்டு | முருட்டுத்தனம் ; முனைந்து செய்யும் எதிர்ப்பு ; மடமை ; மரம் முதலியவற்றின் கணு ; திரட்சி ; சிறுகட்டை ; உடற்சந்து ; திமில் ; துண்டுவேட்டி . |
| முண்டுதல் | முரண்டுபண்ணுதல் ; முனைந்து நிற்றல் . |
| முண்டை | கைம்பெண் ; கண்ணின் கருவிழி ; முட்டை . |
| முண்டைக்கண் | வெளியில் பிதுங்கியுள்ள பருத்த கண் . |
| முண்மா | முள்ளம்பன்றி . |
| முணக்குதல் | உள்வளைத்தல் . |
| முணங்கு | அடக்கம் ; சோம்பல்முரிப்பு ; சோம்பு . |
| முணங்குதல் | உள்ளடங்குதல் ; அடங்குதல் ; குரலையடக்கிப் பேசுதல் . |
| முணங்குநிமிர்தல் | சோம்பல்முரித்தல் . |
| முணமுணத்தல் | காண்க : முணுமுணுத்தல் . |
| முணவல் | சினம் . |
| முணவுதல் | வெறுத்தல் ; சினத்தல் . |
| முணுமுணுத்தல் | வாய்க்குட் பேசுதல் . |
| முணை | மிகுதி ; வெறுப்பு . |
| முணைதல் | வெறுத்தல் . |
| முத்தக்காசு | கோரைக்கிழங்கு ; கோரைவகை . |
| முத்தகம் | தனிநின்று பொருள் முடியுஞ்செய்யுள் ; இசைப்பாவகையுள் ஒன்று ; எறியாயுதம் ; குருக்கத்திச்செடி ; கருக்குவாளிமரம் . |
| முத்தங்கொடுத்தல் | காண்க : முத்தமிடுதல . |
| முத்தங்கொள்ளுதல் | காண்க : முத்தமிடுதல் ; பொருந்துதல் ; புல்லுதல் . |
| முத்தண்டு | முக்கோல் . |
| முத்தந்தருதல் | அன்பிற்கறிகுறியாக கன்னம் முதலியவற்றில் முத்தமிடுதல் . |
| முத்தம் | உதடு ; அன்பிற்கறிகுறியாக ஒருவகை ஒலி உண்டாக உதடுகளால் தொடுகை ; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி ; மருதநிலம் ; முத்து ; முத்துக்கொட்டை ; செடிவகை ; மரகதக் குணங்களுள் ஒன்று ; ஆண்குறி : அன்பு ; மகிழ்ச்சி ; யோகாசனவகை ; முற்றம் ; கோரைக்கிழங்கு ; விடுதலை ; கோரை . |
| முத்தமாலை | காண்க : முத்துமாலை . |
|
|
|