சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மெய்ம்மறை | காண்க : மெய்புகுகருவி . |
மெய்ம்மை | உண்மை ; இயற்கையான தன்மை ; சத்து ; பொருண்மை . |
மெய்ம்மையாதல் | உண்மையாதல் ; இயல்பாதல் . |
மெய்ம்மொழி | உண்மையான வாக்கு ; வேதம் ; முனிவரின் வெகுளி அருட்சொற்கள் . |
மெய்மாசு | உடலழுக்கு ; பவ்வீ . |
மெய்யவற்குக்காட்டல்வினா | பிறனை அறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை . |
மெய்யன் | உண்மையுணர்ந்தோன் ; உண்மையாளன் ; முனிவன் ; வேதியன் ; உண்மை புகலுவோன் ; கடவுள் : மகன் . |
மெய்யீறு | மெய்யெழுத்தை இறுதியிலுடைய சொல் . |
மெய்யுணர்தல் | தத்துவஞானம் . |
மெய்யுணர்வு | தத்துவஞானம் . |
மெய்யுரை | நூற்குப் பொருத்தமான உரை ; உண்மைமொழி . |
மெய்யுவமம் | உண்மையையே எடுத்து உவமித்துக் கூறுவது ; வடிவுபற்றி வரும் உவமை . |
மெய்யுறுபுணர்ச்சி | உடலால் கூடுங் கூட்டம் . |
மெய்யுறை | உடலிலிடும் காப்புச்சட்டை . |
மெய்யெழுத்து | உயிரெழுத்திற்கு உடம்பாக இருப்பதான ஒற்றெழுத்து . |
மெய்வலி | உடலின் பலம் . |
மெய்வார்த்தை | உண்மையான மொழி . |
மெய்வாழ்த்து | ஒருவனை வாழ்த்திக் கூறும் பாட்டுவகை . |
மெய்விடுதல் | இறத்தல் . |
மெய்விரதன் | உதிட்டிரன் ; வீடுமன் . |
மெய்விவாகம் | பெற்றோரின் இசைவுடன் செய்து கொள்ளும் திருமணம் ; சட்டப்படியான மணம் . |
மெய்வேறு | தனித்தனியாய் . |
மெய்வைத்தல் | காண்க : மெய்விடுதல் . |
மெருகிடுதல் | பளபளப்பு உண்டாகச்செய்தல் . |
மெருகு | பளபளப்பு ; வெருகஞ்செடி . |
மெருகுமண் | தட்டார் மெருகிடுவதற்கு உதவும் மண்வகை . |
மெருகெண்ணெய் | மரப்பொருள் முதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத் தைலம் ; மினுக்கெண்ணெய் . |
மெருள் | அச்சம . |
மெல் | மிருதுவா . |
மெல்குதல் | மென்மையாதல் ; இலேசாதல் ; காண்க : மெல்லுதல் . |
மெல்கோல் | பற்குச்சி . |
மெல்ல | மெதுவாக . |
மெல்லடை | அப்பவருக்கம் . |
மெல்லணை | காண்க : மெத்தை . |
மெல்லம்புலம்பன் | நெய்தல்நிலத் தலைவன் . |
மெல்லம்புலம்பு | நெய்தல்நிலம் . |
மெல்லரி | உயர்ந்த அரிசிவகை . |
மெல்லி | காண்க : மெல்லியலாள் . |
மெல்லிக்கை | பருமனற்றது . |
மெல்லிசு | காண்க : மெல்லிது . |
மெல்லிசை | மென்மையான ஓசை . |
மெல்லிசைவண்ணம் | மெல்லெழுத்து மிகுந்து வரும் சந்தம் . |
மெல்லிது | மென்மைவாய்ந்த பொருள் ; ஒல்லி . |
மெல்லியர் | வலிமையில்லாதவர் ; உடல் மெலிந்தவர் ; எளியவர் ; இழிகுணமுடையவர் ; பெண்டிர் . |
மெல்லியல் | மென்மையான இயல்பு ; பெண் ; மரத்தின் இளங்கொம்பு . |
மெல்லியலாள் | பெண் . |
மெல்லிலை | வெற்றிலை ; வெற்றிலைக்கொடி . |
மெல்லினம் | மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம் . |
மெல்லுதல் | வாயாற் குதப்புதல் ; கடித்தல் . |
மெல்லெழுத்து | மெல்லோசையுடைய ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் எழுத்துகள் . |
மெல்லென | காண்க : மெல் . |
மெல்லெனல் | மெத்தெனற்குறிப்பு ; குரல் தாழ்ந்துபேசுதற்குறிப்பு ; மந்தக்குறிப்பு . |
மெல்லொற்று | காண்க : மெல்லெழுத்து . |
மெல்வினை | சரியை கிரியைகள் . |
மெலி | காண்க : மெல்லெழுத்து. இளைப்பு . |
மெலிகோல் | கொடுங்கோல் . |
மெலித்தல் | வலிகுறைத்தல் ; உடலை மெலியச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் ; சுரத்தைத் தாழ்த்தல் ; வல்லினத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல் . |
மெலிதல் | வலிமை குறைதல் ; உடல் இளைத்தல் ; வருந்துதல் ; அழிதல் ; எளியதாதல் ; வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறுதல் ; ஓசையில் தாழ்தல் . |
மெலிந்தோன் | நோய் முதலியவற்றால் உடல் மெலிந்தவன் ; வலியற்றவன் ; ஏழை . |
மெலிப்பு | காண்க : மெலித்தல் ; மெல்லெழுத்து . |
மெலியார் | வலியிலார் . |
மெலிவடைதல் | வாடல் ; கலங்கல் ; வலுக்குறைதல் . |
மெலிவித்தல் | கனங்குறைத்தல் ; வாட்டல் ; மிருதுவாக்கல் . |
மெலிவு | வருத்தம் ; தளர்ச்சி ; களைப்பு ; துன்பம் ; தோல்வி ; கொடுமை ; படுத்தலோசை . |
மெலுக்கு | வெளியலங்காரம் ; மென்மை ; விழிப்பு . |
மெலுக்குவை | மென்மை ; விழிப்பு . |
மெழுக்கம் | சாணத்தால் மெழுகிவைத்த இடம் . |
மெழுக்கு | சாணம் ; மெழுகுதல் ; மெழுகும் பொருள் ; மருந்துவகை ; தேனடையின் சக்கை . |
மெழுக்கூட்டுதல் | மேற்பூச்சிடுதல் . |
மெழுகிடுதல் | காண்க : மெழுகுதல் ; மெழுகுகட்டுதல் ; நூலின்மேல் மெழுகு பூசுதல் . |
மெழுகு | அரக்கு ; சாணம் ; மென்மை ; தேனடையின் சக்கை ; பிசின் ; பிசுபிசுத்த தன்மையுடைய மருந்து . |
மெழுகுகட்டுதல் | விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் . |
மெழுகுசாத்துதல் | விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் . |
மெழுகுசீலை | நீர் ஊறாதிருப்பதற்காக மெழுகு பூசின துணி ; நனையாதிருப்பதற்காக மேற்பூச்சிட்ட துணி ; தார்த் தைலமிட்ட கூரைப்பாய் . |
மெழுகுதண்டு | காண்க : மெழுகுவத்த . |
![]() |
![]() |
![]() |